பாபா அளிக்கும் படிப்பினை
பாலாபுவா சுதார் என்ற பெயர் கொண்ட பம்பாயைச் சேர்ந்த பக்தர்
ஒருவர்,பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்குச்
சென்றார்.
அதுதான் அவருடைய முதல் தரிசனம்.அவர் அதற்கு முன்பு சாயியை தரிசனம் செய்ததில்லையெனினும்,அவரைப் பார்த்தவுடனே பாபா மிகத் தெளிவாகச் சொன்னார்,
"இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்".
பாபா எப்படி இவ்வாறு சொல்கிறார்,என்றெண்ணி பாலாபுவா வியப்படைந்தார். பாபா சீரடியை விட்டு எங்கும் வெளியே போனதில்லை. நானோ சீரடிக்கு வருவது இதுதான் முதல் தடவை. பாபாவுக்கு எப்படி என்னை நான்கு ஆண்டுகளாகத் தெரிந்திருக்க முடியும்?
இதுபற்றித் திரும்ப திரும்ப யோசித்தப்பின், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு
பாபாவின் நிழற்படத்தை ஒருமுறை நமஸ்காரம் செய்தது பளீரென்று ஞாபகத்திற்கு வந்தது.
பாலாபுவாவுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த சத்தியம் விளங்கியது.
பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் பக்தர்களின்மேல் அவருக்கு இருக்கும்
தாயன்பும் புரிந்தது.
இன்றுதான் பாபாவின் உருவத்தை முதன்முறையாகக் காண்கிறேன். நான் நமஸ்காரம் செய்தது அவருடைய நிழற்படத்திற்கே.
அதுபற்றி நான் எப்பொழுதோ மறந்துவிட்ட போதிலும்,பாபா என்னை அடையாளம் கண்டுகொண்டார்!
ஆகவே பாபாவின் நிழற்படத்தை தரிசனம் செய்வது அவரைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்வதற்கு சமானம்.
அனைத்தையும் இயல்பாகவே அறியும்
பாபா நமக்கெல்லாம் அளிக்கும் படிப்பினை இதுவே.
நன்றி
No comments:
Post a Comment