Tuesday, July 22, 2014

சமாதி மந்திர்

green

மனிதன் எத்தனையோ விஷயங்களை முன்கூட்டித்திட்டமிடுகிறான். சில நேரம் நண்பர்கள், உறவினர்கள், வல்லுனர்கள் ஆகியோரைக் கலந்தாலோசிக்கவும் செய்கிறான்.



மனித முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் தெய்வ அருளும் கூடி வரும்போது எண்ணியது எண்ணியபடி அமையும். மனிதன் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தெய்வ சங்கல்பத்தின்படிதான் செயல்கள் நிகழும் என்பது மனிதனுக்கு காலம் கற்றுத் தரும் பாடம். காலம் கடந்த பின்னரே இதை நாம் புரிந்து கொள்கிறோம்.



ஷீரடியில் ஒரு மாளிகையைக் கட்டிய பாபுசாகேப் புட்டி, அதன் நடுவில் ஒரு மேடை அமைத்து அதில் முரளிதரனின் சிலையை வைக்க பாபாவின் சம்மதம் வேண்டினார். பாபாவும் அதற்கு சம்மதித்து, "கோவில் வேலை முடிந்தவுடன் நான் அங்கு தங்குவேன்!" என்று கூறினார். தான் கட்டி முடித்த மாளிகையில் பாபா வந்து தங்கப்போகிறார் என்பதை அறிந்த புட்டி, மிகவும் மனம் மகிழ்ந்தார். ஆனால் 'நடக்கப் போவது என்ன?' என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.



சாயிபாபா, தான் உடலைத் துறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்திருந்தார். புட்டியின் மாளிகையைத் தனது சமாதிக் கோவிலாகத் தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, புட்டியின் வேண்டுகோளுக்குச் சம்மதித்த பாபா, அங்கு முரளிதரனாக தானே வரப்போவதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில்தான், "கோவில் வேலை முடிந்தவுடன் நான் அங்கு தங்குவேன்!" என்று கூறினார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...