சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய
நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை;
புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை.
அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;
பிழைக்கும் வழி பாக்கியம் அளிப்பது; நடைமுறையோ கத்திமுனையில் வேகமாக நடப்பதற்கு
ஒப்பானது.
சிலசமயங்களில் பிரம்மானந்தத்தில் மூழ்கிய உன்மத்த நிலை; மற்றசமயங்களிலோ போதனை செய்வதில் திருப்தி, சிலசமயங்களில் எல்லாவற்றையும் செய்துவிட்டு எதிலுமே பட்டுக்கொள்ளாத தன்மை; எதையுமே நிச்சயமாகச் சொல்லமுடியாத நிலை.
சிலசமயங்களில் பிரம்மானந்தத்தில் மூழ்கிய உன்மத்த நிலை; மற்றசமயங்களிலோ போதனை செய்வதில் திருப்தி, சிலசமயங்களில் எல்லாவற்றையும் செய்துவிட்டு எதிலுமே பட்டுக்கொள்ளாத தன்மை; எதையுமே நிச்சயமாகச் சொல்லமுடியாத நிலை.
சிலசமயங்களில் செயல் ஏதும் இல்லாத சூனியநிலை;
ஆயினும் தூக்கமா என்றால் அதுவும் இல்லை. தம்முடைய நன்மை கருதி ஆத்ம சொரூபத்திலேயே
மூழ்கியிருப்பார். சிலசமயங்களில், கரையில்லாததும் கடக்கமுடியாததும் அளக்கமுடியாததும்
ஆழமானதுமான சமுத்திரத்தைப் போல் சந்தோஷமாக இருப்பார். இக் கற்பனைக்கெட்டாத ரூபத்தை
யாரால் யதார்த்தமாக வர்ணிக்கமுடியும்?
ஆண்களை உறவினர் போலவும் பெண்களைத் தாயாகவோ சகோதரியாகவோ
அவர் நடத்தினார். அவர் ஒரு பிரம்மசாரி என்பதும் ஊர்த்துவரேதஸர் (மேல் நோக்கியே
செல்லும் விந்து உடையவர்) என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அவருடைய ஸத்சங்கத்தால் விளைந்த நன்மதி
உறுதியாகவும் ஆடாதும் அசையாதும் மரணபரியந்தம் நிலைக்கட்டும். சேவை மனப்பான்மை
ஓங்கி வளரட்டும். அவருடைய பாதங்களில் அனன்னிய பக்தி செழிக்கட்டும். அவருடைய
நாமத்தில் அகண்டமான பிரீதி உண்டாகட்டும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காணும் பாவம்
விருத்தியாகட்டும்.
ஒன்றைவிட மற்றொன்று அற்புதமான
அவருடைய லீலைகளைப் பார்த்துவிட்டுக் காரணத்தை ஆராய விரும்பியவர்கள், கடைசியில்,
புத்திக்கெதுவும் எட்டாதுபோய் வழியிலேயே சப்பணம்போட்டு
உட்கார்ந்துவிட்டனர்.
No comments:
Post a Comment