"அன்புக் குழந்தையே... ஏன் என்னை விட்டு தள்ளி நிற்கிறாய் உன் கஷ்டங்கள்
அனைத்தையும் நான் அறிவேன் , என்னை உன் மனத்தில் வைத்து
பூஜிக்கிறாய் நேசிக்கிறாய் நினைக்கிறாய் , அதே நேரத்தில் உன்
துன்பங்களை நினைத்து உனக்குள் புலம்பி கொண்டு என்னை விட்டு ஒரு அடி தள்ளி
நிற்கிறாய் , நீ உலகியில் விஷயங்களுக்கு
முக்கியத்துவம் கொடு, ஆனால் நீ செய்கின்ற எல்லா
விஷயங்களையும் நான் அறிவேன்,
சில நேரம் நீ ஏன் இப்படி பேசுகிறாய் நடக்கிறாய் என்பதையே
கூட உன்னால் உணர முடியவில்லை, உன்னுள் தேவையில்லாத
குப்பைகளை நீ தூக்கி கொண்டு நடக்கிறாய் , அதனால் தான் உன்னில்
இருக்கும் விஷயங்களை கூட உன்னால் உணர முடியவில்லை, நீ செய்வதாக நினைக்கிற
அனைத்தும் உன் சாய் அப்பாவான நான் தான் செய்கிறேன், நீ பேசுவதாக
நினைக்கும் அனைத்துமே நான் தான் உன் இடத்தில் இருந்து பேசுகிறேன், ஏனென்றால் நீ வெறும் பொம்மலாட்த்தில் இசைகேற்ப ஆடும் பொம்மை தான் நீ ,உன் சாய் அப்பா தான் அதை ஆடி வைக்கும் கருவி ,அதனால் நீ பயப்பட
தேவையில்லை உன்னை நல்ல வழியில் வழி நடத்தி செல்வேன் ,உன் அம்மாவாக அரவனைத்து, அப்பாவாக நல்லது கெட்டதை
அறிவுறுத்தி, உன்னை என் கண்ணுக்குள்ளும், மனதிலும் வைத்து பாதுகாப்பேன்.."ஓம் ஸ்ரீ சாய் ராம்...
No comments:
Post a Comment