நீங்கள் என் வீட்டிற்கு வந்து கால் வைத்தால் போதும், என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என பல பக்தர்கள் எப்போதோ பார்க்கிற தங்கள் குருவிடம் வேண்டுவார்கள்.
பாபாவுடன் இருந்துகொண்டே மிகவும் கஷ்டப் பட்டுவந்தவர் மகல்சாபதி. பணம் கொடுத்து உன்னை பெரிய ஆளாக்கிவிடுகிறேன் என்று பாபா பணம் கொடுக்க முன்வரும் போது, வேண்டாம் உங்கள் அருளிருந்தால் போதும் என மறுத்து விட்டவர். இதனாலேயே பல தினங்கள் குடும்பத்தோடு பட்டினியும் கிடந்தவர்.
பாபாவுடன் மசூதியிலும், சாவடியிலும் மாறி மாறி படுத்துக்கொள்வார். இரவு முழுவதும் உறங்காமல் பாபாவின் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அவரது இதயத்துடிப்பை கவனிப்பது மகல்சாபதி வழக்கம்.
பாபா மூன்று நாட்கள் தனது உடலைவிட்டு நீங்கியபோது, அந்த உடலை முற்றிலுமாக பாதுகாத்து வந்தவர். இத்தனைக்கும் மேலாக சீரடிக்கு மட்டுமின்றி உலகத்துக்கு பாபாவை அறிமுகம் செய்துவைத்தவர் அவர்.
அவரது நிலையில் நாமிருந்தால் என்ன நினைப்போம், நான் வேண்டாம் என்றுதான் சொல்வேன்! ஆனால் நீதானே சூழ்நிலை பார்த்து வற்புறுத்தித் தரவேண்டும்.
உனக்காக ஒன்றும் செய்யாதவன் எல்லாம் உன்னிடம் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறான், உனக்குப் பெயர் வைத்து, உயிர் காத்து கூடவே இருக்கிற என்னை கஞ்சிக்கில்லாமல் அலைய விட்டுவிட்டாயே! நன்றிகெட்டவனே! என்றெல்லாம் பேசுவோம்.
நமது நிலையைப் பார்க்கிற மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்றால், ராமர் இருக்கும் இடத்தில் மோகம் இருக்காது, மோகம் இருக்குமிடத்தில் ராமர் இருக்கமாட்டார். பகலிருக்கும் இடத்தில் இரவு இருக்காது, இரவு இருந்தால் பகலிருக்காது. இப்படித்தான் சாயி இருக்கும் இடத்தில் கஷ்டம் இருக்க முடியாது! என்பார்கள்.
மகல்சாபதி அப்படிப்பட்ட விதண்டாவாதம் பேசுபவர் கிடையாது. எதிர்பார்ப்பதும் இல்லை. பயந்த சுபாவம்.. மிகுந்த பக்தியுள்ளவர்.
ஒருநாள் பாபா அவரது மனைவியைக் கூப்பிட்டு நான் இன்றைக்கு உன் வீட்டுக்கு வருவேன்..வந்தால் வேண்டாம் என்று என்னை நிராகரித்து விடாதே! எனக் கூறி அனுப்பினார்.
திருமதி மகல்சாபதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பாபா வந்தால் சந்தோக்ஷம்தானே! எதற்காக பாபா இப்படி கூறுகிறார் என நினைத்துக்கொண்டே வீடு போய்விட்டார்.
அன்றைக்கு திருமதி மகல்சாபதியிடம் கூறிய அதே பாபா, இன்றைக்கு உங்களிடம் கூறுகிறார். திருமதி! நான் உங்கள் வீட்டுக்கு வரப்போகிறேன்..வந்தால் என்னை நிராகரித்துவிட வேண்டாம்!
பாபா கூறிய சூழலைப் பாருங்கள்.. வீட்டில் வறுமை.. பல நாட்களாகத் தொடர்ந்து பட்டினி..கையில் பத்துப் பைசாகூட கிடையாது.. இந்த நிலையில் பாபா வீட்டிற்கு வந்தால் என்ன செய்வது? என நிச்சயம் அந்த அம்மாள் கஷ்டப்பட்டு இருப்பாள். நீங்கள் எப்படி?
இன்னும் பிள்ளைக்குத் திருமணமாகவில்லை.கடன் தொல்லை, நிம்மதியில்லை, கணவன் மனைவி இடையே ஒன்றுமையில்லை. வேலையில் பிரச்சினை. இப்படி ஏதாவது ஒன்று உள்ளதா?
பாபா உங்கள் வீட்டுக்கு வருகிறார்..
