Tuesday, May 8, 2018

எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன்



யாருடைய கண்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்து உருகி ஓடுகின்றனவோ அவர்கள் என்னிடம் ஆத்மார்த்தமாக வேண்டுகிறார்கள். மற்றவர்கள் அந்த அவசியத்தில் இல்லை என்பதால், மேம் போக்காக வேண்டுகிறார்கள். எந்த வெள்ளம் கரை புரண்டுவருகிறதோ, அந்த வெள்ளம் மேலும் புதிய வழிகளை உண்டாக்குகிறது. எங்கே நீர் வரத்து இல்லையோ அங்கே வழிகள் உண்டாவதில்லை. இதுதான் கண்ணீருடன் வேண்டுகிற வேண்டுதலுக்கும், கடமைக்காக வேண்டுகிற வேண்டுதலுக்கும் இடையேயுள்ள வித்தியாசம்.
என்னிடமிருந்து பறித்துக்கொண்டாயே எனக் கேட்டு அழாதே. நீ என்னைப் பற்றிக் கொண்டு என்னுனேயே இருக்கிறாயே! நான் என்ன பேறு பெற்றவன் என எண்ணி அழுது என்னைப் போற்று. என்னை வணங்குவதற்காக பூஜை புனஸ்காரங்கள் செய்வதையும், பிறர் பாராட்ட நடந்து கொள்வதையும் தவிர்த்துவிடு. நான் இதை விரும்புவதில்லை. வெளிப்படையான ஆடம்பர வழிபாட்டுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை.
காரணம், அதைச் செய்வதற்கான பலனை உடனே அடைந்துவிட முடியும். அதற்கு மேல் பலனை எதிர்பார்க்க முடியாது அல்லவா? ஆத்மார்த்தமாக -இதயத்திற்குள் என்னை குடியேற்றி, அங்கே என்னை வழிபடு. அப்போது உன் மனதும், செயலும் யாருக்கும் தெரியாது. அனைத்தும் ரகசியமாக இருப்பதால், நானும் எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன்.

Monday, May 7, 2018

அனைத்தையும் நான் அறிவேன்



"அன்புக் குழந்தையே... ஏன் என்னை விட்டு தள்ளி நிற்கிறாய் உன் கஷ்டங்கள் அனைத்தையும் நான் அறிவேன் , என்னை உன் மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் நேசிக்கிறாய் நினைக்கிறாய் , அதே நேரத்தில் உன் துன்பங்களை நினைத்து உனக்குள் புலம்பி கொண்டு என்னை விட்டு ஒரு அடி தள்ளி நிற்கிறாய் , நீ உலகியில் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடு, ஆனால் நீ செய்கின்ற எல்லா விஷயங்களையும் நான் அறிவேன்,
சில நேரம் நீ ஏன் இப்படி பேசுகிறாய் நடக்கிறாய் என்பதையே கூட உன்னால் உணர முடியவில்லை, உன்னுள் தேவையில்லாத குப்பைகளை நீ தூக்கி கொண்டு நடக்கிறாய் , அதனால் தான் உன்னில் இருக்கும் விஷயங்களை கூட உன்னால் உணர முடியவில்லை,  நீ செய்வதாக நினைக்கிற அனைத்தும் உன் சாய் அப்பாவான நான் தான் செய்கிறேன், நீ பேசுவதாக நினைக்கும் அனைத்துமே நான் தான் உன் இடத்தில் இருந்து பேசுகிறேன், ஏனென்றால் நீ வெறும் பொம்மலாட்த்தில் இசைகேற்ப ஆடும் பொம்மை தான் நீ ,உன் சாய் அப்பா தான் அதை ஆடி வைக்கும் கருவி ,அதனால் நீ பயப்பட தேவையில்லை உன்னை நல்ல வழியில் வழி நடத்தி செல்வேன் ,உன் அம்மாவாக அரவனைத்து, அப்பாவாக நல்லது கெட்டதை அறிவுறுத்தி, உன்னை என் கண்ணுக்குள்ளும், மனதிலும் வைத்து பாதுகாப்பேன்.."ஓம் ஸ்ரீ சாய் ராம்...

