Friday, February 8, 2013

படித்ததில் பிடித்தது

சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்து விடலாமா அல்லது மறுமுறை பூ வைக்கும் போது தான் எடுக்க வேண்டுமா?

          சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்துவிடலாம்.  தூய்மையும் நமது வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்கு தகுந்தாற்போல் அடுத்த முறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம்.

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

யாரேனும் ஏதாவது தீமையை உங்களுக்கு செய்வானாகில் அதற்காகப் பழிக்குப்பழி வாங்காதீர். நீங்கள் ஏதேனும் செய்ய முடியுமானால் பிறருக்கு சிறிது நன்மைகளைச் செய்வீராக.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Thursday, February 7, 2013

படித்ததில் பிடித்தது

பிரதோஷ வேளையில் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. அப்போது வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா?

          பிரதோஷ வேளையில் வழிபட கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க இயலாத நிலையில் வீட்டில் இருந்தே வழிபடுங்கள்.

          பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாய நம, நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம்.  தேவார திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

என் பால் கவனத்தை திருப்புபவனை எந்தத் துன்பமும் அணுகாது.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Wednesday, February 6, 2013

படித்ததில் பிடித்தது

ஆடம்பர பக்தி. எளிய பக்தி….இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்?

          விருப்பு வெறுப்பினைக் கடந்தவர் கடவுள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு அவருக்கு கிடையாது. பக்தி என்பது அவரவர் மனதினைப் பொறுத்த விஷயம்.  ஆடம்பரமாய்ச் செய்தால் பலன் அதிகம் என்றோ, எளிமையாகச் செய்தால் பலன் குறைவு என்றோ எண்ணத் தேவையில்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு தேவை.

மன்னர் கட்டிய கோயிலை விட பூசலார் நாயனார் கட்டிய மனக் கோயிலினையே சிவன் விரும்பி ஏற்றுக்கொண்டதாக பெரிய புராணம் சொல்கிறது.  பொருளாதாரம் ஆரம்பித்தால் ஆடம்பரமாக வழிபடுங்கள்.  இல்லாவிட்டால் எளிமையாக வழிபடுங்கள். எதுவானாலும் உள்ளன்போடு  செய்தால் இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்.

என் வாக்குகள் பொய்யாவதில்லை

என் வாக்குகள் பொய்யாவதில்லை

ஸ்ரீ சாயியின் அமுத மொழிகளை விடாமல் நினைவு கூர்ந்து நாமஸ்மரணை செய்வீர்களேயானால் உங்களது மனதை வருத்தும் கவலைகள், அல்லல் மற்றும் அவஸ்தைகள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது சத்தியமான உண்மை. சதாசர்வகாலமும் சாயி சாயி என்று உச்சரித்து அவரது திருவடிகளை பரிபூரணமாக சரணடையுங்கள், நினைத்தது நிறைவேறும் இனி அவரது வாக்குறுதிகளை தினம் ஒன்றாக இங்கே பார்க்கலாம்.

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன்,காப்பவன், அழிப்பனுமாவான்.

 ஸ்ரீ சாயியின் வாக்குறுதிகள் சத்தியமானவை, அவைகளை முழு மனதோடு நம்பிப் பொறுமையாக பின்பற்றினால் எல்லா நலனும் பெறுவீர்கள்,  இந்த ஆண்டு முதல் உங்கள் வாழ்க்கை வளமாவதற்க்கு நீங்கள் இந்த வாக்குறுதிகளை உங்களுக்கு உரியதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்.

ஜெய் சாய்ராம்

Tuesday, February 5, 2013

காதினைத் திருகலாம்…கயிற்றால் கட்டலாம்

          குழந்தைக் கண்ணன் கடுமையான சேட்டைகள் செய்து கொண்டு இருந்தான்.

          ”ஏன் உபத்திரவம் செய்கிறாய்?” என்று கண்டித்த யசோதை. அவனது காதை திருகினாள்.  உரலில் பிணைத்துக் கட்ட கயிரினைத் தேடிப்போனாள். அவள் வரும் வரை ஆடாமல் அசையாமல் அங்கேயே கண்ணன் நின்றுக் கொண்டிருந்தான். அவனைக் கட்டும் போது கயிற்றினை முடிச்சு போட முடியாமல்  யசோதை தவித்தாள்.  ஆயர்பாடியில் உள்ள அத்தனை பேர் வீட்டில் இருந்தும் கயிற்றினை எடுத்து வந்தும் அவனைக் கட்ட முடியவில்லை. அவனைக் கட்ட இன்னும் ஒரு கயிறு தான் பாக்கி. அதுதான் அங்குள்ள பெண்களின் தாலிக் கயிறு. அதை யாராவது தருவார்களா என்ன!

          அம்மா திணறுவதைப் பார்த்த கண்ணனுக்கே ஒரு மாதிரியாகி விட்டது. அங்கிருந்த ஒரு கயிற்றினைப் பார்த்து , “நீ என்னைக் கட்டு” என்று மனதுக்குள் உத்தரவு போட்டான். உடனே அந்தக் கயிற்றினை எடுத்து வந்து யசோதா கண்ணனைக் கட்டிப் போட்டாள். முடிந்தது கண்ணனின் லீலை.

          பக்தி என்று வந்துவிட்டால், தன் காதினைத் திருகவும், கயிற்றினால் கட்டவும் கூட பரமன் அனுமதிக்கிறான். கண்ணனின் இந்த எளிமையினைப் பற்றி படித்த நம்மாழ்வாருக்கு மயக்கமே வந்துவிட்டது. மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிய ஆறு மாதமானது. விழித்தவர் மீண்டும் மயங்கி விட்டார். இப்படி நம்மாழ்வார் கண்ணன் கயிற்றால் கட்டுண்ட கதையினை நினைத்து பதினெட்டு மாதம் நம்மாழ்வார் மயக்கத்தில் கழித்தார் என்று சொல்வர்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...