அடியாரால் அழிபவையும் வருபவையும்ஈச னடியார் இதயங் கலங்கிடத்தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசம தாகுமே நந்நந்தி யாணையே. என்பது திருமந்திரப் பாடல்.
இறைவனுடைய அடியார்கள் யாராயினும் அவர்கள் மனம் நோகுமாறு பக்தர் நடக்கக்கூடாது. அவ்வாறு நடப்பது என்பது வலிய கெட்டவைகளுக்கு அழைப்பு விடுவதற்குச்சமமாகும்.
இதை உணர்ந்த அந்த கால அரசர்கள் ஆன்மிகத்திற்கு வழிவிட்டார்கள். தடை ஏதும் செய்யவில்லை. தெரியாதவர்கள்தான் இறை அடியார்களை மனம் நோகச் செய்து வீணே வாழ்வைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.
ஓர் அடியார் மனம் நொந்தால் தேசமும், நாடும் அதன் சிறப்பும் அழிந்துவிடும் என்று திருமந்திரம் கூறுகிறது. தேசம் என்பது இந்தியா என்றால், நாடு என்பது மாநிலம்.
இந்திரனது அரசபோகம் போன்ற சிறப்பு உடையது ஆயினும் அவையாவும் அழிந்து போகும். மன்னரின் சிறப்பும் நாசமாகும். இது சிவபெருமான் மீது ஆணை என்று கூறுகிறது திருமந்திரம்.
அடியார் இதயத்தில் இறைவன் நிறைந்து இருப்பதால் அவர்கள் புண்ணியவான்கள் ஆவார்கள். அவர்களை பூஜிப்பது செல்வம் பெருகும், நல்ல வீடு வாசல் அமையும். பசு பால் பாக்கியம் பெருகும். நோய்கள் அணுக மாட்டா. தர்மப் பலன்கூடி கர்மப்பலன் தேயும். இவை அடியார்களால் வரும் நன்மைகள்.
Powered by Blogger.