ஒரு கிண்ணம் மோர்



ஒருமுறை கூட்டத்திலிருந்த போது ஹேமத்பந்த் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார்.  அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் கொடுத்தார்.  அதன் வெள்ளையான தோற்றம் அவரை மகிழ்வித்தது.  ஆனால் வயிற்றில் அதற்கு இடம் இருக்காது என்று அஞ்சி லேசாக உறிஞ்சினார்.  மிகவும் சுவையாக இருந்தது.  அவரது தடுமாறும் எண்ணத்தைப் புரிந்துகொண்ட பாபா, "எல்லாவற்றையும் குடித்துவிடு.  இனிமேல் இம்மாதிரி வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார்.  அப்போது ஹேமத்பந்த் அதை முழுக்கவும் பருகினார்.  பாபாவின் உரை தீர்க்கதரிசனமானது என்று கண்டார்.  ஏனெனில் பாபா சீக்கிரத்தில் மஹாசமாதியடைந்தார்.
இப்போது வாசகர்கள் ஹேமத்பந்துக்கு நிச்சயம் நன்றி செலுத்த வேண்டும்.  அவர் கிண்ணத்தில் இருந்த மோரை அருந்தினார்.  ஆனால் பாபாவின் லீலைகள் என்ற ரூபத்தில் வேண்டிய அளவு அமிர்தத்தை நமக்கு விநியோகித்தார்.  பற்பல கிண்ணங்கள் அமிர்தத்தை நாம் பருகுவோம், திருப்தியடைந்து மகிழ்வோம்.

Sunday, May 6, 2018

உனக்குப்பதிலாக நான் தாங்குவேன்!



என் அன்பு குழந்தையே உன் மனக்குமுறல், உன் அழுகை இவை அனைத்தும், என் காதில் எப்படி விழாமல் இருக்கும். அந்த நேரத்தில் உன் மனதில் தோன்றிய வலி, எனக்கு என் பிள்ளையான உன்னை நினைத்து பயம் ஏற்படுகிறது. என் பிள்ளையின் வாழ்க்கையை இப்படி வலி உள்ளதாய், மாயை ஆட்டி வைத்து, தற்க்காக சிரிக்கின்றோம், எதற்காக அழுகின்றோம் என்பதை கூட உணராமல், போகிற நேரத்தில், வாழும் கட்டாயத்தில் என்கின்ற உணர்வு, என் பிள்ளைக்கு இப்போதே தோன்றுகிறதே என்று என் மனம் அழுகிறது. வாழ்க்கையில் உள்ள உயிரோட்டத்தை என் பிள்ளை கடக்கும் தருவாயில் மனதில் கஷ்டங்ளை சுமந்து வ்வொரு நாளையும் இப்படி கடக்கின்றதை பார்த்து, என் கண்ணில் வேதனையால் கண்ணீர்  கொட்டுகிறது. உனக்கான பக்கபலமாய் நான் இருக்கிறேன், சில நேரங்கள் நான் உன் சாய் அப்பா மௌனம் காக்கின்றேன். அதற்குக்காரணம் என் மௌனம் உனக்கு சில விஷயங்களை புரிய வைக்கும். அது உன் தவறுகளைச் சரி செய்யவும் உதவும். மனித  வாழ்க்கையில் ஒரு சிறிய மௌனம், நிறைய விஷயங்களை உணர்த்தி வாழ்க்கைக்கு பக்குவத்தை ஏற்படுத்தும்  என்றுதானே உனக்குத்தெரியும்.  ஆனால் இன்று வலியால் நீ அழுகையில் நீ உன் மனதின் வேதனையையும் கஷ்டத்தையும் வெளியில் குமுறலாய் கொட்டித் தீர்த்தாய்.
அதைப் பார்த்து உன் சாய் அப்பா ஆகிய நான் அதிர்ந்து என் செய்வது என்று அறியாது திகைத்து உள்ளேன். என் பிள்ளையின் சந்தோஷம் தான் என் சிரிப்பு. என் பிள்ளையின் கஷ்டம் தான் எனக்கு ஏற்பட்ட வலி. அதை உனக்குப்பதிலாக நான் தாங்குவேன்.
என் குழந்தையே ரு போதும் உன் சாய் அப்பா உன்னை தனித்து விட மாட்டேன்.  உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. உன்னை விலகிப் போகும் படி நான் செய்வதும் இல்லை. என் குழந்தையின் வலி பனி போல் வாழ்க்கையில் இருந்து தூரப்படுத்தும் வெளிச்சத்தின் சூரியனாய் நான் உன் உயிரான சாய் இருப்பேன். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை காப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

