பாபாவின் பல் உள்ள கோயில்

இலங்கையில் கண்டி என்ற இடத்தில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, பூனாவில் சிவாஜிநகரில் உள்ள பாபா கோயிலிலும் பாபாவின் பல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தை உருவாக்கியவர் தாமு அண்ணா என்று பாபாவால் அழைக்கப்பட்ட பக்தர். அகமத் நகரில் வசித்த இவர் பூனாவுக்கு தனது குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.
அவரது மகன் நானா சாகிப் பூனாவில் இரண்டு அறைகள் உள்ள ஓர் வீட்டை வாங்கியிருந்தார். இதை 1945-ம் ஆண்டில் வழிபாட்டுத்தலமாக மாற்றினார்.  பாபாவின் படத்தை அங்கு வைத்து வழிபாடு செய்து வந்தார்கள். நாளடைவில் கூட்டம் பெருகியதை அடுத்து அருகிலேயே கோயில் உருவானது.
கேட் என்ற இடத்தில் காவல்துறையில் வேலை பார்த்துவந்த நிக்காம் என்பவரை நானா சாகேப் வேலையிலிருந்து வருமாறு கேட்டுக்கொண்டார்.  அவரிடம் கோயில் பொறுப்பை ஒப்படைத்தார்.
ஒருநாள் நிக்காமின் கனவில் பாபா தோன்றி, என்னுடைய பல் ஒன்று நிப்பாட் என்ற இடத்தில் வாழும் மாதவ ராவிடம் உள்ளது, அதை வாங்கி வந்து கோயிலில் வைத்துக்கொள் என்று கூறினார்.
அவ்வாறே, மாதவ ராவ் கனவில் தோன்றிய பாபா, பூனாவிலிருந்து வரும் பக்தரிடம் பல்லைக்கொடுத்து அனுப்பு என்று கூறினார்.
இதனால் பக்தரின் வருகையை எதிர்நோக்கி மாதவ ராவ் காத்துக் கொண்டிருந்தார். நிக்காம் வந்து தனது கனவை மாதவ ராவிடம் சொன்னதும், அவர் அதிர்ச்சியடைந்தார். தனது கனவிலும் பாபா இதே தகவலைகூறியதைத் தெரிவித்து,  பல்லை அவரிடம் ஒப்படைத்தார்.
1950  ம் ஆண்டு இந்தப் பல்லையும் பாபா போட்டோவையும் அந்த ஆலயத்தில் தமிழகத்தை சேர்ந்தவரும், ஒப்பற்ற சாயி பக்தருமான பூஜ்ய குரு நரசிம்ம சுவாமிஜி ஸ்தாபிதம் செய்து வைத்தார். இவற்றுடன் பாபா புகைப்பிடிக்க பயன்படுத்திய சில்லிம் குழாயும் வைக்கப்பட்டது.

தகவல்: கே. குமார், சென்னை – 5

Powered by Blogger.