Wednesday, December 4, 2013

நமது சிந்தனைக்கு – சாயிசரித்திரத்திலிருந்து-2


      'நான் அது இல்லை; அது நான் இல்லை; பர பிரம்மத்தி­ருந்து நான் வேறுபட்டவன்’ என்ற பேதபுத்தி எவனுக்கு இருக்கிறதோ அவன் எப்பொழுதுமே மரணத்தின் பிடியில் வாழ்கிறான். 
      பிறப்பை இறப்பு தொடர்கிறது; மறுபடியும் பிறவி ஏற்படுகிறது. ஜனனமரணச் சக்கரம் அவனை முடிவேயில்லாமல் விரட்டுகிறது. 
பெருமுயற்சி எடுத்துச் செய்யவேண்டியவையான யாகமும் தவமும் தானமும் அளிக்கக்கூடிய சொர்க்கத்தில், ஸ்ரீமன் நாராயணனை நினைப்பதற்கு வாய்ப்பில்லையெனில், அந்த சொர்க்கத்தினுள் புகுவதில் அர்த்தம் என்னவோ.
      கேவலம் சுகபோகத்தை மட்டும் அளிக்கும் இடமாக இருந்தால் நமக்கு சொர்க்கம் வேண்டா. எங்கு கோவிந்த நாம சங்கீர்த்தனம் இல்லையோ அவ்விடத்தில் நமக்கென்ன வேலை? 
      சொர்க்கத்திற்குப் போனாலும் நரகத்திற்குப் போனாலும் இன்பதுன்ப அனுபவங்களில் பேதம் ஏதுமில்லை. இந்திரனானாலும் கழுதையானாலும் புலனின்ப அனுபவம் ஒன்றுதான். 
      இந்திரன் நந்தவன சுகத்தில் புரள்கிறான்; கழுதை குப்பைமேட்டு சுகத்தில் புரள்கிறது. ஆனாலும், சுகம் என்ற நோக்கில் பார்க்கும்போது இரண்டிற்கும் சிறிதளவும் பேதம் இல்லை. 
        புண்ணியக் கணக்கு தீர்ந்தவுடன் எங்கிருந்து கீழே விழுந்துவிடுவோமோ, அங்கே செல்வதற்கு எக்காரணத்திற்காகப் பிரயத்தனம் செய்யவேண்டும்? 
         ஒரு கல்பகாலம் வாழக்கூடிய பிரம்மலோகத்திற்கு என்ன பெருமை? அற்ப ஆயுளாக இருப்பினும் பூலோக வாழ்க்கையே சிறந்ததன்றோ. குறுகிய ஆயுளாக இருந்தபோதிலும், ஈசுவர அர்ப்பணமாக ஒருகணம் வினையாற்றினாலும் அபயம்  கிடைக்கிறது. ஹரியின் கதையையும் குருவின் கதையையும், வர்ணித்தும் ஆடியும் பாடியும் இறைவனைத் தொழும் பக்தர்கள் இல்லாத இடம் எதற்கு உபயோகம்?
 
முழுமுதற்பொருளும் ஆத்மாவும் ஐக்கியமானவை என்ற விஞ்ஞானமே, என்றும் அழியாத உன்னதமான பேற்றை அளிக்கக்கூடியது. இதைப் பெறுவதற்கு விண்ணில் இருக்கும் சொர்க்கத்தைவிட பூலோகமே சிறந்த இடம்.
 
       உடலாலும் வாக்காலும் மனத்தாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும் பணிவுடனும் குருவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்.
 
      இவ்வாறு குருவிடம் சரணடைந்த பிறகு சம்சார பயம்பற்றிப் பேச்சுண்டோ? மொத்தமாகக் களைந்துவிட அவர் இருக்கும்போது, உலகவாழ்வின் விசாரங்களைப்பற்றி என்ன விசாரம். மாயையும் அஞ்ஞானமும் எங்கு வாசம் செய்கின்றனவோ, அங்கே பிள்ளைகுட்டிகளையும் மாடுகன்றுகளையும்பற்றிய பாசமும் உலகவாழ்வுபற்றிய கவலைகளும் இரவுபகலாக ஓய்வின்றி இருக்கும். நல்ல விஷயங்களைப்பற்றிய சிந்தனை சிறிதளவும் இராது.
 