மகல்சாபதி வீட்டுக்கு அவர் எப்படி வந்தார்? என் வீட்டுக்கு அவர் எப்படி வருவார்?
பாபாவை பார்க்க தீட்சித் என்ற பக்தர் வந்தார். அவர் கையில் உறையிடப்பட்ட கவரில் பத்து ரூபாய் வைத்திருந்தார். அன்று ஏனோ, மகல்சாபதி நினைவில் இருந்த அவர், பாபாவிடம், பாபா இந்த மகல்சாபதி யார் எதைக் கொடுத்தாலும் வாங்காதவர். அவரது இந்தப் போக்கால் குடும்பம் வறுமையில் இருக்கிறது, பசி பட்டினியோடு இருக்கிறார்கள்.
நான் இந்தப் பணத்தைக் கொடுத்தால் கவுரவக்குறைச்சலாக நினைப்பான். நீங்கள் தந்ததாகக் கூறி கொடுத்தால் மறுக்காமல் ஏற்றுக்கொள்வான் எனக்கூறினார். உடனே, பாபாவும் சரி என ஒப்புதல் தந்தார். தீட்சித் உடனடியாக மகல்சாபதி வீட்டுக்குச் சென்று பணத்தை அவரது கையில் திணித்து, பாபா தந்துவிட்டு வரச் சொன்னார் எனக் கூறினார்.
அப்போதுதான் மகல்சாபதி மனைவிக்கு புரிந்தது, இதுதான் பாபா நமது வீட்டுக்கு வருவது என்பது!
இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.. பாபா என்பவர் ஸ்ரீநிவாசன்.. செல்வத்திற்கு அதிபதி. பிரச்சினைகளுக்குத் தீர்வு.
என்னுடைய பக்தனின் வீட்டில் தேவை என்பதே இருக்காது என்றவர்.. உன் சுமைகளை என் மீது வைத்துவிட்டால் சத்தியமாகவே அதை சுமப்பேன் என வாக்குறுதி தந்தவர். அவர் மிக விரைவில் உன் வீட்டிற்குப் பணமாகவோ, பிரச்சினைக்குத்தீர்வாகவோ வரப் போகிறார்.. புத்திசாலியாக இருந்து அவரைப் பிடித்துக்கொள்;.
Sunday, September 28, 2014
உன் வீட்டிற்க்கு வருகிறேன்!
Saturday, September 27, 2014
சாயிபுத்ரன் பதில்கள்
சாயி பக்தி போதுமானது, எளிதானது என்று எப்படி கூறுகிறீர்கள்?
(எம். சுதா, சென்னை - 15)
சாயி, கண்ணெதிரே உள்ள கங்கா ஜலம் போன்றவர். அவரை எப்படி இழுத்தாலும் உங்கள் இழுப்புக்கு இரங்கி, இறங்கி வருவார். நிதர்சனத்தை - யதார்த்தத்தை சொல்லித்தருவார். எப்படி வணங்கினாலும் ஏற்றுக் கொள்வார். இவரைப் போன்று வேறு யாரும் ஆன்மீகத்தை எளிமையாக போதிக்கவில்லை என்பது அனுபவஸ்தர்களின் கருத்து.
சாயிபுத்ரன் பதில்கள்
மற்றவர்கள் நிர்ப்பந்தப் படுத்தும்போது எப்படி நடந்து கொள்வீர்கள்?
(கோபால், திருவானைக்கா)
நிர்ப்பந்தப் படுத்துபவரின் தகுதியை அறிந்து, அவர்கள் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப நடந்துகொள்வேன்!
சாயிபுத்ரன் பதில்கள்
நீங்கள் தற்போது ஓர் ஆன்மீக அமைப்பைத் தொடங்கியிருப்பதாக, ஊர் ஊராக கிளைகள் உருவாக்குவதாக சாயி தரிசனத்தில் பார்த்தோம். எங்கள் ஊரில் இப்படியொரு அமைப்பை நிறுவினால் அதனால் எங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தலைமையின் கீழ் செயல்படுவதால் ஏற்படுகிற நன்மைகள் என்ன?
( கே. முத்துராமன், திருப்பூர்)
இப்படியொரு கேள்வியை நமது சண்முகம் ஐயா கூட கேட்டிருந்தார்கள். இதுவரை அது பற்றி எதையும் யோசிக்கவில்லை. அவர் போன்ற பெரியவர்களைக் கலந்தாலோசித்து யோசித்து முடிவு செய்ய வேண்டிய விக்ஷயம். இது பற்றி சங்க விதிகளில் சரத்துக்கள் சேர்க்கப்படும்.
