Saturday, October 26, 2013

பக்தர்களின் அனுபவங்கள்

பக்தர்களின் அனுபவங்கள்

ஏழு ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தலைவலியுடன் பாபாவின் பக்தை வந்து பாபாவின் முன் அமர்ந்தார்.

பாபா: (அம்மாதின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக்
             
கொடுத்து) உங்களுக்கு தலைவலி இல்லையா?

பக்தை : இருந்தது. இப்போது நின்றுவிட்டது.
               (
தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது).

பாபா: இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்.

பக்தை: நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.

பாபா: சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பக்தை குழப்பமடைந்தார்.

பாபா: உங்கள் வீட்டில் என்ன பூஜை.

பக்தை: கணபதி பூஜை.

பாபா: உங்கள் தாயார் வீட்டில்?

பக்தை: கணபதி. நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும், பழங்களும், தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.

பாபா:அவை எல்லாம் என்னை வந்தடைந்தன. ஆகவே நீங்கள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.

பக்தை : பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால் அந்த சிலை  தூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர். அது சரிதானா?

பாபா: உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி  எறிவீர்களா? அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்.


நன்றி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...