Tuesday, December 3, 2013

நமது சிந்தனைக்கு - சாயி சரித்திரத்திலிருந்து-1









      சொர்க்கத்தின் மஹிமையைத் துதிபாடுபவர் பலர் சொர்க்கத்திற்காகப் போராடுகின்றனர். அவர்கள் பூலோகத்தை மரணபீதி உள்ள இடம் என்று துச்சமாக மதிக்கின்றனர்.  அவர்களும் உருவமற்ற நிலையி­ருந்து உருவமுள்ள நிலைக்கு மாறியவர்கள்தாம். உருவநிலையி­ருந்து அருவநிலைக்குள் மறுபடியும் புகுவதற்கே மரணம் என்று பெயர்.  அதர்மம், அஞ்ஞானம், ஆசை, துவேஷம், இத்தியாதிகள் மரணத்தின் பாசக்கயிறுகள். இவற்றை மிச்சம்மீதி இல்லாமல் தாண்டக்கூடியவனே சொர்க்கத்தின் உள்ளே நுழையமுடியும். 
சொர்க்கம், சொர்க்கம் என்றால் என்ன? ஆசைகளையும் ஏக்கங்களையும் துறப்பதும், வ­களையும் துக்கங்களையும் கடந்த, பிரபஞ்சத்துடன் ஒன்றிய, ஆத்ம சொரூபத்திலேயே லயிப்பதுமே சொர்க்கம் அன்றோ?
 
       வியாதிகளுக்கும் கவலைகளுக்கும் இன்னல்களுக்கும் எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும் தாகத்தாலும் முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவதில்லையோ,  எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் நிர்ப்பயமாக உலவுகின்றனவோ, அவ்விடமே தெய்வீகமான சொர்க்கம் என்று அறிக. 
பிரம்மதேவரி­ருந்து புல்பூண்டுகள்வரை நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் தத்துவம்தான், நாம் இவ்வுலகத்தில் வாழும்போதும் மரணத்திற்குப்பின் மேலுலகத்திலும் எந்தவிதமான பேதமுமின்றி நம்மில் நிறைந்திருக்கிறது.
 
       ஆனாலும், அஞ்ஞானத்தில் மூழ்கிய மனிதன் சம்சார பந்தத்தி­ருந்து விடுபட்ட பின்பும், பலவிதமான உபாதிகள் அவனைப் பின்தொடர்வதால் இந்தத் தத்துவத்தை முழுமுதற்பொருளாகக் காண்பதில்லை.


Monday, December 2, 2013

சாயியின் சரித்திரம்

       சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை.   அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது; பிழைக்கும் வழி பாக்கியம் அளிப்பது; நடைமுறையோ கத்திமுனையில் வேகமாக நடப்பதற்கு ஒப்பானது. 
சிலசமயங்களில் பிரம்மானந்தத்தில் மூழ்கிய உன்மத்த நிலை; மற்றசமயங்களிலோ போதனை செய்வதில் திருப்தி, சிலசமயங்களில் எல்லாவற்றையும் செய்துவிட்டு எதிலுமே பட்டுக்கொள்ளாத தன்மை; எதையுமே நிச்சயமாகச் சொல்லமுடியாத நிலை.
      சிலசமயங்களில் செயல் ஏதும் இல்லாத சூனியநிலை; ஆயினும் தூக்கமா என்றால் அதுவும் இல்லை. தம்முடைய நன்மை கருதி ஆத்ம சொரூபத்திலேயே மூழ்கியிருப்பார்.  சிலசமயங்களில், கரையில்லாததும் கடக்கமுடியாததும் அளக்கமுடியாததும் ஆழமானதுமான சமுத்திரத்தைப் போல் சந்தோஷமாக இருப்பார். இக் கற்பனைக்கெட்டாத ரூபத்தை யாரால் யதார்த்தமாக வர்ணிக்கமுடியும்? 
      ஆண்களை உறவினர் போலவும் பெண்களைத் தாயாகவோ சகோதரியாகவோ அவர் நடத்தினார். அவர் ஒரு பிரம்மசாரி என்பதும் ஊர்த்துவரேதஸர் (மேல் நோக்கியே செல்லும் விந்து உடையவர்) என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 
     அவருடைய ஸத்சங்கத்தால் விளைந்த நன்மதி உறுதியாகவும் ஆடாதும் அசையாதும் மரணபரியந்தம் நிலைக்கட்டும். சேவை மனப்பான்மை ஓங்கி வளரட்டும். அவருடைய பாதங்களில் அனன்னிய பக்தி செழிக்கட்டும். அவருடைய நாமத்தில் அகண்டமான பிரீதி உண்டாகட்டும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காணும் பாவம் விருத்தியாகட்டும்.
     ஒன்றைவிட மற்றொன்று அற்புதமான அவருடைய லீலைகளைப் 

பார்த்துவிட்டுக் காரணத்தை ஆராய விரும்பியவர்கள், கடைசியில், 

புத்திக்கெதுவும் எட்டாதுபோய் வழியிலேயே சப்பணம்போட்டு 

உட்கார்ந்துவிட்டனர்.



