என் அன்பு குழந்தையே!
உன்னை என் பாதையில் இழுத்தது நானே. பிறகு உனக்கு ஏன் இந்த அழுகையும்
கலக்கமும்! என் பாதையில் நீ பயணிக்க வேண்டும் என்ற
தருவாயிலேயே, உனக்கான சோதனைக்காலம் ஆரம்பித்து விட்டது. இதில் ஒவ்வொரு கணமும் உன் நம்பிக்கை, பொறுமை, நிதானம், அன்பு, பக்தி இவை அனைத்தையும் நான் சோதிப்பேன். அது உனக்கு கஷ்டத்தை தர அல்ல.
வாழ்க்கையின் பக்குவத்தையும், ஆன்மீகத்தின்
மகத்துவத்தையும் முழுமையாக நீ அறிய வேண்டும் என்பதற்காக, நீ பயணிக்கும் வழியில் என்
துணை நிச்சயம் இருக்கும். ஆனால் வழியில் முட்களும் இருக்கும். நீ என்னதான் கவனமாக பார்த்து பார்த்து நடந்தாலும், சில முட்கள் உன்னைக்காயப்படுத்தும். காயம் வலியை உண்டாக்கும். ஆனால், அந்த வலியை நீ தூக்கி எறிந்து, தொடர்ந்து நடைப்போட்டு பயணித்தால், இறுதியில் உன் கால்கள், மலர்கள் நிறைந்த செம்மையான
பாதையில் பயணிக்கும்.
யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும் என்றும் உன்னுடன்,
உன் சாய் அப்பா நான் துணையாக இருப்பேன். என் அன்பும் அருளும்
ஆசியும் என்றும், எப்போதும் உனக்கு உண்டு. என் உயிராய் இருக்கும் என்
இதய துடிப்பே, என் குழந்தையான உனக்கு, நான் அம்மாவாக அப்பாவாக என்றும்
துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
No comments:
Post a Comment