Thursday, January 2, 2014

திருமணம் நடக்கும்!





     என் மகளுக்கு நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டே இருந்தது.  பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் வேண்டிக்கொண்டால் வேண்டுதல் நடக்கும் என என் உறவினர் ஒருவர் கூறினார்.  அவர் வைத்திருந்த சாயி தரிசனம் பத்திரிகையினைக் கொடுத்து அனுப்பினார்.
     விலாசத்தினைத் தேடி சிரமப்பட்டு வந்து, பெருங்களத்தூர் சாயியிடம் பிரார்த்தனை செய்தேன்.  அப்போது, உன் மகளுக்கு திருமணம் நடக்கும் என்றார் சாயி.  என் மகளுக்கு திருமணம் நடந்தால் பிரார்த்தனை மையத்திற்க்கு பத்தாயிரம் தருவதாக வேண்டிக்கொண்டேன்.
     இவ்வளவு காலமாக எத்தனையோ பரிகாரச் செயல்களில் ஈடுபட்டு வந்தேன்.  பத்து பைசா செலவில்லாமல், வேண்டிக்கொண்டு வந்த மறு வாரத்திலேயே நல்ல வரன் கிடைத்தார்.
     ஜாதகம் முக்கியமில்லை, பெண் குணவதியாயிருந்தால் போதும் என்றனர்.  மாப்பிள்ளை நல்ல குணமும், வருவாயும் உள்ளவர். என் மகளுக்கு சிரமமில்லாமல் நடந்தது.
     முதல் பத்திரிகையினை பெருங்களத்தூர் பாபாவிற்கு அர்ப்பணித்து, நான் நேர்ந்துக்கொண்ட காணிக்கையினை செலுத்தினேன்.  சாயி தரிசனம் பத்திரிகை பலருக்குக் கிடைத்தார் என் போன்று பலரும் நன்மை அடைவார்கள் என்பதை திடமாக உணர்ந்திருக்கிறேன்.



-          கே.வி.தேவராஜன், அண்ணாநகர், சென்னை - 40

எல்லா நிகழ்வுகளிலும் உன்னுடன் இருப்பேன்!



      பாண்டிச்சேரியில் லாசுப்பேட்டையில் கணவர் மற்றும் ஒரு குழந்தையுடன் நான் வசித்து வருகிறேன். என் அம்மா பாபாவின் தீவிர பக்தர்.  அவர் மூலமாக 2008 ல் நடந்த திருமணத்திற்க்குப் பிறகு பாபா பற்றி தெரிந்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
     பாபா அருளால் என் மகன் பிறந்ததால் அவனுக்கு சாயிராம் எனப் பெயர் வைத்தோம்.
     நமது பாபா மாஸ்டர் அவர்கள் இல்லத்தில் உள்ள பாபா ஆலயத்திற்க்கு வியாழன் தோறும் சென்று வருவேன்.  மாதந்தோறும் ஸ்ரீ சாயிதரிசனம் புத்தகம் வாங்கி படிப்பேன்.
     ஒவ்வொரு முறை பிரச்சனை, கஷ்டம் வரும் போதெல்லாம் என் அம்மா என்னிடம் கூறுவார்: “ பாபாவை நம்பு.  அவரிடம் உன் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் கூறு.  அவர் நிவர்த்தி செய்து வைப்பார்என்பார்.  அதேபோல் எனது வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் பாபாதான் தீர்த்து வைத்தார்.
     சில மாதங்களுக்கு முன்பு அடிவயிற்றில் இடப்பக்கத்திற்க்குக் கீழே அடிக்கடி வலி ஏற்பட ஆரம்பித்தது.  மருத்துவர்களிடம் சென்று காண்பித்தபோதும் ஏதும் பலனில்லை.  சில நாட்கள் வலியிருக்காது.  பிறகு தொடர்ந்து வலி வரும்.
     இந்த முறை வலி அதிகமான போது வேறு மருத்துவரிடம் காண்பித்தேன். அவர் கருப்பை ஸ்கேன் செய்யவும், பயாப்ஸிக்கும் ஏற்பாடு செய்து பதினைந்து நாட்கள் கழித்து வரச்சொன்னார். பயாப்ஸி டெஸ்ட் என்றதும் பயந்து விட்டேன். 
     ஏன் பாபா எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது?  நான் உன் பாதங்களை சரணடைந்துவிட்டேன்.  உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை என்று அழுதேன்.
     அந்த மாதம் வாங்கிய சாயி தரிசனம் புத்தகத்தில் சாயி பக்தர் ஒருவர் தனக்கு விருப்பமான உணவுப் பொருளை விட்டு விட்டதால் பாபாவின் அருளால் தனது நோய் தீர்ந்த்தாகவும், அதனால் இதனை சாயி தரிசனம் புத்தகத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார்.
     நானும் அதைப் போலவே பாபாவிடம் வேண்டிக்கொண்டேன்.  டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டேன். அரை இனிப்புடன் மட்டுமே பால் போன்ற திரவ ஆகாரங்களை பருகுவேன் என்றும், சாயி தரிசனம் புத்தகத்தில் இடம் பெற உனது அற்புதத்தினை எழுதி அனுப்புவேன் என்றும் வேண்டிக்கொண்டேன்.
     பயாப்ஸி டெஸ்ட் வந்தபோது கடவுள் அருளால் எதுவும் இல்லை என்று மருத்துவர் கூறினார்.  அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  இப்படி எல்லா நிகழ்வுகளிலும் என்னுடன் இருந்து, ஆசிர்வதித்து காத்து உயர்த்தி வருகிறார் என் பாபா.


