எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். "அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது" என்றார். ஓம் சாய் ராம்
Saturday, March 18, 2017
Friday, March 17, 2017
உன்னை பழக்குவிக்கிறேன்.
நான் குரு என்பதை நீ உணர்ந்து இருக்கிறாயா? குருவின் வேலை மாணாக்கனுக்கு உணவூட்டி, உறங்க வைப்பதா? இல்லையே ! அவனுக்கு பல வழிகளில் பயிற்சி தருவதுதானே!
எனது சோதனைகள் உன்னை அழிப்பதற்காக அல்ல, நடைமுறை வாழ்க்கையை நீ நன்றாக உணர்வதற்காக. இந்த உணர்ந்துகொள்ளுதல் எப்போதும் உள்ளத்தில் இருந்தால், பிற்காலத்தில் இத்தகைய நிலையை நீ சந்திக்க நேர்ந்தால் எச்சரிக்கையாக இருப்பாய். அதற்காக தேர்வுகளை முன்னதாகவே நான் வழங்குகிறேன்.
குழந்தை நன்றாக நடக்கப் பயிற்சி தரப்படுவதைப் போலத்தான் ஒவ்வொரு நபருக்கும் பயிற்சி தரப்படுகிறது. நீயும் இப்போது அந்தப் பயிற்சிக் கட்டத்தில் இருக்கிறாய். நான் உன்னை பழக்குவிக்கிறேன்.
---ஸ்ரீ சாயியின் குரல்
அவதாரம்🙏
எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பக்தர்களுக்காக கைதூக்கி வாழ்த்து கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷீரடியில் நீத்துவிட்டபோதிலும், நகரும், நகராப்பொருள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமர்த்தியம் உடையவர் பாபாவே.
---ஸ்ரீ மத் சாயி ராமாயணம்.
எனது சோதனைகள் உன்னை அழிப்பதற்காக அல்ல, நடைமுறை வாழ்க்கையை நீ நன்றாக உணர்வதற்காக. இந்த உணர்ந்துகொள்ளுதல் எப்போதும் உள்ளத்தில் இருந்தால், பிற்காலத்தில் இத்தகைய நிலையை நீ சந்திக்க நேர்ந்தால் எச்சரிக்கையாக இருப்பாய். அதற்காக தேர்வுகளை முன்னதாகவே நான் வழங்குகிறேன்.
குழந்தை நன்றாக நடக்கப் பயிற்சி தரப்படுவதைப் போலத்தான் ஒவ்வொரு நபருக்கும் பயிற்சி தரப்படுகிறது. நீயும் இப்போது அந்தப் பயிற்சிக் கட்டத்தில் இருக்கிறாய். நான் உன்னை பழக்குவிக்கிறேன்.
---ஸ்ரீ சாயியின் குரல்
அவதாரம்🙏
எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பக்தர்களுக்காக கைதூக்கி வாழ்த்து கூறியவர் தம்முடைய பூதவுடலை ஷீரடியில் நீத்துவிட்டபோதிலும், நகரும், நகராப்பொருள் அனைத்திலும் நிறைந்திருக்கிறார். லீலைக்காக அவதாரம் எடுக்கக்கூடிய சாமர்த்தியம் உடையவர் பாபாவே.
---ஸ்ரீ மத் சாயி ராமாயணம்.
Thursday, March 16, 2017
குருவின் வழிகாட்டுதல்
கேள்வி : நான் பாபாவின் அடியவன். பாபாவை பூஜிப்பதன் மூலமும் அவர் அருளை வேண்டி நிற்பதன் மூலமும் நான் ஒரு குருவின் துணையேதும் இல்லாமலேயே சரியான வழியில் செல்லுவதாக எண்ணுகிறேன். ஆனால் சமீப காலங்களில் நான் படித்த சில புத்தகங்களில் துணைக்கும், வழிகாட்டுதலுக்கும் ஒரு குரு அவசியம் என்பது அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. நான் பெரிதும் குழம்பிப்போய் உள்ளேன். நேரிடையாக பாபாவை வழிபட்டு எனக்கு என்ன தேவையோ அதை நான் பாபாவிடமிருந்து நேரடியாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. ஒரு குரு தேவைதானா என்ற கேள்வி எப்போதும் என் மனதில் இருந்து வருகிறது.
