விதண்டா வாதம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
( வி. சுமித்ரா, மதுரை-2)
நாம் என்ன சொன்னாலும் கேட்காமல்
தான் பிடித்ததையே வலியுறுத்திப் பேசுபவர்களை விதண்டாவாதம் செய்பவர்கள் என்கிறோம்.
விதண்டா வாதம் என்றால் என்ன தெரியுமா? சாஸ்திரங்களில்
கூறப்பட்டுள்ள சர்ச்சை பற்றிய விதிகள் மூன்று. அவை ஜல்பம், விதண்டா, வாதம் ஆகியவை. ஒரு விக்ஷயத்தைப் பேசும்போது, அதில் நியாய தர்மம் இருக்கிறதா,
நியாய தர்மத்திற்கு
ஏற்றதா என்பதைப் பொருட்படுத்தாமல் தனது கட்சிக்கு வலுவூட்டப் பேசுவதும், எதிர்கட்சியைக் கண்டித்துப் பேசுவதும் ஜல்பம். எதிர் தரப்பை கண்டிப்பதற்கு
மட்டும் பேசுவது விதண்டா. தன் தரப்பு, எதிர்தரப்பு
என்று பேதம் பார்க் காமல் உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு நியதிக்குள் கட்டுப்பட்டு
செய்யப்படும் சர்ச்சைக்கு வாதம் என்று பெயர்.
விதண்டா வேறு, வாதம் வேறு என்பது தெரிகிறதா?
No comments:
Post a Comment