-ராதா சுப்ரமணியன், பாண்டிச்சேரி  

Wednesday, January 1, 2014

சீரடி பயணம்

      பூர்வபுண்ணியம் இல்லாது எவரும் சிர்டீயில் தங்கமுடியாது. தங்குவதற்கு எவ்வளவு நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும் சரி, எல்லா ஸாமர்த்தியங்களும் பாபாவின்முன் செல்லுபடியாகாது போயின.
       ஒருவர் தாராளமாக நினைக்கலாம், 'நான் சிர்டீக்குப் போய் என் விருப்பம்போல் தங்கப்போகிறேன் என்று. ஆனால், அது அவருடைய கைகளில் இல்லை; ஏனெனில் அவர் முழுக்கவும் பாபா சக்திக்கே உட்பட்டிருக்கிறார்.     நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்தவர்கள் அனைவரும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுத் தோற்றுப்போனார்கள். ஸாயீ சுதந்திரமான தேவர்; மற்றவர்களுடைய அஹந்தை அவர்முன் செல்லுபடியாகாது.
       நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நாள் வரும்வரை, பாபா நம்மைப்பற்றி நினைக்க மாட்டார்; அவருடைய மஹிமையும் நம் காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டுமென்ற அருள்வெளிப்பாட்டைப்பற்றி என்ன பேசமுடியும்?
      ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்யப் போகவேண்டுமென்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். ஸாயீ தேஹவியோகம் அடையும்வரை அந்த நல்வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
      மற்றும் சிலர் சிர்டீக்குப் போவதைக் காலங்காலமாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே போயினர். போகலாம், போகலாம் என்று நூலை நீட்டிக்கொண்டேபோகும் குணமே அவர்களைப் போகமுடியாமல் செய்துவிட்டது. ஸாயீயும் மஹாஸமாதி அடைந்துவிட்டார்.
      நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனவர்கள் ஸாயீயைப் பேட்டிகாணும் நல்வாய்ப்பை இழந்தனர்; இவ்விதமாகப் பச்சாத்தாபமே மிஞ்சியது. கடைசியில், தரிசனம் செய்யும் பாக்கியத்தைக் கோட்டைவிட்டனர்.
     இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும் விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும்.
     சிர்டீக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள்கூட, அவர்கள் விரும்பிய நாள்வரை சிர்டீயில் தங்கமுடிந்ததா என்ன? அதற்கு பாபா அல்லரோ அனுமதி கொடுக்கவேண்டும்.
      சுயமுயற்சிகளால் மட்டும் எவரும் சிர்டீக்குப் போகமுடியவில்லை; எவ்வளவு ஆழமான ஆவ­லிருந்தாலும் விருப்பப்பட்ட நாள்வரை அங்கே தங்க முடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்கிவிட்டு, ''போய் வா என்று அவர் ஆணையிட்டவுடன் வீடுதிரும்ப நேர்ந்தது.




ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

ஞானிகளின் திருவடிகளை சரணடைதல்

       ஞானிகள் அடியார்களுடைய பக்தியால் கவரப்பட்டு, அவர்களுக்காகத் தங்களுடைய புண்ணியகோடியி­ருந்து தாராளமாகச் செலவு செய்கிறார்கள். பக்தர்களைக் காப்பாற்ற விரையும்போது, மலையோ பள்ளத்தாக்கோ மற்றெவ்விதமான தடையோ அவர்களைத் தடுத்து நிறுத்தமுடியாது.


      ஆன்மீகம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அஞ்ஞானிகளும் உண்டு. மனைவி, மக்கள், செல்வம் என்னும் பிடிப்புகளில் அவர்கள் மாட்டிக்கொண் டிருக்கிறார்கள். இப்பரிதாபகரமான அஞ்ஞானிகளை விட்டுவிடுவோம்.

     அஞ்ஞானிகளாயினும், கபடமற்றவர்களாக இருந்தால் இறைவன் கிருபை காட்டுகிறான். ஆனால், இறைவனுக்கு வெறுப்பு முகம் காட்டிப் பிரிந்து எங்கோ போகின்றவர்கள் அவர்களுடைய அஹந்தையிலேயே எரிந்துபோகிறார்கள்.

      ஒரு ஞானி கருணையால் உந்தப்பட்டு 'விசுவாசம் துளிர்விடட்டும் என்ற நோக்கத்தில் அஞ்ஞானிகளையும் அரவணைப்பார். ஆனால், ஞானகர்வியோ எதற்கும் பிரயோஜனமின்றிப் போகிறான்.

      பண்டிதர் என்று இறுமாப்புக்கொண்ட மூடமதியாளர், பக்தி மார்க்கத்தை இழிவுபடுத்தலாம். அவர்களுடைய சங்கதியே நமக்கு வேண்டா.

      நமக்கு குலப்பிரிவுகளைப் பற்றிய போராட்டம் வேண்டா; அதைப் பற்றிய தேவையில்லாத, அளவுக்கு மீறிய, பெருமையும் வேண்டா. வர்ணாசிர தர்மத்தை உடும்புபோல் பிடித்துக்கொள்ளவும் வேண்டா; வேதங்களையே எதிர்க்கும் மெத்தப்படித்த பண்டிதத்தனமும் வேண்டா.

     வேதங்களையும் வேதாங்கங்களையும் கரைத்துக் குடித்த பண்டிதர்கள்தாம், ஞானகர்வத்தால் மதோன்மத்தர்களாக ஆகி பக்தி மார்க்கத்துக்குத் தடையாகச் செயல்படுகின்றனர். அவர்களுக்கு கதி மோக்ஷம் ஏதும் இல்லை.

      அஞ்ஞானி தன்னுடைய விசுவாசமாகிய பலத்தால் பிறவிப்பயத்தை வெல்கிறான். ஆனால், அதிகம் படித்த பண்டிதர்களின் குழப்பங்களையும் புதிர்களையும் எவராலும் எக்காலத்தும் தீர்த்துவைக்கமுடியாது.

      ஞானிகளின் திருவடிகளை சரணடைவதால் அஞ்ஞானிகளுடைய அஞ்ஞானம் நல்லெண்ணங்களுக்கும் நல்லுணர்வுகளுக்கும் இடமளித்துவிட்டு அகன்றுவிடும். ஞானமார்க்க அபிமானிகளின் விகற்பம்  என்றுமே அழியாது.




ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...