Thursday, June 7, 2018

உன்னுடன் நான் இருக்கிறேன்.




மனம் தடுமாறும், முன்னே செல்ல நான்கு படிகள் ஏறினால், பின்னே இழுக்க உன் எண்ணங்கள் உன்னை குழப்பும்.  மனதை ஒருமுகப்படுத்து. உன் சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக சீர் ஆகும். உன் எண்ணங்கள் புதுமை அடையும். உன் வாழ்வில் மெல்ல மெல்ல சூரியனின் வெளிச்சம்  உதயமாகும்.

உன் எண்ணங்கள் நேர்மறையாய், ஆனால் உனக்கான நிம்மதி, சந்தோஷம் பிறக்கும். உலகத்தில் என்ன மாறினாலும், நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன். உன்னில்,  எப்போதும் நான் இருப்பேன். உன் அன்பின் ஆழத்தையும், உன் பக்தியின் தூய்மையையும், உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவன் ஆகிய நான் அறிவே.

என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ.
நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை என் இதயத்தின் கருவறையில் சுமந்து  அரவணைப்பேன்.

Wednesday, June 6, 2018

பாபாவின் சக்தி



என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும். ஆனால், அது பாபாவின் விருப்பப்படியே நடக்கும் என்ற திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருங்கள். வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அம்ருதமோ விஷமோ, இந்த இரட்டைச் சூழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டாம், அழவும் வேண்டாம். எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். பாபாவே நமது ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரே!
          நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் 
நான் நிச்சயமாக அதை தாங்குவேன்"
பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை.

Tuesday, June 5, 2018

ஜன்ம ஜன்மமாய் காப்பாற்றுவேன்


இனிமேலாவது நல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய்.. எதிர்மறை எண்ணங்களோ, எதிர்மறைப் பேச்சுக்களோ உனது வாயிலிருந்து புறப்பட வேண்டாம்.
அவநம்பிக்கையை உண்டாக்கும் எந்தப்பேச்சுக்கும் உனது மனம் இடம் தரவேண்டாம். அனைத்தையும் செய்கிற நான் இருக்கும்போது, எல்லாம் சுபமாக நடக்கும் என நினை.. நான் அனைத்தையும் உனக்காக மாற்றுவேன்..
ஏமாற்றுவேன் என நினைக்காதே.. எனது சொற்படி நடந்தால் உனது வாழ்க்கை சொர்க்கமாக மாறும், நீ சொன்னதெல்லாம் நடக்கும். துன்பத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பாய்.. நானும் உனது கடவுளாக இருந்து, ஜன்ம ஜன்மமாய் காப்பாற்றுவேன்.. நேரம் வரும்போது மீண்டும் சந்திக்கிறேன்.. அதுவரை நான் சொன்னதையெல்லாம் மனதில் வைத்து பயிற்சி செய்து வா!
மங்களம் உண்டாகும்!

Monday, June 4, 2018

உன்னில் நான் இருப்பேன் இருக்கிறேன்!!!

