Tuesday, July 22, 2014

சமாதி மந்திர்

green

மனிதன் எத்தனையோ விஷயங்களை முன்கூட்டித்திட்டமிடுகிறான். சில நேரம் நண்பர்கள், உறவினர்கள், வல்லுனர்கள் ஆகியோரைக் கலந்தாலோசிக்கவும் செய்கிறான்.



மனித முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் தெய்வ அருளும் கூடி வரும்போது எண்ணியது எண்ணியபடி அமையும். மனிதன் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தெய்வ சங்கல்பத்தின்படிதான் செயல்கள் நிகழும் என்பது மனிதனுக்கு காலம் கற்றுத் தரும் பாடம். காலம் கடந்த பின்னரே இதை நாம் புரிந்து கொள்கிறோம்.



ஷீரடியில் ஒரு மாளிகையைக் கட்டிய பாபுசாகேப் புட்டி, அதன் நடுவில் ஒரு மேடை அமைத்து அதில் முரளிதரனின் சிலையை வைக்க பாபாவின் சம்மதம் வேண்டினார். பாபாவும் அதற்கு சம்மதித்து, "கோவில் வேலை முடிந்தவுடன் நான் அங்கு தங்குவேன்!" என்று கூறினார். தான் கட்டி முடித்த மாளிகையில் பாபா வந்து தங்கப்போகிறார் என்பதை அறிந்த புட்டி, மிகவும் மனம் மகிழ்ந்தார். ஆனால் 'நடக்கப் போவது என்ன?' என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.



சாயிபாபா, தான் உடலைத் துறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்திருந்தார். புட்டியின் மாளிகையைத் தனது சமாதிக் கோவிலாகத் தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, புட்டியின் வேண்டுகோளுக்குச் சம்மதித்த பாபா, அங்கு முரளிதரனாக தானே வரப்போவதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில்தான், "கோவில் வேலை முடிந்தவுடன் நான் அங்கு தங்குவேன்!" என்று கூறினார்.

எல்லாவற்றிலும் உள்ள இறைவனாக பாபாவை வழிபடு!

20144

பாபா: நானா (பாபாவின் நெருங்கிய பக்தர்), எனக்கு பூர்ண போளி வேண்டும். அதை நைவேத்யமாக தயார் செய்து கொண்டு வா.



அதன் பிறகு நானா எட்டு பூர்ண போளிகளும் அதற்கேற்ற பண்டங்களையும் தயார் செய்ய வைத்து, பாபாவின் முன் கொண்டு வந்து சமர்பித்தார்.

நானா:பாபா உட்கொள்ளுங்கள்.



பாபா சற்று நேரம் தாமதித்தார். போலியின் மீது ஈக்களும் எறும்புகளும் மொய்க்கலாயின.



பாபா: நல்லது, இந்த தட்டுகளை எடுத்துச் செல்.



நானா: அவற்றை தொட்டுக் கூட பாராமல் தாங்கள் என்னை எடுத்துச் செல்லச் சொல்வது எப்படி? தாங்கள் ஒன்றையும் உண்ணப்போவதில்லை என்றால் என்னை ஏன் இதை தயாரிக்க சொல்லவேண்டும்? கொஞ்சமாவது எடுத்துகொள்ளாவிட்டால் , நான் தட்டுகளை எடுத்துச் செல்லமாட்டேன். நானும் உண்ணமாட்டேன்.



பாபா: ஏதோ ஒரு நேரத்தில் நான் நீ கொண்டு வந்த போளியை சாப்பிட்டு விட்டேன். பிடிவாதம் வேண்டாம். தட்டுகளை எடுத்துச் சென்று, உணவு உட்கொள்.



நானா சிணுங்கியவாறு மீண்டும் சாவடிக்குச் சென்று விட்டார். மறுபடியும் பாபா அவரை வரவழைத்தார்.



பாபா: நானா! நீ என்னுடன் பதினெட்டு ஆண்டுகளாக பழகுகிறாய். இவ்வளவு தானா நீ அறிந்துகொண்டது!என்னைப் பற்றிய உனது கணிப்பு இவ்வளவுதானா! 'பாபா' என்றால் உனக்கு கண்முன் தோன்றும் இந்த எண் ஜாண் உடல்தானா! அவ்வளவுதானா?
இதோபார், நான் எறும்பு உருவிலும் உண்கிறேன். மொய்க்கும் ஈயின் வாயிலாகவும் சாப்பிடுகிறேன். எனக்கு தோன்றிய வடிவத்தை நான் எடுத்துக் கொண்டு அந்த வடிவத்தின் மூலம் உண்பேன். உன் போளியை வெகுநேரம் முன்பே சாப்பிட்டு விட்டேன்..அளவு கடந்த பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.



