Wednesday, January 1, 2014

சீரடி பயணம்

      பூர்வபுண்ணியம் இல்லாது எவரும் சிர்டீயில் தங்கமுடியாது. தங்குவதற்கு எவ்வளவு நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும் சரி, எல்லா ஸாமர்த்தியங்களும் பாபாவின்முன் செல்லுபடியாகாது போயின.
       ஒருவர் தாராளமாக நினைக்கலாம், 'நான் சிர்டீக்குப் போய் என் விருப்பம்போல் தங்கப்போகிறேன் என்று. ஆனால், அது அவருடைய கைகளில் இல்லை; ஏனெனில் அவர் முழுக்கவும் பாபா சக்திக்கே உட்பட்டிருக்கிறார்.     நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்தவர்கள் அனைவரும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுத் தோற்றுப்போனார்கள். ஸாயீ சுதந்திரமான தேவர்; மற்றவர்களுடைய அஹந்தை அவர்முன் செல்லுபடியாகாது.
       நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நாள் வரும்வரை, பாபா நம்மைப்பற்றி நினைக்க மாட்டார்; அவருடைய மஹிமையும் நம் காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டுமென்ற அருள்வெளிப்பாட்டைப்பற்றி என்ன பேசமுடியும்?
      ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்யப் போகவேண்டுமென்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். ஸாயீ தேஹவியோகம் அடையும்வரை அந்த நல்வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
      மற்றும் சிலர் சிர்டீக்குப் போவதைக் காலங்காலமாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே போயினர். போகலாம், போகலாம் என்று நூலை நீட்டிக்கொண்டேபோகும் குணமே அவர்களைப் போகமுடியாமல் செய்துவிட்டது. ஸாயீயும் மஹாஸமாதி அடைந்துவிட்டார்.
      நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனவர்கள் ஸாயீயைப் பேட்டிகாணும் நல்வாய்ப்பை இழந்தனர்; இவ்விதமாகப் பச்சாத்தாபமே மிஞ்சியது. கடைசியில், தரிசனம் செய்யும் பாக்கியத்தைக் கோட்டைவிட்டனர்.
     இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும் விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும்.
     சிர்டீக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள்கூட, அவர்கள் விரும்பிய நாள்வரை சிர்டீயில் தங்கமுடிந்ததா என்ன? அதற்கு பாபா அல்லரோ அனுமதி கொடுக்கவேண்டும்.
      சுயமுயற்சிகளால் மட்டும் எவரும் சிர்டீக்குப் போகமுடியவில்லை; எவ்வளவு ஆழமான ஆவ­லிருந்தாலும் விருப்பப்பட்ட நாள்வரை அங்கே தங்க முடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்கிவிட்டு, ''போய் வா என்று அவர் ஆணையிட்டவுடன் வீடுதிரும்ப நேர்ந்தது.




ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...