பதில் : மனசாட்சியாக பிரதிபலிக்கும் நமது ஆன்மாவே நம் உள்ளிருக்கும் குரு. குருக்களும், ஞானிகளும் இந்த அந்தராத்மாவில் மாற்றங்களை நிகழ்த்தி தன் பக்தர்களை முன்னேறச் செய்கின்றனர். நீங்கள் செய்வது சரியே. பாபாவைப்பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். அவரையே நினையுங்கள். சத்சங்கத்தில் பங்கு கொள்ளுங்கள். அதாவது தெய்வ பக்தி உடையவர்கள் தங்கள் அனுபவங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளுங்கள். பாபா உங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் போது, ஸ்தூல உடலில் வாசம் செய்யும் ஒரு குரு அவசியமில்லை, மாறாக பாபாவையே பூத உடலில் இருக்கும் ஒரு குருவாகப் பாவித்துக் கொள்ளலாம்.
கேள்வி : ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறுவதற்கு, உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குருவின் வழிகாட்டுதல் அத்யாவசியம் என்று கேள்விப்பட்டேன். இது எவ்வளவு தூரம் உண்மை?
பதில் : உயிருடன் உள்ள குரு வாய்க்கப் பெற்றால் அது நன்றே. உயிருள்ள ஒரு குரு இல்லையென்றாலும் கூட, பாபாவையே வணங்கினால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையலாம் என்பதை நீங்கள் அனுபவத்தால் உணர்வீர்கள்.
ஒவ்வொருவரும் ஒரு குருவைத் தேடி எங்காவது அலைந்து கொண்டேயிருக்கின்றனர். அது அப்படித்தான் இருக்க வேண்டும். ' ஒரு தேனீ ஒவ்வொரு மலராகத் தேனைத்தேடி, பறந்து செல்வதைப் போல சாதகனும் கூட ஒவ்வொரு குருவாக தேடிப்போக வேண்டும் ' என்று குருகீதையில் கூறப்பட்டுள்ளது. என்றாலும், பாபாவை போன்ற சத்குருவை ஒருவர் கண்டுகொண்டவுடன் முழுமனதுடன் அவரையே பின்பற்ற வேண்டும். அனால் எல்லா குருக்களும் சத்குருக்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆத்மாவை பரமாத்மாவுடன் யார் இணைக்க வல்லவரோ, யார் எல்லாச் சூழ்நிலைகளிலும் தன் பக்தனை பாதுகாக்கும் ஆற்றல் உடையவரோ, அவரே சத்குருவாவார். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா பரம சத்குரு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாபாவை போன்ற சத்குருவிடம் சரணாகதி அடைந்துவிட்டால், உயிருடன் உள்ள ஒரு குருவைத் தேடும் அவசியமே இல்லாது போகிறது. பாபாவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது, அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவை போன்ற சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது
Wednesday, March 15, 2017
வாழ்வின் இலக்கை எட்டுங்கள்!
பூத்துக்குலுங்கும் மாமரத்தைக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள். ஒரு பெரும் காற்று வீசியதும் பெரும்பாலான பூக்கள், காயாக மாறாமலேயே உதிர்ந்துவிடும். அதைப்போலவே, நாமும் பரிசோதிக்கப்படும்போது, அந்தக்காற்றில் நம்மில் பெரும்பாலானோர் வீழ்ந்துவிடுகிறோம். உதிராமல் உறுதியாக நிற்பவர்களே, இனிப்பான பழமாக மாறுகிறோம். பாபாவை அடைந்து, வாழ்வின் இலக்கை எட்டுங்கள்.
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி.
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி.
Tuesday, March 14, 2017
தாரை தாரையாய் அழுகிறேன்
நீங்கள் என்னிடம் உருகும்போது நான் தாரை தாரையாய் அழுகிறேன். இந்தக் கிழவனின் கன்னங்கள் ஒட்டிப் போகும் வரை உங்களுக்காக நான் விரதமிருக்கிறேன். உங்களுடைய தேவைகளுக்காக நான் ஓடியாடிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய உணர்வுகளை மதித்து, மரியாதையோடும், உங்களுக்கு கண்ணியக் குறைவு வரக்கூடாது என்பதற்காகவும் நல்ல வழிகளை உருவாக்கிச் செய்து கொண்டிருக்கிறேன்.
சாயி பாபா
Monday, March 13, 2017
சாயி ராம்! சாயி ராம்!
சாயி ராம்! சாயி ராம்! என்று உதடுகளால் சொல்லி உள்ளத்தால் என்னை விட்டு தள்ளி நிற்காதே! நான் உன் உள்ளத்தைப் பிட்சையாகக் கேட்டு நிற்கிறவன். எதற்காக பிச்சை எடுக்கிறேன் தெரியுமா? என் குழந்தை உனக்காக! நீ வெறும் உள்ளத்தை கொடுத்தால் அதை மிகவும் உயர்ந்ததாக, பொக்கிஷம் நிறைந்ததாக நான் உனக்கே திருப்பித் தருவேன்.
