Wednesday, January 1, 2014

ஞானிகளின் திருவடிகளை சரணடைதல்

       ஞானிகள் அடியார்களுடைய பக்தியால் கவரப்பட்டு, அவர்களுக்காகத் தங்களுடைய புண்ணியகோடியி­ருந்து தாராளமாகச் செலவு செய்கிறார்கள். பக்தர்களைக் காப்பாற்ற விரையும்போது, மலையோ பள்ளத்தாக்கோ மற்றெவ்விதமான தடையோ அவர்களைத் தடுத்து நிறுத்தமுடியாது.


      ஆன்மீகம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அஞ்ஞானிகளும் உண்டு. மனைவி, மக்கள், செல்வம் என்னும் பிடிப்புகளில் அவர்கள் மாட்டிக்கொண் டிருக்கிறார்கள். இப்பரிதாபகரமான அஞ்ஞானிகளை விட்டுவிடுவோம்.

     அஞ்ஞானிகளாயினும், கபடமற்றவர்களாக இருந்தால் இறைவன் கிருபை காட்டுகிறான். ஆனால், இறைவனுக்கு வெறுப்பு முகம் காட்டிப் பிரிந்து எங்கோ போகின்றவர்கள் அவர்களுடைய அஹந்தையிலேயே எரிந்துபோகிறார்கள்.

      ஒரு ஞானி கருணையால் உந்தப்பட்டு 'விசுவாசம் துளிர்விடட்டும் என்ற நோக்கத்தில் அஞ்ஞானிகளையும் அரவணைப்பார். ஆனால், ஞானகர்வியோ எதற்கும் பிரயோஜனமின்றிப் போகிறான்.

      பண்டிதர் என்று இறுமாப்புக்கொண்ட மூடமதியாளர், பக்தி மார்க்கத்தை இழிவுபடுத்தலாம். அவர்களுடைய சங்கதியே நமக்கு வேண்டா.

      நமக்கு குலப்பிரிவுகளைப் பற்றிய போராட்டம் வேண்டா; அதைப் பற்றிய தேவையில்லாத, அளவுக்கு மீறிய, பெருமையும் வேண்டா. வர்ணாசிர தர்மத்தை உடும்புபோல் பிடித்துக்கொள்ளவும் வேண்டா; வேதங்களையே எதிர்க்கும் மெத்தப்படித்த பண்டிதத்தனமும் வேண்டா.

     வேதங்களையும் வேதாங்கங்களையும் கரைத்துக் குடித்த பண்டிதர்கள்தாம், ஞானகர்வத்தால் மதோன்மத்தர்களாக ஆகி பக்தி மார்க்கத்துக்குத் தடையாகச் செயல்படுகின்றனர். அவர்களுக்கு கதி மோக்ஷம் ஏதும் இல்லை.

      அஞ்ஞானி தன்னுடைய விசுவாசமாகிய பலத்தால் பிறவிப்பயத்தை வெல்கிறான். ஆனால், அதிகம் படித்த பண்டிதர்களின் குழப்பங்களையும் புதிர்களையும் எவராலும் எக்காலத்தும் தீர்த்துவைக்கமுடியாது.

      ஞானிகளின் திருவடிகளை சரணடைவதால் அஞ்ஞானிகளுடைய அஞ்ஞானம் நல்லெண்ணங்களுக்கும் நல்லுணர்வுகளுக்கும் இடமளித்துவிட்டு அகன்றுவிடும். ஞானமார்க்க அபிமானிகளின் விகற்பம்  என்றுமே அழியாது.




ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...