சொர்க்கத்தின் மஹிமையைத் துதிபாடுபவர் பலர்
சொர்க்கத்திற்காகப் போராடுகின்றனர். அவர்கள் பூலோகத்தை மரணபீதி உள்ள இடம் என்று
துச்சமாக மதிக்கின்றனர். அவர்களும் உருவமற்ற நிலையிருந்து உருவமுள்ள நிலைக்கு
மாறியவர்கள்தாம். உருவநிலையிருந்து அருவநிலைக்குள் மறுபடியும் புகுவதற்கே மரணம்
என்று பெயர். அதர்மம், அஞ்ஞானம்,
ஆசை, துவேஷம், இத்தியாதிகள் மரணத்தின் பாசக்கயிறுகள். இவற்றை மிச்சம்மீதி இல்லாமல்
தாண்டக்கூடியவனே சொர்க்கத்தின் உள்ளே நுழையமுடியும்.
சொர்க்கம், சொர்க்கம் என்றால் என்ன? ஆசைகளையும் ஏக்கங்களையும் துறப்பதும், வகளையும் துக்கங்களையும் கடந்த, பிரபஞ்சத்துடன் ஒன்றிய, ஆத்ம சொரூபத்திலேயே லயிப்பதுமே சொர்க்கம் அன்றோ?
சொர்க்கம், சொர்க்கம் என்றால் என்ன? ஆசைகளையும் ஏக்கங்களையும் துறப்பதும், வகளையும் துக்கங்களையும் கடந்த, பிரபஞ்சத்துடன் ஒன்றிய, ஆத்ம சொரூபத்திலேயே லயிப்பதுமே சொர்க்கம் அன்றோ?
வியாதிகளுக்கும் கவலைகளுக்கும் இன்னல்களுக்கும்
எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும் தாகத்தாலும் முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு
வருத்தப்படுவதில்லையோ, எவ்விடத்தில்
மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு
இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் நிர்ப்பயமாக உலவுகின்றனவோ, அவ்விடமே தெய்வீகமான
சொர்க்கம் என்று அறிக.
பிரம்மதேவரிருந்து புல்பூண்டுகள்வரை நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் தத்துவம்தான், நாம் இவ்வுலகத்தில் வாழும்போதும் மரணத்திற்குப்பின் மேலுலகத்திலும் எந்தவிதமான பேதமுமின்றி நம்மில் நிறைந்திருக்கிறது.

ஆனாலும், அஞ்ஞானத்தில் மூழ்கிய மனிதன் சம்சார
பந்தத்திருந்து விடுபட்ட பின்பும், பலவிதமான உபாதிகள் அவனைப் பின்தொடர்வதால்
இந்தத் தத்துவத்தை முழுமுதற்பொருளாகக் காண்பதில்லை.
No comments:
Post a Comment