கீரப்பாக்கம் சாயி பேராலய கும்பாபிஷேகம்


என் அன்பு குழந்தையே உன்னை நினைத்து நான் கவலைப்படுவதா அல்லது வருத்தப்படுவதாஉன் மனதில் இருக்கும் சங்கடம் ஒன்றா இரண்டா? அதை பட்டியல் இடலாம்உன் மனதிற்கு வரும் துன்பங்கள்கஷ்டங்கள் ஒரு பக்கம்மேலும் நீயாய் நினைத்து மனதில் அதை இறுத்திக் கொண்டு ஏற்படுத்திய கஷ்டங்களும், மன வலியும் ஒரு பக்கத்தில் உருவாக்கியுள்ளாய்நமது கஷ்டங்களையும் துன்பத்தையும் கண்ணில் விழுந்த தூசி போல, அதை நீ கசக்கினால் தான் உனக்கு கண்ணில் வலி ஏற்படும்அதை போலவே தான் நீ உன் துன்பத்தை மட்டுமே நினைப்பதால் தான் இன்று வரை நான் உனக்கு அளிக்கும் விஷயங்களை உன்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லைநீ என்னைப் பார்க்கும் போது கண்ணில் ஆனந்தமும்மனதில் வேதனையும் தெரியுதேஎன் பிள்ளையான நீ வேதனை கொள்ளலாமா உனக்கு நான் இருக்கிறேன்உன் மனம் என்பது குழந்தையின் மனதைப்போல், பளிங்கு  போல் பளிச்சென்று தெளிவாக உள்ளது ஆனால் நீயோ அதை உணராமல் தேவையில்லாத விஷயங்களை நினைத்து புலம்பி வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாய் இவ்வுலகில் தவறு செய்யாதவர்கள் என்று யாரும் இல்லை சிலர் தெரிந்து தெரியாததுமாய் செய்கிறார்கள்அவர்களுக்கான சூழ்நிலை நேரம் மற்றும் அவர்களின் வினையின் பயனால் செய்த தவறுக்கு மனவலியும் வேதனையும் அடைகிறார்கள்உன் மனதில் ஏற்படும் அனைத்திற்கும் பொறுப்பு நானேஉன் தவறை நினைத்து வருந்துகிறாய்திருத்திக்  கொள்ளவும் நினைக்கிறாய்அது அப்படியே நடக்கும்உன்னை நல்வழிப்படுத்தவே ஜென்ம ஜென்மமாய் உன் பின்தொடர்ந்து வருகிறேன். அதை நிறைவேற்றியும் தருவேன்அதனால் நீ கவலைப்படாதே, எதற்காக பயப்படுகிறாய் நான் இருக்கையில்உன்னை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்வாழ்க்கையில் உன் துன்பத்தை காற்றாடி போலவே தான் காற்று எந்த திசையில் இருக்கிறதோ, அந்த திசையில் தான் அது பறக்கும் அதை வேறு பக்கம் திசை திருப்ப நினைத்தால் அது பறக்காதுஅது போல் தான் உன் வாழ்க்கையும் உன் வாழ்க்கை என்னும் காற்றில் துன்பமும்சந்தோஷமும் இரண்டும் ஒரே அளவு தான் சந்தோஷத்தை ஆனந்தமாய் எடுத்து ரசிக்கிறாய்கஷ்டத்தை கண்டு ஓடுகிறாய். அதனால் தான் அது உன்னை துயரத்தில் துரத்துகிறது இரண்டுமே ஓரே அளவில் நீ நினைக்கவும் கடந்து போவதற்கும் பழகிவிட்டால் உன் வாழ்க்கை சோலைவனமாய் இருக்கும் நீ எதற்கும் பயப்படாதே யாரும் துணை இல்லை என்று நினைக்காதே, நீ நிச்சயம் வெற்றி காண்பாய் மிக விரைவில் உயர்ந்து நிற்பாய் வாழ்க்கையில், உனக்கு தாயாக தந்தையாக நான் இருக்கிறேன்உன்னில் நான் இருப்பேன் இருக்கிறேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Sunday, June 3, 2018

ஆபாந்தராத்மாவாக பாபா



பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணரவேண்டும். பாபா எங்கே போய்விட்டார்? பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும். எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! தாமோதர் ராசனேயிடம், " என்னை எண்ணிய மாத்திரத்தில், நான் வந்து விடுகிறேன் " என்றும், ஸ்ரீமதி தார்கட் அம்மையாரிடம் "தாயே! நான் எங்கும் போகவில்லை. என்னை எப்போது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்" என்றும், " என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்" என்றும் கூறிய நம் தேவனுக்கு வாரிசு என்றோ, அவருடைய மறு அவதாரமென்றோ யாராவது கூறிக் கொள்வது எங்ஙனம் தகும்?  தம்முடைய வாரிசு என்று பாபா எவரையும் குறிப்பிடவில்லை.
"பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது. கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதைபோன்றே பாபாவின் பீடமும் ! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆபாந்தராத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

Saturday, June 2, 2018

துன்பங்களுக்கான நிவாரணத்தை வழங்குவேன்...........



அன்பு குழந்தையே ! 

உன்னை தேற்றுவதற்காகவும் , உதவிகள் செய்வதற்காகவும் இதோ நான் உன்னோடுதான் இருக்கிறேன்.  இப்போது நீ மெல்ல மெல்லத் தளர்ந்து விட்டாய். வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து விட்டது. சுற்றி இருப்பவர்களை பார்த்தால் எரிச்சலும் கோபமும் வருகிறது. கர்மா என்று எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை, விதி என்று தள்ளி விடவும் முடியவில்லை என்ற பரிதவிப்பிலேயே ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகிறாய்.
என் குழந்தாய் பொறுமையாக இரு. சகித்துக்கொள் .நம்பிக்கையுடன் இரு. என்னை நம்பி சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன். என் வார்த்தையை காப்பாற்ற நான் பாடுபடுவேன் . உன் மனதிலுள்ள சகல துக்கங்களும் மாறும். இதுவரை சதா காலமும் நீ துன்பத்தை நினைத்துக்கொண்டு இருந்ததால் அதன் தாக்கம் இன்றுவரை இருக்கிறது. இதை மாற்ற இனி எப்போதும் என் நாமத்தையே உச்சரித்து வா. அது உனக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் அந்த மாற்றம் உன்னை என்னிடத்திற்கு அழைத்துவரும் .அப்போது உன்னை தூக்கித் துடைத்து உனது துன்பங்களுக்கான நிவாரணத்தை வழங்குவேன்...........
--சாயியின் குரல்.