பாபா காட்டிய மூன்று உலகங்கள்



சத்சரித்திரம் பதிவு செய்யாத பல அற்புத லீலைகள் உள்ளன. அவற்றைப் பற்றியும் பார்க்கலாம்.
பாபாவின் முதன்மை பக்தர் என்று சொல்லிக்கொள்ளும் பெருமை சாமாவுக்கு உண்டு. கிருஷ்ணனுக்கு அர்ஜுனன் என்றால், பாபாவுக்கு சாமா. குழந்தைத்தனமாகவும், உரிமையோடும் பாபாவிடம் உறவு கொண்டாடுவார் சாமா.
சாமாவுக்கு சத்தியலோகம், வைகுந்தம், கைலாயம் போன்றவை இருக்கிறதா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதைப் பற்றி பாபாவிடமே கேட்டார். பாபா “இருக்கிறது என்று சொன்னதும், ’ ஹரே தேவா! அதை ஏன் இன்னும் என்னிடம் காட்டவில்லை?’ என்றார் சாமா.
அவையெல்லாம் மேலான ஐஸ்வர்யம் உள்ள இடங்கள். அவற்றை நம்மால் காணக்கூட முடியாது என்றார் பாபா. அதை எப்படியேனும் நான் பார்த்தாக வேண்டும் என சாமா அடம்பிடித்தார். உடனே சாமாவை கண்களை மூடச் சொன்னார் பாபா. சாமா கண்களை மூடியதும் அவருக்கு ஞான திருஷ்டி உண்டாயிற்று.
முதலில் வைரம் போன்ற உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கும் ஒருவரையும் பார்த்தார் சாமா. அவரது இரு பக்கங்களிலும் வரிசையாக சிம்மாசனங்களும், அவற்றில் தேவர்கள் மற்றும் ரிஷிகள் பலரும் அமர்ந்திருந்தார்கள்.
சாமா உன் கண்களைத் திற என்றார் பாபா. கண்களைத் திறந்தபோது, மீண்டும் மூடிக்கொள் என்றார்.
இப்போது சாமா வைகுந்தத்தையும் அதில் நாராயணன் லட்சுமி தேவியையும் தரிசித்தார். இங்கும் பல அதிசயங்களைக் கண்டார்.
அடுத்து அவரை கண்களைத் திறந்து மூடுமாறு பாபா சொன்னபோது, சாமா கண்களைத் திறந்து மூடினார். இந்த முறை அவர் கைலாயத்தை தரிசித்தார். இவற்றையெல்லாம் தரிசித்த போது சாமாவுக்கு பயம் வந்துவிட்டது. திகிலோடு கண் திறந்தார். அவரைத் தட்டிக் கொடுத்த பாபா, 'சாமா, இவையெல்லாம் நமக்கு வேண்டாம். நமது வழி முறைகள் வழக்கத்திற்கு மாறானதுஎன்றார்.

Saturday, May 5, 2018

என்னை அணுகுவது எப்படி?



என் மீது நம்பிக்கை முழு அளவில் இருந்தால், நீங்கள் பொறுமை காக்கவேண்டும். என்னை ஏன் கைவிட்டீர்கள் எனக் கேட்டு, உன் அருகில் நான் இருக்கும்போதே, நீங்கள் தூர விலகிச் செல்லாதீர்கள்.
எந்த நேரத்திலும் முடியாது, கூடாது, நடக்காது, நடக்கவில்லை, நேரவில்லை, வாய்ப்பு இல்லை, முடியவில்லை, பொறுமையில்லை என இல்லை, இல்லை என்ற வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்தும், மனதிலிருந்தும் முற்றிலுமாக நீக்கிவிடுங்கள்.
நாளை தருவார், அடுத்த ஆண்டு தருவார், இனிமேல் செய்வார் என்று என் அற்புதத்தை நீங்கள் தள்ளிப்போடாதீர்கள். நான் எப்போது செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க விரும்பினால் இப்போதே செய் என உறுதியோடு கேளுங்கள்.  
ஓம்ஜெய்சாய்ராம்

எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்



"இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை.  இப்போது உனக்குக் கவலையில்லை.  என்மீது முழு நம்பிக்கையையும் வை.  நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்!"
"ஓ! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கிறோம்.  எனவே தங்கள் முன் வீழ்ந்து பணிகின்றோம்.  எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும்.  பற்பல எண்ணங்கள் கனவிலும், நனவிலும் எங்களை தொல்லைப்படுத்துகின்றன.  எங்கள் மனதை அவைகளிலிருந்து எல்லாம் தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்"
                                                                                                                 சாயி சத்சரிதம் அத்தியாயம்-48

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...