ஸ்வாமிஜி ஓரிடத்தில் குறிப்பிடுகையில் பின்வருமாறு
எழுதுகிறார். "நான் சீரடியில்
பாபாவின் சமாதியின் முன்பு அமர்ந்துக் கொண்டு, பாபா என்னைத் தன்னுடையவராக ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்று கருதினேன். பாபா உண்மையிலேயே என் குரு என்றால், அதற்கான அறிகுறிகளை அவர் எனக்குக் காட்டவேண்டும்
என்று தீவிரமாக நினைத்தேன். நேரிடையாக அல்லாவிட்டாலும், ஒருவேளை கனவில் கூறுவாரோ என்று எண்ணி, அந்த எண்ணத்தையும் தள்ளிவிட்டேன்.
"பாபா, உனக்காக அற்புதங்கள், உன்னிடம் செய்து காட்டவேண்டும் என்று நினைக்கிறாயா ?" என்று என்னையே நான்
கேட்டுக்கொண்டேன். அப்பொழுது சமாதி மந்திரில் ஒரு சிட்டுக் குருவி பறந்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்.
தான்தான் அந்த இடம் முழுவதற்கும் எஜமானர் என்ற எண்ணத்துடன் அது செயல்பட்டுக்
கொண்டிருந்தது. பாபாவின் சமாதியை ஒரு பொருட்டாகவே அது மதிக்கவில்லை.
பாபா என்னைத் தன்னுடையவராக என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்
என்பதற்கு அறிகுறியாக, அந்த சிட்டுக்குருவி என்
தோள்கள் மீது வந்து அமரவேண்டும் என்று
நினைத்தேன் . என்ன அசட்டுத்தனமான எண்ணம்!!. அந்தச் சிட்டுக்குருவியின் மூலம் பாபா
என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
இதோ! அந்தச் சிட்டுக்குருவி என் தோள்களின் மீது வந்து அமர்ந்தது. என் உடல்
நடுங்கியது. அதன் பிறகு அது அருகில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே பறந்து
போய்விட்டது. நான் உணர்ச்சிப்பெருக்கால் திக்குமுக்காடிப் போனேன். நான்
பெருமகிழ்ச்சி பெற்று முழுமையான
மனநிறைவைப் பெற்றேன். அந்த மாதிரித்தான் நான் என் குருவைக் கண்டேன் .பாபாவுக்கு
இனணயானவர் "பாபாவே தான்".
No comments:
Post a Comment