Thursday, January 2, 2014

எல்லா நிகழ்வுகளிலும் உன்னுடன் இருப்பேன்!



      பாண்டிச்சேரியில் லாசுப்பேட்டையில் கணவர் மற்றும் ஒரு குழந்தையுடன் நான் வசித்து வருகிறேன். என் அம்மா பாபாவின் தீவிர பக்தர்.  அவர் மூலமாக 2008 ல் நடந்த திருமணத்திற்க்குப் பிறகு பாபா பற்றி தெரிந்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
     பாபா அருளால் என் மகன் பிறந்ததால் அவனுக்கு சாயிராம் எனப் பெயர் வைத்தோம்.
     நமது பாபா மாஸ்டர் அவர்கள் இல்லத்தில் உள்ள பாபா ஆலயத்திற்க்கு வியாழன் தோறும் சென்று வருவேன்.  மாதந்தோறும் ஸ்ரீ சாயிதரிசனம் புத்தகம் வாங்கி படிப்பேன்.
     ஒவ்வொரு முறை பிரச்சனை, கஷ்டம் வரும் போதெல்லாம் என் அம்மா என்னிடம் கூறுவார்: “ பாபாவை நம்பு.  அவரிடம் உன் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் கூறு.  அவர் நிவர்த்தி செய்து வைப்பார்என்பார்.  அதேபோல் எனது வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் பாபாதான் தீர்த்து வைத்தார்.
     சில மாதங்களுக்கு முன்பு அடிவயிற்றில் இடப்பக்கத்திற்க்குக் கீழே அடிக்கடி வலி ஏற்பட ஆரம்பித்தது.  மருத்துவர்களிடம் சென்று காண்பித்தபோதும் ஏதும் பலனில்லை.  சில நாட்கள் வலியிருக்காது.  பிறகு தொடர்ந்து வலி வரும்.
     இந்த முறை வலி அதிகமான போது வேறு மருத்துவரிடம் காண்பித்தேன். அவர் கருப்பை ஸ்கேன் செய்யவும், பயாப்ஸிக்கும் ஏற்பாடு செய்து பதினைந்து நாட்கள் கழித்து வரச்சொன்னார். பயாப்ஸி டெஸ்ட் என்றதும் பயந்து விட்டேன். 
     ஏன் பாபா எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது?  நான் உன் பாதங்களை சரணடைந்துவிட்டேன்.  உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை என்று அழுதேன்.
     அந்த மாதம் வாங்கிய சாயி தரிசனம் புத்தகத்தில் சாயி பக்தர் ஒருவர் தனக்கு விருப்பமான உணவுப் பொருளை விட்டு விட்டதால் பாபாவின் அருளால் தனது நோய் தீர்ந்த்தாகவும், அதனால் இதனை சாயி தரிசனம் புத்தகத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார்.
     நானும் அதைப் போலவே பாபாவிடம் வேண்டிக்கொண்டேன்.  டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டேன். அரை இனிப்புடன் மட்டுமே பால் போன்ற திரவ ஆகாரங்களை பருகுவேன் என்றும், சாயி தரிசனம் புத்தகத்தில் இடம் பெற உனது அற்புதத்தினை எழுதி அனுப்புவேன் என்றும் வேண்டிக்கொண்டேன்.
     பயாப்ஸி டெஸ்ட் வந்தபோது கடவுள் அருளால் எதுவும் இல்லை என்று மருத்துவர் கூறினார்.  அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  இப்படி எல்லா நிகழ்வுகளிலும் என்னுடன் இருந்து, ஆசிர்வதித்து காத்து உயர்த்தி வருகிறார் என் பாபா.


-ராதா சுப்ரமணியன், பாண்டிச்சேரி  

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...