Friday, May 4, 2018

அன்னதானத்தைப் பற்றி மகான் சீரடி சாய்பாபா எடுத்துரைத்தது



நீங்கள் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.
கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங் கொண்டும் மறக்காதே.
ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள். உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான். அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது   என்றார் மகான் சீரடி சாய்பாபா..
பசியோடிருக்கும் ஒருவனுக்கு வயிறு நிறை, அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் போதும் என்று சொல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்கு மீண்டும் பசிக்கவே செய்யும். பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.
அதனால்தான் ஔவையார்
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்- ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. “ - என்றார்.
நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.. வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது. அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம். ஆதலால் நண்பர்களே நம்மால் முடிந்த அளவுக்குப் பசி்ப்பிணி யாற்றுவோம்.
ஓம் ஸ்ரீசாயிராம்.

ஆசியாவின் மிகப்பெரிய சமையற்கூடம்



சீரடி சாய்பாபா கோயில் நிர்வாகத்தின் மூலம் நாள் தோறும் 40, 000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.  11500 சதுர அடியில்  பக்தர்கள் அமர்ந்து  சாப்பிட இட வசதி செய்யப்பட்டுள்ளது. 73 பெரிய குழி ஆடிகளைக் கொண்டு சூரிய வெப்பத்தின் மூலம்  நாள் ஒன்றுக்கு 1800 kg நீராவி உருவாக்கி 2000 kg அரிசி மற்றும் பருப்பு சமைக்கப்படுகிறது. மேலும் 2000 kg காய்கறிகள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரிய வெப்பத்தின் மூலம் சமைக்கப்படும்  சமையல் கூடம் ஆசியாவிலே இதுதான் பெரியது என்ற பெருமைப்பெற்றது.

Thursday, May 3, 2018

இரவும் பகலும் பாபா உன்னுடன் இருக்கிறார்.



(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட், அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.
பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கப்படுகிறேன். சிலருடைய தேவை செல்வம், சிலருக்கு பெண்டிர், சிலருக்கு புத்திரர்கள். அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை! நானும் பொறுத்து பொறுத்துப்போகிறேன்;  ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன். எனக்கு அலுத்துவிட்டது.
திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள். எங்கள் கதி என்னாவது?
பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா? என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது; அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.
சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம். தாங்கள் அறிவீர்களல்லவா?
பாபா: ஆம், உங்களுக்கு அது கிட்டும்.
சிறுவன்: பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.
பாபா: இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.
சிறுவன்: பாபா, ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?
பாபா: ஆஹா! உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா? மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம். இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து, ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது. நானும் நீயும் வேறல்ல: கர்மங்களைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் தர்க்கம் செய்யவேண்டாம்.
ஜீவர்களுக்கு நன்மை உண்டாக்கவே கர்மங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. யாருக்கு எது நலமோ அது முன்பாகவே தீர்மாணிக்கப்பட்டுள்ளது. நல்ல கர்மங்களை அனுசரிப்பதன் மூலமே கர்மா நிச்சயமாகக் கரைந்து போகிறது. வேதங்களாகட்டும், சாத்திரங்களாகட்டும் , அதிகமாக எதைப்பற்றி விவரமாகக் கூறியுள்ளதோ அவை நன்மையளிப்பவையே என்பதை மறக்க வேண்டாம். அப்படிப்பட்ட கர்மங்களை அனுசரிப்பதில் வெளிமுகமாக நீ கர்த்தா, கர்மா, கிரியா போல தென்பட்டாலும் அந்த திரிகரணங்கள் "நானே" என்பதை மறக்காதே. கர்த்தா, போக்தா, சம்ஹர்த்தா என்ற மூன்று காரியங்களும் நானாகவே இருந்தேன் என்ற விஷயம் உன் மனதில் இருக்கும்போது பலனுக்காக சகஜமாகவே நீ ஆசைப்படமாட்டாய். அந்த பலனும் கூட நானே. ஆகையால் எப்போதும் என்னையே நினைத்து தான் செய்யும் காரியங்களை எனக்கு அர்ப்பணம் செய்து, யார் காரியங்களை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு என் உதவி, கிருபை, ரட்சனை எப்போதும் இருக்கும். இக் காரணத்தால் என்னை ஒவ்வொரு கணமும் ஸ்மரித்து வந்தால், அவர்களுடைய கர்மங்கள் என் பாதங்களில் சரணடைகின்றன. நான் சாயி சொரூபமே என்ற பாவம் வளர்த்துக்கொள். நானும், நீயும் வேறல்ல நீ என்னுடைய பிரதிபிம்பமே. நீ காண்பதெல்லாம் என் சொரூபமே என்ற நம்பிக்கை இருந்தால் நான் உன்னுடையவனே

