Thursday, May 3, 2018

இரவும் பகலும் பாபா உன்னுடன் இருக்கிறார்.



(1918-ம் ஆண்டு) திருமதி தார்கட், அவரது மகன் இருவரும்  சாயிபாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.
பாபா: தாயே! இப்போதெல்லாம் நான் மிகவும் நச்சரிக்கப்படுகிறேன். சிலருடைய தேவை செல்வம், சிலருக்கு பெண்டிர், சிலருக்கு புத்திரர்கள். அந்தோ! என்னிடம் இருப்பதை யாரும் கேட்பதில்லை! நானும் பொறுத்து பொறுத்துப்போகிறேன்;  ஒரு தினம் திடீரென நான் மறைந்துவிடுவேன். எனக்கு அலுத்துவிட்டது.
திருமதி தார்கட்: பாபா, ஏன் இப்படி பேசுகிறீர்கள். எங்கள் கதி என்னாவது?
பாபா: ஏன் கவலை? உங்கள்  நலனை ஆண்டவன் பேணுகிறாரல்லவா? என் குழந்தைகள் என்னை நாடி வருவது என்னை மகிழ்விக்கிறது; அப்போது என் இரண்டு கவளங்கள் ஆகாரத்தையும் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டு மேலும் பருமனாகிறேன்.
சிறுவன்: தாங்களிடம் இருப்பதை கேட்டு பெற்றுக் கொள்ளவே நாங்கள் வருகிறோம். தாங்கள் அறிவீர்களல்லவா?
பாபா: ஆம், உங்களுக்கு அது கிட்டும்.
சிறுவன்: பாபா! அதை அடைவதற்கு முன் நான் இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்கவேண்டியிருக்கும் என்பது பற்றி தாங்கள் உறுதிமொழியை வேண்டுகிறேன்.
பாபா: இன்னும் மூன்று பிறவிகள் போதுமானது.
சிறுவன்: பாபா, ஆனால் தாங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள் அல்லவா?
பாபா: ஆஹா! உன்னுடன் முன்னரே எத்தனை பிறவிகள் இருந்திருக்கிறேன் என்பதை அறிவாயா? மீண்டும் மீண்டும் நாம் சந்திப்போம். இரவும் பகலும் என் குழந்தைகளை நான் பேணி வந்து, ஆண்டவனிடம் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியுள்ளது. நானும் நீயும் வேறல்ல: கர்மங்களைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் தர்க்கம் செய்யவேண்டாம்.
ஜீவர்களுக்கு நன்மை உண்டாக்கவே கர்மங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. யாருக்கு எது நலமோ அது முன்பாகவே தீர்மாணிக்கப்பட்டுள்ளது. நல்ல கர்மங்களை அனுசரிப்பதன் மூலமே கர்மா நிச்சயமாகக் கரைந்து போகிறது. வேதங்களாகட்டும், சாத்திரங்களாகட்டும் , அதிகமாக எதைப்பற்றி விவரமாகக் கூறியுள்ளதோ அவை நன்மையளிப்பவையே என்பதை மறக்க வேண்டாம். அப்படிப்பட்ட கர்மங்களை அனுசரிப்பதில் வெளிமுகமாக நீ கர்த்தா, கர்மா, கிரியா போல தென்பட்டாலும் அந்த திரிகரணங்கள் "நானே" என்பதை மறக்காதே. கர்த்தா, போக்தா, சம்ஹர்த்தா என்ற மூன்று காரியங்களும் நானாகவே இருந்தேன் என்ற விஷயம் உன் மனதில் இருக்கும்போது பலனுக்காக சகஜமாகவே நீ ஆசைப்படமாட்டாய். அந்த பலனும் கூட நானே. ஆகையால் எப்போதும் என்னையே நினைத்து தான் செய்யும் காரியங்களை எனக்கு அர்ப்பணம் செய்து, யார் காரியங்களை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு என் உதவி, கிருபை, ரட்சனை எப்போதும் இருக்கும். இக் காரணத்தால் என்னை ஒவ்வொரு கணமும் ஸ்மரித்து வந்தால், அவர்களுடைய கர்மங்கள் என் பாதங்களில் சரணடைகின்றன. நான் சாயி சொரூபமே என்ற பாவம் வளர்த்துக்கொள். நானும், நீயும் வேறல்ல நீ என்னுடைய பிரதிபிம்பமே. நீ காண்பதெல்லாம் என் சொரூபமே என்ற நம்பிக்கை இருந்தால் நான் உன்னுடையவனே

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...