என் மீது நம்பிக்கை முழு அளவில் இருந்தால், நீங்கள் பொறுமை
காக்கவேண்டும். என்னை ஏன் கைவிட்டீர்கள் எனக் கேட்டு, உன் அருகில் நான் இருக்கும்போதே, நீங்கள் தூர விலகிச் செல்லாதீர்கள்.
எந்த நேரத்திலும் முடியாது, கூடாது, நடக்காது, நடக்கவில்லை, நேரவில்லை, வாய்ப்பு இல்லை, முடியவில்லை, பொறுமையில்லை என இல்லை,
இல்லை என்ற
வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்தும், மனதிலிருந்தும் முற்றிலுமாக நீக்கிவிடுங்கள்.
நாளை தருவார், அடுத்த ஆண்டு தருவார், இனிமேல் செய்வார் என்று என்
அற்புதத்தை நீங்கள் தள்ளிப்போடாதீர்கள். நான் எப்போது செய்ய வேண்டும் என்பதை
தீர்மானிக்க விரும்பினால் இப்போதே செய் என உறுதியோடு கேளுங்கள்.
ஓம்ஜெய்சாய்ராம்
No comments:
Post a Comment