அப்துல் ரஹீம் ஷம்சுதீன் ரங்காரி - செப்டம்பர் 11, 1936.
1913-ல் என் ஷிர்டி விஜயத்தின் போது.
பாபா : நீ எங்கிருந்து வருகிறாய்?
நான் : தானா
பாபா : எதற்காக?
நான் : என் மனைவிக்கு தொண்டையில் வீக்கம், முதலியன.
பாபா : அவளை மசூதிக்குள் வரச்சொல்.
நான் அவளை மசூதிப் படிகளில் ஏற்றி அழைத்து வந்தேன். அவள் பாபாவை வணங்கினாள். அவர் அவள் கையைத் தொட்டு, "குதா அச்சா கரேகா" (அதாவது கடவுள் நன்மை செய்வார்) எனப் பகன்றார். அவர் கேட்காமலேயே நான் அவரிடம் ரூ.1-4-0 அளித்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு ஊதி வழங்கினார். அதன் பின்னர் 2 மணி நேரம் தங்கினேன். என் மனைவியின் வீக்கம் விரைவாக வடிந்து கொண்டிருந்தது.
மேலும் அவர் சொன்னார்: நீ நேற்று வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நான் : ஏன்?
பாபா : சங்கீர்த்தனம் நடந்தது. இரவு முழுவதும் நான் அழுதேன். அவர்கள் என் மீது வசை பாடினார்கள்.
நான் : ஏன் அவர்கள் தங்கள் மீது வசை பாடவேண்டும்?
பாபா : நான் "வசை பாடினார்கள்" என்று சொன்னால் மக்கள் புரிந்துகொள்வதில்லை. ஆனால் நீ புரிந்துகொள்வாய்.
நான் : "வசை பாடினர்" என்றால் உண்மையில் புகழ் பாடினர் என நான் எண்ணினேன்.
(சில மகான்கள் புகழ்ச்சியை இகழ்ச்சி எனப் பேசுவதன் மூலம் அதை தாங்கள் பொருட்படுத்துவதில்லை என்பதை காண்பிக்கின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள பஜனையில், முழுவதுமே பாபாவை உயர்வாக புகழ்ந்து பாடியிருக்க வேண்டும்; அதை இகழ்ச்சி போலவே பாவித்து அவர் அதை பொருட்படுத்தாமலிருந்திருக்க வேண்டும். மேலும் இந்த புகழ் மாலையில், பகவானிடம் இறங்கச் செய்யத்தக்க பிராத்தனைகளுடன் நெஞ்சை உருக்கும் இன்னிசை கலந்து விடும். அதனால் பாபா அழுவார்).
நான் : கடவுளை துதித்து பாடும்போது, ஆண்டவனிடம் பக்தி செலுத்துபவன் அழுவான், சிரிப்பான் அல்லது கூத்தாடுவான்.
பாபா : அதேதான். நீ சொன்னது சரி. உனக்கென ஒரு குரு உள்ளாரா?
நான் : ஆம். ஹபீ பலீஷா சிஸ்தி நிஜாமி.
பாபா : அதனால் தான் உன்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நான் ஷீரடிக்கு செல்வதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே சமாதியடைந்து விட்ட என் குரு வெளியே செல்லும் போதெல்லாம் இன்னிசையும் பின் தொடரும் என்பதை நான் நினைவு கூர்ந்தேன். - ஸ்ரீ சாய்பாபா பக்தர் அனுபவங்கள்.
நன்றி
மூலம்: http://www.shirdisaibabasayings.com
No comments:
Post a Comment