திரு.
பி.வி.தேவ்.(ஓய்வு பெற்ற தாசில்தாரர், ஸ்டேஷன் ரோடு, தானே , மும்பை)
டிசம்பர் 13. 1936
தொழுநோய் (அது வம்சாவளியாக வந்ததோ, தொத்திக் கொண்டதோ எதுவாயினும் சரி), பார்வையின்மை, காது கேளாமை, வாத நோய், பேய் பிடித்திருப்பது, செய்வினை, சூன்யம் போன்றவற்றின் விளைவுகள் ஆகியவற்றை போக்குதல், தீய வேசிகள், இதர பாபிகள் ஆகியோரை தூய்மைப் படுத்துதல் போன்றவற்றில் சாயி பாபா, இயேசு கிறிஸ்துவைப் போலவே நடந்து கொண்டாரா எனபது பற்றி, நான் துல்லியமான விவரங்களை நான் அறியேன். ஆனால், தீய குணத்தை போக்குவதில், பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. என் விஷயத்தையே எடுத்துக்கொள்வோம்; லோபம் அல்லது பொருளாசையைக் கண்டித்தார். இதன் முழு விவரத்தையும் கூறுகிறேன்.
என் உத்தியோக காலம் முழுமையாக நிறைவடைந்த பின்னரும், எனக்கு முன்று மாத கால நீடிப்பு அளிக்கப்பட்டது. எனக்கென்னவோ ஓராண்டு கால நீடிப்பு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. கலெக்டர் இந்த விஷயத்தை விசாரித்தபோது நான் மேலும் ஓராண்டு பணியாற்ற விரும்புவதை அவரிடம் தெரிவித்தேன். இவ்வாறாக இவ்விஷயம் தீர்மானிக்கப்பட்டு, எனக்கு ஓராண்டு பணி நீடிப்புக் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் ஒரு கனவு கண்டேன். சாயி பாபா யாருடனோ அமர்ந்திருக்கிறார். அவர் முன் நான் விழுந்து வணங்குகிறேன்.
பாபா: அந்த
புத்தகங்கள் என்ன என அறிவாயா?
நான்: தெரியாது
பாபா: அவை உன்
கணக்குகள், நான் அவற்றை
பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான்: என் கணக்கா, பாபா?
பாபா: ஆம். இங்கே
உள்ளன அவை. இங்கே பார். நெ.17, நெ. 16க்குப் பின் வருமா?
நான்: நெ.16 முதலில் வரும், 17-க்குப் பின் அல்ல.
பாபா: அப்படியானால் உன் கணக்குகளில் 17-க்குப் பிறகு 16 வருவதெப்படி?
நான்: அது எப்படி சாத்தியம், பாபா?
பாபா: அப்படியானால் உன் கணக்குகளில் 17-க்குப் பிறகு 16 வருவதெப்படி?
நான்: அது எப்படி சாத்தியம், பாபா?
பாபா: பாபா, பார். இதோ உன் கணக்கு.
அவர் கணக்குப்
புத்தகத்தை தூக்கி எறிகிறார். அதைப் படித்ததில் அது என்னுடைய கணக்குத் தான் என
தெரியவந்தது. 'ஆம். பாபா.
இதோ 17-க்குப் பின் 16 வருகிறது. அது எப்படி?' பின்னர் கனவைப் பற்றி சிந்தித்துப்
பார்த்தேன். முடிவுக்கு வந்தேன்.
- ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர் அனுபவங்கள்.
நன்றி
No comments:
Post a Comment