Friday, June 1, 2018

ஆம்ர லீலா (மாம்பழ அற்புதம்)


ஒருமுறை 300 நல்ல மாம்பழங்கள் கொண்ட ஒரு பார்சல் ஷீர்டிக்கு வந்தது.  அது கோவாவிலிருந்து ராலே என்ற மம்லதரால் பாபாவுக்காக ஷாமாவின் பேரில் அனுப்பப்பட்டு இருந்தது.  அது திறக்கப்பட்டதும் எல்லா மாம்பழங்களும் நன்றாக இருந்தன.  அவைகளில் நான்கை மட்டும் தமது கோலம்பாவில் வைத்துக்கொண்டு மீதியை ஷாமாவிடம் ஒப்படைத்தார்.  "இந்த நாலு பழமும் தாமு அண்ணாவுக்கு, அவைகள் இங்கேயே இருக்கட்டும்" என்றார் பாபா.

இந்த தாமு அண்ணாவுக்கு மூன்று மனைவிகள்.  முன்னரே சொல்லப்பட்ட அவருடைய வாக்குமூலத்தின்படி அவருக்கு மூன்று அல்ல, இரண்டு மனைவியர் தாம்.  அவருக்குக் குழந்தை இல்லை.  பல ஜோசியர்களைக் கலந்தும் தாமே ஜோதிடத்தை ஓரளவு கற்றும் ஒரு பாபா கிரகம் தன ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என அறிந்து கொண்டார்.  ஆனால் பாபாவிடம் அவருக்குப் பெரும் நம்பிக்கை உண்டு.  மாம்பழம் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் பாபாவை வணங்க அவர் ஷீர்டிக்குச் சென்றபோது, மற்றவர்களெல்லாம் அந்த மாம்பழத்துக்காக ஏங்கினார்களாயினும், அவை தாம்யாவினுடையதே.  யாரைச் சேரவேண்டுமோ அவர் அதை "உண்டு மரிக்கவேண்டும்" என பாபா கூறினார்.

இவ்வார்த்தைகளை முதலில் தாமு அண்ணா கேட்டபோது அதிர்ச்சி அடைந்தார்.  ஆனால் மஹல்சாபதி அவைகளை விளக்கினார்.  சாவு என்பது 'தான்' என்ற அஹங்காரச் சாவு ஆகும்.  அது பாபாவின் திருவடிகளருகில் நிகழ்வது ஓர் ஆசியேயாகும்.  மனம் தெளிந்து தாம் பழத்தை வாங்கிச் சாப்பிடுவதாகத் தாமு கேட்டுக்கொண்டார்.  ஆனால் பாபா அவரிடம், "நீயே திண்ருவிடாதே.  உனது இளைய மனைவிக்குக் கொடு.  இந்த ஆம்ரலீலா (மாம்பழ அற்புதம்) அவளுக்கு நான்கு மகன்களையும், நான்கு மகள்களையும் கொடுக்கும்".  காலப்போக்கில் பாபாவின் மொழிகளே உண்மையாயின, ஜோசியர்களுடையது அல்ல என்றும் அறியப்பட்டது.

பாபாவின் கூற்றுக்களின் திறமும், பெருமையும் அவர் வாழ்நாளில்தான் நிரூபனமாயிற்றென்றால், ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  அவர் சாமதியடைந்த பின்னும் அது மாதிரியே நிகழ்ந்தன.  "நான் இறந்து விட்டபோதிலும் என்னை நம்புங்கள்.  எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும்.  நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன் என்னுடைய சமாதியும் பேசும், கூடச் செல்லும், தொடர்புகொள்ளும்.  நான் உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள்.  எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள்.  ஆனால் என்னையே எப்போதும் நினைவு கூறுங்கள்.  உள்ளம், உயிர் இவற்றால் என்னை நம்புங்கள்.  அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்" என்றார்.
                                        சாயி சத்சரிதம் அத்தியாயம்-25

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...