—-ஷிர்டி சாயிபாபா
Sunday, March 12, 2017
சாயியின் குரல்
ஓம்ஜெய்சாய்ராம்!
அல்லா மாலிக்!
என் அன்பு குழந்தையே உன் அப்பாவாகிய நான் உன்னை விட்டு எங்கே போவேன் உன் மனதில் ஏற்பட்ட மாறுதல்கள் நீ உணர்கிறாயா அதை உன் செம்மைப்படுத்த நான் செய்கின்ற முதல் தளம் ஓவ்வொரு தளமாக உன்னை செம்மைப்படுத்தி பெருமிதப்படுத்துவேன் உன் கண்ணீர் எல்லாம் உன் சிரிப்பின் முத்துகளாக மாற போகின்றது என்னில் மேலும் உனக்கு நம்பிக்கையும் வேண்டும் உன் கனவில் என் மண்ணில் நீ இருந்தாய் அதற்கான அர்த்தம் என் மண்ணில் நீ நுழைந்து உன் கஷ்ட காலங்கள் முடிவுக்கு வரப்போகும் நேரம் வந்துவிட்டது இந்த நேரத்தில் தான் உன் நம்பிக்கை உறுதி பொறுமையும் சோதிக்கும் படியாக இருக்கும் இந்த நேரத்தை கடக்க நான் உன் நிழலாக இருக்கிறேன் விரைவில் என்னை சந்திக்கும் பேரானந்ததை நீ உணர்ந்து மகிழ்ச்சியின் உச்சியில் அமர வைக்கபோகிறேன் இந்ந ராமா நவமி உன் வாழ்க்கையில் ஆனந்தத்தை ஆறாக பேரருவியாக கடலாக உணரபோகிறாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன் விலகிக் போகும்படி நான் செய்விடுவதும் இல்லை ஏன்னென்றால் நீ என் அன்பு குழந்தை
இப்படிக்கு
உன் சாய் அப்பா
Saturday, March 11, 2017
சாயியின் குரல்
அன்புக்குழந்தையே!
*நான் இல்லாமல் நீ எப்படி தனித்து ஒரு நொடியும் இருக்க முடியாதோ அப்படித்தான் உன்னை பிரிந்தும் என்னால் ஒரு நொடியும் தனித்திருக்க முடியாது.
*என் குழந்தையே உன்னை வலதுகரத்தால் தாங்குகிறேன். கர்மாக்கள் சிறிதும் மீதம் இராமல் நசிந்துவிடும் அளவுக்கு என் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பதால் ஒரு லோபியை போல ஒரு பொக்கிஷமாக இரவு பகலாக உன்னை பாதுகாக்கிறேன்.
* யாரிடம் நீ மனம் விட்டு உன் குறைகளை பகிர்ந்து கொள்கிறாயோ அங்கிருந்து நிவர்த்திக்கான வழிகளை நேர் செய்கிறேன். யாரை தேடி நீ போகிறாயோ அவராகவே நானிருந்து உன்னை வரவேற்று உபசரிப்பேன். எனக்கு பிரியமானவர்கள் உனக்கு ஆசி கூறுவார்கள், அந்த ஆசியை வழங்குவது நானே என்று அறிந்துகொள்.
*சோதனை காலத்தில் உன்னோடு யாரேனும் பயணித்தால் அது நானே. வீட்டில் இருக்கும் சந்தோஷம் தான் மிக பெரியது. அந்த சந்தோஷத்தின் அடிப்படையில் தான் உனது கஷ்டம் நீங்குவதன் வேகமும் இருக்கிறது.
*மனதுக்குள் ஒளிந்திருக்கும் எல்லா கஷ்டங்களையும் அவற்றை அனுசரித்து நீ நடப்பதையும், பிறரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி அவமானபட்டு நிற்பதையும், அநியாயமாக உன் உடைமைகளை பிறர் அபகரித்துக்கொண்டு உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்ததையும், இன்னும் பலர் அப்படி முயற்சிப்பதையும் நான் அறியாமலா இருக்கிறேன்?,
* இனி பொறுக்க மாட்டேன் அந்த துஷ்டர்களை பிரம்பால் அடித்து துரத்துவேன், தப்பு செய்தவர்களுக்கு தண்டனையை தப்பாமல் தந்து உனக்கு நீதியை நான் சரிசெய்யும் நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது................ சாயியின் குரல்🙏🏻
Friday, March 10, 2017
பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக
பாபாவுக்கு பக்தியுடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே.
மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!
மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.
- ஸ்ரீ சாயி இராமாயணம்.
Subscribe to:
Posts (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...