நானா: தாங்கள் இப்படிக் கூறினாலும், என்னால் எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை. என்ன செய்யட்டும்?எனக்கு புரிய வைத்தீர்களானால், நான் தட்டுகளை எடுத்துச் செல்கிறேன். சாப்பிடுகிறேன்.



அச்சமயம் பாபா ஒரு சமிக்ஞை செய்தார். அது நானா ஆழ்மனதில் வேறு யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தை புதைத்து வைத்திருந்ததை பற்றியது. அது பாபா தனது அந்தராத்மா எனவும், ஆகவே எல்லோரினுள்ளும், எறும்பு உள்பட உறையும் சர்வாந்தர்யாமி எனவும் நானாவுக்கு திடமாக புலப்படுத்தியது.



பாபா: நானா, நான் செய்த இந்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ, அவ்வாறே நான் (எல்லா உருவங்களாகவும்) உண்கிறேன் என்பதை தெரிந்து கொள்.

Monday, July 21, 2014

பொறாமை

2e761-02-sai-baba-020409

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ,செல்வாக்கோ கிட்டி விட்டால்,நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம்.அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா? அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது?ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே? நமக்கும் நலம் கிட்டியது, நாமும் பாக்கியசாலிகள் என எண்ணுவோமே? அல்லது அதே நலம் நாமும் பெறுவோம், அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்? ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான். அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்? ஆகவே, முதலில் பொறாமையை வென்றுவிடு.



ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

போட்டியும் போராட்டமும்

14

உலகம் தோன்றிய நாள் முதல் போட்டியும் போராட்டமும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்களாகி விட்டன. உண்மையை எதிர்த்து பொய்மை போராடுவதும், நன்மையை எதிர்த்து தீமை போராடுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. இந்தப் போராட்டங்களின் தொடக்கத்தில் தீய சக்திகளின் கைகளே வலுப்பெற்று ஓங்கி இருப்பது போல் ஒவ்வொரு முறையும் தோன்றுவது உண்டு.  ஆனால், எப்போதும் இறுதியில் வெற்றி பெறுபவை, உண்மையும் நன்மையுமே என்பது கடந்த கால வரலாறு கற்றுத் தரும் பாடமாகும். 



ஷீரடியில், சாயிபாபாவுக்கும் மொஹித்தின் தாம்போலிருக்கும் நடைபெற்ற மல்யுத்தத்தைக் காண கிராம மக்கள் பெருந்திரளாகக் கூடி இருந்தனர்.  அவ்வப்போது கைதட்டியும் உரக்க குரல் எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். பாபாவே வெற்றி பெறுவார் என்று வெளிப்படையாகப் பலர் கூறினார். மொஹித்தின் தாம்போலியின் ஆதரவாளர்கள் சிலர் அதை வன்மையாக மறுத்தனர்.  ஒரு பக்கம், அவர்களிடையே விவாதம் வலுத்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் உக்கிரமான சண்டை ஒரு முடிவுக்கு வந்தது. அதன் முடிவு - மொஹித்தின் தாம்போலிக்குச் சாதகமாக அமைந்தது. சாயிபாபாவின் ஆதரவாளர்கள் வியப்பும் வேதனையும் அடைந்தனர். ஆனால், பாபாவோ எப்போதும் போல் புன்முறுவல் பூத்த முகத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

Sunday, July 20, 2014

அற்புதமான சக்தி!

DSC_0005

ஒருவர் பாபாவிடம் பக்தி செலுத்தலாம்,செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம், ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை.எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ,அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்?இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ!



மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும்,சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின் அற்புதமான சக்தி.

இறை நாம மகிமை!

nagasai



இறை நாம மகிமை பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவானதேயாகும். ஆகையால் மாயையை நசிக்கும் சக்தி அந்த பரமாத்மனுக்கு மட்டுமே இருக்கும். அவர் அனுக்கிரகம் கிடைக்கும் வரையில் ஆராதிக்க வேண்டும். ஸ்மரணை செய்ய வேண்டும். கலியுகத்தில் இறைநாமத்தைத் தவிர்த்து, தருணோபாயம் வேறொன்றுமில்லை. அது ஒன்றே அடைக்கலம்.



ஸ்ரீ சாயி திருவாய் மொழி.

Saturday, July 19, 2014

ஞானம்!

a9fae-img_0450

விதிக்கப்பட்ட, விதிக்கபடாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்? அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்? போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேடலில் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான்.



ஸ்ரீ சாயி இராமாயணம் .

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...