ஒருவர்
பற்றற்று தனியாக தீர்த்த யாத்திரை
செய்தால் அவனுக்கு பிரம்மாதி தேவர்கள் வேண்டிய உதவி செய்வார்கள். ஒரு
திவ்ய ஷேத்திரத்தில் மரணம் அடைந்தால் அவன்
சொர்க்கத்தை அடைகிறான்.
ஒருவன் ஒரு புண்ணியத் தலத்தில் உயிரை விடத் தீர்மானித்து
அந்த ஷேத்திரத்தில் நீண்டகாலம்
வாழ்ந்த பிறகு அங்கு ஜீவன் பிரியாமல் சிறிய
பாபத்தின் பலனாய் வேறு இடத்தில் இறந்துவிட்டால்,
அவன் மறு ஜென்மத்தில் காவிரிக்கரையில்
ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்து,சாஸ்திரங்களிலும் வல்லவனாகத் திகழ்ந்து நல்ல ஒழுக்கத்துடன், தெய்வ,
குரு பக்தியோடு வாழ்ந்து இறுதியில் நல்லுலகைச் சேர்வான்.
108 திவ்ய ஷேத்திரங்களில்
ஏதாவது ஒன்றுக்கு யாத்திரை செல்கின்றவன் தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு
கோதானம் செய்கிற பலனை அடைகிறான். ஏதாவது காரணத்தால் பாதியில் வீடு
திரும்பினால் அவன் திரும்பிய ஒவ்வொரு அடிக்கும்
பசுவைக் கொன்ற பாவம் செய்த தோக்ஷத்தைப்
பெறுகிறான்.
ஆதலால்
தீர்த்த யாத்திரை முழுமையாகச் செய்து திருத்தலங்களில் பகவத் தியானத்திலும் பாகவத
சேவையிலும் செலவிட்டு
பிரசாதங்களை பக்தியோடு உண்டு, புண்ணியத்தைப் பெருக்கிக்கொள்ள
வேண்டும். அதனால் அவனுடைய இல்லற வாழ்வில்
செய்த பாபங்கள் அழிகின்றன.
தீர்த்த
யாத்திரை செல்கையில் ஒரு பாவச்செயலைச் செய்தால்
அதற்கு விமோசனமே கிடையாது.
No comments:
Post a Comment