Sunday, September 21, 2014

அற்புதம் நடந்தது!

sai18



போன நவம்பர் மாதம் 19ம் தேதி அன்று மாலை ஆறு மணி அளவில் எங்கள் வீட்டு அருகிலிருந்த  ஸ்பீட் பிரேக்கில் தடுக்கி விழுந்து விட்டேன். வலி தாங்காமல் துடித்த என்னை, எனது மகன் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.  வயதான தாயாரை எதற்காக தனியாக அனுப்பி வைத்தீர்? என டாக்டர் என் மகனை சத்தம் போட்டார். எக்ஸ் டூ ரே எடுத்துப்பார்த்தார். எலும்பு அகலமாக உடைந்து விரிந்திருக்கிறது, நரம்பு துண்டாகி உள்ளது. அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இப்போது கட்டு போட்டு அனுப்புகிறேன், பிறகு வந்து பாருங்கள் என அனுப்பி வைத்தார்.  துக்கம் தாளாமல் பாபாவிடம் வருந்தி அழ ஆரம்பித்தேன்.



மானசீகமாக,  பெருங்களத்தூரிலிருந்து பாபா எல்லோருக்கும் எல்லாவித கஷ்டங்களையும் நீக்கி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். . எனக்கும் அற்புதத்தைச் செய்தாக வேண்டும் என்று தீவிரமாக பிரார்த்தனை செய்தேன்.



என் முழங்காலில் வலியில்லாமலும், அறுவை சிகிச்சைக்கு அவசியமில்லாமலும் நான் குணமாக வேண்டும், இந்த அற்புதத்தை சாயி தரிசனம் பத்திரிகையில் எழுதவேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.



பாபா உனது நாமத்தை இலட்சம் முறை சொல்கிறேன் என்று உறுதி கூறி நாம ஜெபம் செய்தேன். எனது பிரார்த்தனையை சாயி வரதராஜன் அவர்களிடம் தெரிவித்தபோது, ஆபரேக்ஷன் இல்லாமல் குணமாகி விடுவீர்கள் அம்மா, கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.



அவர் சொன்னதைப் போலவே ஆபரேக்ஷன் இல்லாமலேயே நான் குணமடைந்துவிட்டேன். இப்போது நல்ல முறையில் நடக்கிறேன். என் பிரார்த்தனையைக் கேட்ட பாபாவுக்கு நன்றி.



எம். பத்மாவதி, கோயமுத்தூர்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...