Sunday, December 1, 2013

சாயி சரித்திரத்தில் சொல்லப்படும் கதைகள்





இவை வெறும் கதைகளன்று; ஆத்மானந்த தீர்த்தம். குடித்தால், மேலும் குடிக்க வேண்டுமென்கிற ஆவல் பெருகும். அதைத் தணிக்க இன்னும் ஒரு கதை சொல்லப்படும். ரஸமான இக் கதையைக் கேட்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சம்சாரக் கட­ன் சிரமங்கள் நிவாரணமடையும். சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.  தன்னுடைய நல்வாழ்வை விரும்பும் பாக்கியசா­யான மனிதன், ஸாயீயின் கதைகள் சொல்லப்படும்போது பயபக்தியுடன் கேட்கவேண்டும். 
 ஞானிகளின் மஹிமை அளவிடற்கரியது; எவராலும் முழுமையாக விவரிக்க முடியாதது. நிலைமை இவ்வாறிருக்க, என்னுடைய புலமை எந்த மூலைக்குப் போதுமானது? இதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். 
 கதை சொல்பவரின் இந்தச் சிறிய 'நான்’ எனும் எண்ணமே ஸாயீக்குப் போதுமானது. கதை சொல்பவரின் கையை லாவகமாகப் பிடித்துக்கொண்டு பக்தர்களின் நன்மை கருதித் தம்முடைய உன்னதமான குணங்களை எழுதவைத்துவிடுகிறார். 
  அவர் முழுமுதற்பொருளாகிய நீர்நிலையில் பிரம்ம ரூப முத்துகளை உண்ண விரும்பும் அன்னப்பறவை. 'நானே அவன்; அவனே நான்’ என்ற நிலையில் மூழ்கியிருப்பது மட்டுமல்லாமல் ஒப்பற்ற சாகசங்களும் புரிபவர். 
   ஊரும் பெயரும் இல்லாத ஸாயீ அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண்பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்.
     தத்துவஞானத்தின் அவதாரமான ஸாயீ தாம் பெற்ற இறையனுபவத்தை மக்களுக்குக் காட்சிகள் அளிப்பதன் மூலமும் நிகழ்ச்சிகளை உண்டுபண்ணுவதன் மூலமும் அளிக்கிறார். அதேசமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தப்படாதவர்போல் தோன்றுகிறார்.
 
அவர் எவர்களுக்கெல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடமெல்லாம் பலவிதமான மாறுவேஷங்களில் தோன்றுகிறார். கணக்கற்ற அற்புதங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறார். 
அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.
 
       அவருடைய கதைகளில் அவருக்கு விருப்பம் அதிகம். அனவரதமும் (எப்பொழுதும்) என்னைத் தூண்டிவிட்டு, என்னையும் கதைகேட்பவர்களையும் நிமித்த காரணமாக (கருவியாக) வைத்துத் தம் பக்தர்களின் மனோரதங்களைப் பூர்த்திசெய்கிறார்.
 
பரமார்த்த வாழ்வில் பூரணமான அபிமானம் கொண்டு இவ்வுலக வாழ்வி­ருந்து முழுமையாகத் துறவேற்று, சக்ரதாரியாகிய மஹாவிஷ்ணுவின் பிரியத்தை வென்ற ஸாயீ, எண்ணற்ற பிராணிகளை உத்தாரணம் செய்திருக்கிறார். 
       எவர் இந் நாட்டிலும் (மஹாராஷ்டிரம்) வெளிநாடுகளிலும் தொழப்படுகிறாரோ, எவருடைய பக்திக்கொடி வானளாவிப் பறக்கிறதோ, அவர் தீனர்களையும் பலஹீனர்களையும் தம்மிடம் அழைத்து அவர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார்.
 
  பரம பவித்திரமான  ஸாயீ சரித்திரக் கதைகளைக் கேளுங்கள். கேட்பவர்களுடைய செவிகளும் சொல்பவருடைய வாயும் பரிசுத்தமடையட்டும். எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும். ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்’ என்னும் காவியத்தில், சொல்லப்படும் சாயிசரித்திர கதைகள் ஒவ்வொன்றும் உணர்த்தும் உட்கருத்துக்களைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். சுபம் உண்டாகட்டும்.

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...