கேள்வி : நான் பாபாவின் அடியவன். பாபாவை பூஜிப்பதன் மூலமும் அவர் அருளை வேண்டி நிற்பதன் மூலமும் நான் ஒரு குருவின் துணையேதும் இல்லாமலேயே சரியான வழியில் செல்லுவதாக எண்ணுகிறேன். ஆனால் சமீப காலங்களில் நான் படித்த சில புத்தகங்களில் துணைக்கும், வழிகாட்டுதலுக்கும் ஒரு குரு அவசியம் என்பது அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. நான் பெரிதும் குழம்பிப்போய் உள்ளேன். நேரிடையாக பாபாவை வழிபட்டு எனக்கு என்ன தேவையோ அதை நான் பாபாவிடமிருந்து நேரடியாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. ஒரு குரு தேவைதானா என்ற கேள்வி எப்போதும் என் மனதில் இருந்து வருகிறது.
பதில் : மனசாட்சியாக பிரதிபலிக்கும் நமது ஆன்மாவே நம் உள்ளிருக்கும் குரு. குருக்களும், ஞானிகளும் இந்த அந்தராத்மாவில் மாற்றங்களை நிகழ்த்தி தன் பக்தர்களை முன்னேறச் செய்கின்றனர். நீங்கள் செய்வது சரியே. பாபாவைப்பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். அவரையே நினையுங்கள். சத்சங்கத்தில் பங்கு கொள்ளுங்கள். அதாவது தெய்வ பக்தி உடையவர்கள் தங்கள் அனுபவங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளுங்கள். பாபா உங்கள் இதயத்தில் வீற்றிருக்கும் போது, ஸ்தூல உடலில் வாசம் செய்யும் ஒரு குரு அவசியமில்லை, மாறாக பாபாவையே பூத உடலில் இருக்கும் ஒரு குருவாகப் பாவித்துக் கொள்ளலாம்.
கேள்வி : ஆன்மீக வளர்ச்சியில் முன்னேறுவதற்கு, உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குருவின் வழிகாட்டுதல் அத்யாவசியம் என்று கேள்விப்பட்டேன். இது எவ்வளவு தூரம் உண்மை?
பதில் : உயிருடன் உள்ள குரு வாய்க்கப் பெற்றால் அது நன்றே. உயிருள்ள ஒரு குரு இல்லையென்றாலும் கூட, பாபாவையே வணங்கினால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையலாம் என்பதை நீங்கள் அனுபவத்தால் உணர்வீர்கள்.
ஒவ்வொருவரும் ஒரு குருவைத் தேடி எங்காவது அலைந்து கொண்டேயிருக்கின்றனர். அது அப்படித்தான் இருக்க வேண்டும். ' ஒரு தேனீ ஒவ்வொரு மலராகத் தேனைத்தேடி, பறந்து செல்வதைப் போல சாதகனும் கூட ஒவ்வொரு குருவாக தேடிப்போக வேண்டும் ' என்று குருகீதையில் கூறப்பட்டுள்ளது. என்றாலும், பாபாவை போன்ற சத்குருவை ஒருவர் கண்டுகொண்டவுடன் முழுமனதுடன் அவரையே பின்பற்ற வேண்டும். அனால் எல்லா குருக்களும் சத்குருக்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆத்மாவை பரமாத்மாவுடன் யார் இணைக்க வல்லவரோ, யார் எல்லாச் சூழ்நிலைகளிலும் தன் பக்தனை பாதுகாக்கும் ஆற்றல் உடையவரோ, அவரே சத்குருவாவார். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா பரம சத்குரு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பாபாவை போன்ற சத்குருவிடம் சரணாகதி அடைந்துவிட்டால், உயிருடன் உள்ள ஒரு குருவைத் தேடும் அவசியமே இல்லாது போகிறது. பாபாவின் கிருபையால் ஏற்படும் எழுச்சியும் விழிப்பும் கண்களுக்குப் புலப்படாது, அது எல்லா இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டது. மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவை போன்ற சத்குருவைத் தவிர இதை அளிக்கக்கூடியவர் வேறெவரையும் காணமுடியாது
No comments:
Post a Comment