சாயி பக்தியை பெரிய அளவில் வளர்க்கும் நோக்கில் இந்த ஆன்மீக அமைப்பு உருவாகிறது. இதன் கீழ் வரும்போது ஒருங்கிணைந்த சாயி பக்தியை ஏற்படுத்த முடியும். காசு பணம் நம்மிடம் கிடையாது. கடவுள் பக்தியைப் பிரச்சாரம் செய்ய ஓர் அமைப்பு தேவைப்படுகிறது. நடிகர்களுக்கு மன்றங்கள் உள்ளன, எதற்காக என்று அதை வைப்பவர்களுக்குத் தெரியாது. கடவுள் பெயரிலான அற அமைப்பு உருவாகும்போது சமூகம் சீர்பெறும். மற்ற நற்பணிகளும் செய்யமுடியும்.
Friday, September 26, 2014
சாயிபுத்ரன் பதில்கள்
பாபா சிலையை வீடு வீடாக எடுத்து வந்து வைத்தால் பிரச்சினைகள் தீரும் எனக் கூறி சிலர், பாபா சிலையை வீடு வீடாக எடுத்துச் செல்கிறார்களே, உண்மையில் பிரச்சினை தீருமா?
(ஆர். ராதா, சென்னை - 83)
நிச்சயமாக சிலையை எடுத்துச் சென்று பூஜை செய்வது போல நடிக்கிறவரின் பிரச்சினை தீரும். இப்படிப்பட்டோர் பின்னால் போகிறவர்களுக்கு பாவம் சேரும்.
சாயிபுத்ரன் பதில்கள்
எனக்கு பாபாவிடம் பக்தி ஏற்பட்டு, காலப் போக்கில் காணாமல் போய்விட்டது. திட நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. இது ஏன்?
(ஜி. குமார், செங்கல்பட்டு)
சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு சாதனமாக பக்தி இருக்கும் வரை திடநம்பிக்கை வராது.ஆர்வத்தின் காரணமாக பக்தி செலுத்தினா லும், கோயிலில் முக்கியஸ்தர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பினாலும் பக்தி பாதியில் முடிந்துவிடும்.
Thursday, September 25, 2014
சாயி புத்ரன் பதில்கள்
குருவை எப்போது வணங்க வேண்டும்? எப்படி வணங்கவேண்டும்?
( கே. ராமலிங்கம், மாமல்லபுரம்)
குருவை பக்தி வந்த பிறகு வணங்க வேண்டும். பக்தி வராமல் ஒருவரை குருவாக வணங்கும்போது அவர் மீது சந்தேகம் வந்துவிடும். பக்தி வந்த பிறகு வணங்கினால் குருவின் மீது சந்தேகம் எழாது. குருவை கடவுளாக நினைத்து வணங்க வேண்டும்.
இப்போதெல்லாம் பாபாவை ஈக்கள் போல மக்கள் மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களே! எப்படி?
(ஏ. அன்பு மணி, பெங்களூர்)
பாபா செய்யும் அற்புதங்கள்தான் காரணம். ஆனால் எல்லோருக்கும் பலன் கிடைப்பதில்லை. காரணம், பலர் ஈக்கள் போல இருக்கிறார்களே தவிர, தேனீக்கள் போல இருப்பதில்லை. ஈக்கள் நல்லதிலும் கெட்டதிலும் வாயை வைக்கும். தேனீ போல நல்லதில் மட்டும் வாயை வைக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பக்கத்தில் இருந்து உதவி செய்கிறார்.
ஞானசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி என்ற சக்திகளைப் பற்றி சொல்லுங்களேன்?
(ஆர். பிரபு, கடலூர்)
கண்டவுடன் அறிந்துகொள்ளுதல், ஞான சக்தி, அறிந்து கொண்ட பொருளை அடைய விரும்புவது இச்சா சக்தி. அதனைஅடைய வேண்டிய முயற்சிகளை செய்வது கிரியா சக்தி.
Tuesday, September 23, 2014
நல்ல வழி !
என் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தீர நல்ல வழி ஒன்றை சொல்லுங்களேன்?