பூஜ்ய ஶ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியின் அனுபவம்....


ஸ்வாமிஜி ஓரிடத்தில் குறிப்பிடுகையில் பின்வருமாறு எழுதுகிறார்.  "நான் சீரடியில் பாபாவின் சமாதியின் முன்பு அமர்ந்துக் கொண்டு, பாபா என்னைத் தன்னுடையவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதினேன். பாபா உண்மையிலேயே என் குரு என்றால், அதற்கான அறிகுறிகளை அவர் எனக்குக் காட்டவேண்டும்  என்று தீவிரமாக நினைத்தேன். நேரிடையாக அல்லாவிட்டாலும்,  ஒருவேளை கனவில் கூறுவாரோ என்று எண்ணி, அந்த எண்ணத்தையும் தள்ளிவிட்டேன்.
"பாபா, உனக்காக அற்புதங்கள், உன்னிடம் செய்து காட்டவேண்டும் என்று நினைக்கிறாயா ?" என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். அப்பொழுது சமாதி மந்திரில் ஒரு சிட்டுக் குருவி பறந்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். தான்தான் அந்த இடம் முழுவதற்கும் எஜமானர் என்ற எண்ணத்துடன் அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. பாபாவின் சமாதியை ஒரு பொருட்டாகவே அது மதிக்கவில்லை.
பாபா என்னைத் தன்னுடையவராக என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அறிகுறியாக, அந்த சிட்டுக்குருவி என் தோள்கள் மீது வந்து அமரவேண்டும்  என்று நினைத்தேன் . என்ன அசட்டுத்தனமான எண்ணம்!!. அந்தச் சிட்டுக்குருவியின் மூலம் பாபா என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
இதோ! அந்தச் சிட்டுக்குருவி என் தோள்களின் மீது வந்து அமர்ந்தது. என் உடல் நடுங்கியது. அதன் பிறகு அது அருகில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே பறந்து போய்விட்டது. நான் உணர்ச்சிப்பெருக்கால் திக்குமுக்காடிப் போனேன். நான் பெருமகிழ்ச்சி  பெற்று முழுமையான மனநிறைவைப் பெற்றேன். அந்த மாதிரித்தான் நான் என் குருவைக் கண்டேன் .பாபாவுக்கு இனணயானவர் "பாபாவே தான்".

Wednesday, May 2, 2018

என்றும் உன்னுடன் நான்…..



