அன்பு குழந்தையே !
உன்னை தேற்றுவதற்காகவும் , உதவிகள் செய்வதற்காகவும் இதோ
நான் உன்னோடுதான் இருக்கிறேன். இப்போது நீ மெல்ல மெல்லத் தளர்ந்து விட்டாய். வாழ்க்கையின்
மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து விட்டது. சுற்றி இருப்பவர்களை பார்த்தால்
எரிச்சலும் கோபமும் வருகிறது. கர்மா என்று எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை,
விதி என்று
தள்ளி விடவும் முடியவில்லை என்ற பரிதவிப்பிலேயே ஒவ்வொரு நாளையும் நகர்த்தி
வருகிறாய்.
என் குழந்தாய் பொறுமையாக இரு. சகித்துக்கொள்
.நம்பிக்கையுடன் இரு. என்னை நம்பி சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக
என் உயிரையும் கொடுப்பேன். என் வார்த்தையை காப்பாற்ற நான் பாடுபடுவேன் . உன்
மனதிலுள்ள சகல துக்கங்களும் மாறும். இதுவரை சதா காலமும் நீ துன்பத்தை
நினைத்துக்கொண்டு இருந்ததால் அதன் தாக்கம் இன்றுவரை இருக்கிறது. இதை மாற்ற இனி
எப்போதும் என் நாமத்தையே உச்சரித்து வா. அது உனக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும்
அந்த மாற்றம் உன்னை என்னிடத்திற்கு அழைத்துவரும் .அப்போது உன்னை தூக்கித் துடைத்து
உனது துன்பங்களுக்கான நிவாரணத்தை வழங்குவேன்...........
--சாயியின் குரல்.
No comments:
Post a Comment