(எஸ். ஜமுனா, சென்னைடூ42)
செலவில்லாமல் நாமஸ்மரணை செய்துவிட்டு அமர்ந்திருங்கள். பகவான் பார்த்துக் கொள்வான் என்று எளிய பரிகாரம் சொன்னால் கேட்கமாட்டார்கள். பரிகாரம் என்ற பெயரில் பல லட்சங்களை கறந்து கொள்ளுங்கள் என்று வழிப்பறிக்காரர்களைக் கூப்பிட்டு கதவை திறந்துவிடுவார்கள். நீங்கள் நாமஸ்மரணை செய்யுங்கள் போதும். பிரச்சினை, கஷ்டம் தீர்த்து, மோட்சம் அளிப்பதில் கலியுகத்தில் இதைவிடச் சிறந்த பரிகார வழி வேறு எதுவும் கிடையாது.
வியாச பகவான் சொன்னார்: “கலி காலத்தில் பிறக்கப் போகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பகவானின் நாமஸ்மரணையை மட்டுமே செய்தால் போதும், முக்தி பெற்றுவிடுவார்கள்!” என்று. அவர் வாழ்ந்த யுகத்தில் தவம் செய்தாக வேண்டும்.
Monday, September 22, 2014
நம் சமயத்தின் சிறப்பு என்ன?
நம் சமயத்தின் சிறப்பு என்ன?
(கே. பிரசன்னா, சென்னை - 106)
முதலும், முடிவுமற்ற - சாசுவதமான சமயம் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பான வாழ்வியல் கோட்பாடுகளின் அடைப்படையில் உருவானது நமது சமயம். எது நன்மை, எது தீமை என்றெல்லாம் பகுத்துப் பார்க்கிற உணர்வுகளால் நமது சமயம் உருவாக்கப்பட்டு, விதிகளாக எழுதப்பட்டு காலம் காலமாகப் பின்பற்றப் பட்டு வருகிறது.
யாரோ ஒருவர் உருவாக்கிய கோட்பாட்டினால் அவரை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல நம் சமயம். நமக்கு கோட்பாடுகள்தான் முக்கியமே தவிர, அந்தக் கோட்பாட்டை உருவாக்கியவர் அல்லர்.
வாழ்வியல் கோட்பாடுகளாகப் பார்ப்பதால்தான் ராமன், கிருஷ்ணன், புத்தர், இயேசு, சாயி பாபா, அம்மா என எத்தனை பேர் வந்தாலும் அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு உங்களால் அனைவரையும் சமமாகப்பார்க்க முடிகிறது.
Sunday, September 21, 2014
அற்புதம் நடந்தது!
போன நவம்பர் மாதம் 19ம் தேதி அன்று மாலை ஆறு மணி அளவில் எங்கள் வீட்டு அருகிலிருந்த ஸ்பீட் பிரேக்கில் தடுக்கி விழுந்து விட்டேன். வலி தாங்காமல் துடித்த என்னை, எனது மகன் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். வயதான தாயாரை எதற்காக தனியாக அனுப்பி வைத்தீர்? என டாக்டர் என் மகனை சத்தம் போட்டார். எக்ஸ் டூ ரே எடுத்துப்பார்த்தார். எலும்பு அகலமாக உடைந்து விரிந்திருக்கிறது, நரம்பு துண்டாகி உள்ளது. அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இப்போது கட்டு போட்டு அனுப்புகிறேன், பிறகு வந்து பாருங்கள் என அனுப்பி வைத்தார். துக்கம் தாளாமல் பாபாவிடம் வருந்தி அழ ஆரம்பித்தேன்.
மானசீகமாக, பெருங்களத்தூரிலிருந்து பாபா எல்லோருக்கும் எல்லாவித கஷ்டங்களையும் நீக்கி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். . எனக்கும் அற்புதத்தைச் செய்தாக வேண்டும் என்று தீவிரமாக பிரார்த்தனை செய்தேன்.
என் முழங்காலில் வலியில்லாமலும், அறுவை சிகிச்சைக்கு அவசியமில்லாமலும் நான் குணமாக வேண்டும், இந்த அற்புதத்தை சாயி தரிசனம் பத்திரிகையில் எழுதவேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
பாபா உனது நாமத்தை இலட்சம் முறை சொல்கிறேன் என்று உறுதி கூறி நாம ஜெபம் செய்தேன். எனது பிரார்த்தனையை சாயி வரதராஜன் அவர்களிடம் தெரிவித்தபோது, ஆபரேக்ஷன் இல்லாமல் குணமாகி விடுவீர்கள் அம்மா, கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
அவர் சொன்னதைப் போலவே ஆபரேக்ஷன் இல்லாமலேயே நான் குணமடைந்துவிட்டேன். இப்போது நல்ல முறையில் நடக்கிறேன். என் பிரார்த்தனையைக் கேட்ட பாபாவுக்கு நன்றி.
எம். பத்மாவதி, கோயமுத்தூர்
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான். மன்னரும்...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...