என் அன்பு குழந்தையே!
உன்னை என் பாதையில் இழுத்தது நானே.  பிறகு உனக்கு ஏன் இந்த அழுகையும் கலக்கமும்!  என் பாதையில் நீ பயணிக்க வேண்டும் என்ற தருவாயிலேயே, உனக்கான சோதனைக்காலம் ஆரம்பித்து விட்டது. தில் வ்வொரு கணமும் உன் நம்பிக்கை, பொறுமை, நிதானம், அன்பு, பக்தி இவை அனைத்தையும் நான் சோதிப்பேன். அது உனக்கு கஷ்டத்தை தர அல்ல.
வாழ்க்கையின் பக்குவத்தையும், ஆன்மீகத்தின் மகத்துவத்தையும் முழுமையாக நீ அறிய வேண்டும் என்பதற்காக, நீ பயணிக்கும் வழியில் என் துணை நிச்சயம் இருக்கும். ஆனால் வழியில் முட்களும் இருக்கும். நீ என்னதான் கவனமாக பார்த்து பார்த்து நடந்தாலும், சில முட்கள் உன்னைக்காயப்படுத்தும். காயம் வலியை உண்டாக்கும். ஆனால், அந்த வலியை நீ தூக்கி எறிந்து, தொடர்ந்து நடைப்போட்டு பயணித்தால், இறுதியில் உன் கால்கள், மலர்கள் நிறைந்த செம்மையான பாதையில் பயணிக்கும்.
யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும் என்றும் உன்னுடன், உன் சாய் அப்பா நான் துணையாக இருப்பேன். என் அன்பும் அருளும் ஆசியும் என்றும், எப்போதும் உனக்கு உண்டு. என் உயிராய் இருக்கும் என் இதய துடிப்பே, என் குழந்தையான உனக்கு, நான் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்


ஆலமரத்தின் மீது அமர்ந்து அதன் பழத்தை சாப்பிடும் பறவைகள், அந்த மரத்தின் மீது தான் எச்சமிடும். என் மீது எச்சமாகிவிட்டதே என்று மரம் பறவைகளை விரட்டுவது கிடையாது. அப்படியே, துரோகிகள் நம்மிடம் இருந்துகொண்டே துரோகம் செய்யும்போதும் பொறுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் பணி முடிந்ததும் சென்றுவிடுவார்கள். ஒன்று நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். அல்லது அவர்கள் திருப்தி அடைய வேண்டும். உங்களுக்கு கேடு நினைப்பவர்கள் உங்கள் கர்மாக்களைக் குறைப்பவர்கள். அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள். - 
ஸ்ரீ சாயி தரிசனம்

Tuesday, May 1, 2018

சாயியின் குரல்


பாபா என்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தைரியத்துடன் காத்திருந்த உனக்கு, இப்போது நம்பிக்கை குறைந்து விட்டது. அந்த அளவுக்கு சோதனைகள் பல உன்னை சூழந்துகொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று உறக்கத்தை இழந்துவிட்டாய். உன்னை எல்லோரும் அவமானப்படுத்துவது போலவும், கைவிட்டது போலவும், எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது போலவும் எல்லோரும் இருந்தும் அனாதையை போலவும் இப்போது நீ உணருகிறாய்... சங்கடங்களை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இப்போது உன்னிடம் இல்லை.. இன்னும் கூட உனது சோதனைகளை, கவலைகளை என்னால் பட்டியல் போட முடியும். குழந்தையே அனைத்தையும் நான் அறிவேன், இன்னும் சற்று காலத்திற்கு இதை நீ சகிக்கத்தான் வேண்டும். அதற்காக உனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி தைரியமாக இரு. உனது மனம் எதிரே தெரிகிற சங்கடங்களை நினைத்து நம்பிக்கை இழக்கிற காலகட்டத்தில் தான் நீ இருக்கிறாய். இந்த சூழ்நிலை தான் உனக்கு உண்மையான சோதனைக்காலம்.. இந்த காலகட்டத்தில் தான் நீ திடமான சிந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இறை நாமத்தை நீ உச்சரிக்கும் போது உன்னுடைய கர்மவினைகளின் பிடி தளருகிறது. எந்த நேரத்திலும், கஷ்டத்திலும் என் பெயரை உன் மனதில் இருத்தி எனது நாமத்தை உச்சரித்தபடி இருப்பாயானால் உனது கர்மவினைகளின் பலன் பனி போல் உருகி கரைவதை உணர்வாய்............................ சாயியின் குரல்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...