Tuesday, July 22, 2014

எல்லாவற்றிலும் உள்ள இறைவனாக பாபாவை வழிபடு!

20144

பாபா: நானா (பாபாவின் நெருங்கிய பக்தர்), எனக்கு பூர்ண போளி வேண்டும். அதை நைவேத்யமாக தயார் செய்து கொண்டு வா.



அதன் பிறகு நானா எட்டு பூர்ண போளிகளும் அதற்கேற்ற பண்டங்களையும் தயார் செய்ய வைத்து, பாபாவின் முன் கொண்டு வந்து சமர்பித்தார்.

நானா:பாபா உட்கொள்ளுங்கள்.



பாபா சற்று நேரம் தாமதித்தார். போலியின் மீது ஈக்களும் எறும்புகளும் மொய்க்கலாயின.



பாபா: நல்லது, இந்த தட்டுகளை எடுத்துச் செல்.



நானா: அவற்றை தொட்டுக் கூட பாராமல் தாங்கள் என்னை எடுத்துச் செல்லச் சொல்வது எப்படி? தாங்கள் ஒன்றையும் உண்ணப்போவதில்லை என்றால் என்னை ஏன் இதை தயாரிக்க சொல்லவேண்டும்? கொஞ்சமாவது எடுத்துகொள்ளாவிட்டால் , நான் தட்டுகளை எடுத்துச் செல்லமாட்டேன். நானும் உண்ணமாட்டேன்.



பாபா: ஏதோ ஒரு நேரத்தில் நான் நீ கொண்டு வந்த போளியை சாப்பிட்டு விட்டேன். பிடிவாதம் வேண்டாம். தட்டுகளை எடுத்துச் சென்று, உணவு உட்கொள்.



நானா சிணுங்கியவாறு மீண்டும் சாவடிக்குச் சென்று விட்டார். மறுபடியும் பாபா அவரை வரவழைத்தார்.



பாபா: நானா! நீ என்னுடன் பதினெட்டு ஆண்டுகளாக பழகுகிறாய். இவ்வளவு தானா நீ அறிந்துகொண்டது!என்னைப் பற்றிய உனது கணிப்பு இவ்வளவுதானா! 'பாபா' என்றால் உனக்கு கண்முன் தோன்றும் இந்த எண் ஜாண் உடல்தானா! அவ்வளவுதானா?
இதோபார், நான் எறும்பு உருவிலும் உண்கிறேன். மொய்க்கும் ஈயின் வாயிலாகவும் சாப்பிடுகிறேன். எனக்கு தோன்றிய வடிவத்தை நான் எடுத்துக் கொண்டு அந்த வடிவத்தின் மூலம் உண்பேன். உன் போளியை வெகுநேரம் முன்பே சாப்பிட்டு விட்டேன்..அளவு கடந்த பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.



நானா: தாங்கள் இப்படிக் கூறினாலும், என்னால் எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை. என்ன செய்யட்டும்?எனக்கு புரிய வைத்தீர்களானால், நான் தட்டுகளை எடுத்துச் செல்கிறேன். சாப்பிடுகிறேன்.



அச்சமயம் பாபா ஒரு சமிக்ஞை செய்தார். அது நானா ஆழ்மனதில் வேறு யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தை புதைத்து வைத்திருந்ததை பற்றியது. அது பாபா தனது அந்தராத்மா எனவும், ஆகவே எல்லோரினுள்ளும், எறும்பு உள்பட உறையும் சர்வாந்தர்யாமி எனவும் நானாவுக்கு திடமாக புலப்படுத்தியது.



பாபா: நானா, நான் செய்த இந்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ, அவ்வாறே நான் (எல்லா உருவங்களாகவும்) உண்கிறேன் என்பதை தெரிந்து கொள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...