எப்போதும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்திப் பேசுகிறீர்கள்.
இதற்கும் ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு?
(கே. சங்கர், கீழ்க்கட்டளை, சென்னை)
பகவான் ஸ்ரீ
கிருஷ்ணர் திறமை, வெற்றி, தீர்மானிக்கிற திறன், சத்வகுணம் ஆகியவற்றை தனது வடிவங்களாகக் குறிப்பிடுகிறார். இந்த நான்கு
பண்புகளும்தான் ஒருவனை இறைவனிடம் சேர்ப்பிக்கிறது. திறமையில்லாதவனிடம் நிலையற்ற
மனம் இருக்கும். தீர்மானிக்கத் தெரியாதவன் குழப்பவாதியாக இருப்பான். வெற்றி பெறத்
தகுதியற்றவனிடம் தன்னம்பிக்கை இருக்காது. சத்வ குணம் இல்லாதவன் மனதில் அமைதி
யிருக்காது. இவை அனைத்தும் இருந்தால் இறைவனை அடையலாம் என்பதாலேயே நான் இவற்றை
வலியுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment