Friday, July 29, 2016

குருவை நினை....


குருவை எந்நேரமும் நினைக்கவேண்டும்.  நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால்..அதாவது இப்போதுள்ள சூழல்கள் மாறி, நல்ல நிலை ஏற்பட வேண்டுமானால் குருவை எந்நேரமும்நினைக்கவேண்டும்.
அதுவும் பிரேமை நிறைந்த மனத்தால் நினைக்க வேண்டும். குருவை நினைக்க நேரம் காலம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நினைக்கலாம். இந்த நினைவே தியானம் ஆகும். இதற்கு பத்து பைசா செலவு கிடையாது. சிறிது சிறிதாக நினைக்க நினைக்க அது பெரிய நேரத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால் நமக்கு நிறைய பலன் கிடைக்கும்.
என் பிரச்சினை இப்படியிருக்கிறது... குருவே காப்பாற்று என கவலையோடு கெஞ்சத் தேவையில்லை. குருவை நினைப்பது என் கடமை என நினைக்கவும் கூடாது. மாறாக, அவர் நமது தந்தை, நமது நண்பன், நமது பிள்ளை, நமக்கு நன்மை செய்கிறவன் என்ற எண்ணத்துடன் பெருமையாக நினைக்க வேண்டும். இந்த எண்ணத்தில் அன்பு கலந்திருக்க வேண்டும். பயம் கூடாது.
அன்பு இல்லாத வழிபாடு பயன் தராது. அன்பு இல்லாமல் கடவுளை வழிபட்டால் அது ஏற்புடையது ஆகாது. ஆகவே, எந்த மூர்த்தத்தை வழிபட்டாலும் அதன் மீது அன்பு காட்டவேண்டும். குருவை வழிபாடு செய்கிறவன் குருவின் மீது முழுமையான அன்பு செலுத்தவேண்டும்.

சாயி பாபாவை சரணடைந்தவர்கள்


"எது எப்படியிருப்பினும், நான் ஷீரடிக்கு சென்று பாபாவை பேட்டி காண்பேன் ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தட்சிணை கொடுக்கவும் மாட்டேன்"
எவரெல்லாம் மனத்தில் இம்மாதிரி குதர்க்க வாதத்தை ஒரு உறுதியாக திடப்படுத்திக்கொண்டு கிளம்பினார்களோ, அவரெல்லாம் தரிசன யோகம் கிடைத்த பின் தங்களை மறந்து சாயி பாபாவை சரணடைந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய புதிய மாறிய நிலையில் சர்வ உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பி பார்க்கவே இல்லை. சாய்பாபா பாதங்களில் மூழ்கிவிட்டனர்.
                                                                                                            சாயி ஸ்த்சரித்திரம்

உலகை ஆள்வேன்





நீங்கள் கலங்குவது வீண், நான் சமாதியிலிருந்தே உலகை ஆள்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்வுலகை விட்டபிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன். பக்தியுடனும் அன்புடனும் என்னை நினைப்பவர்கள் பக்கத்தில் நான் காலம் காலமாக இருப்பேன்
                                                                                                                                
ஷீரடி சாய்பாபா

Thursday, July 28, 2016

எப்பொழுதும் ஆதரவாய் இருப்பவர்



இந்த உலகம் உங்களை முழுதும் கைவிட்டாலும், உறவு உங்களை அறவே  வெறுத்தாலும், பெற்ற பிள்ளைகளே உங்களை பகைத்தாலும், அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு எதிராக மாறினாலும், எப்பொழுதும் ஆதரவாய் இருப்பவர் பாபா.  
அவரது ஆதரவு எப்போதும் அவரது பக்தர்களுக்கு உண்டு.
--
 ஸ்ரீ சாயி தரிசனம்

நமக்குத் தேவை பொறுமை, நம்பிக்கை






நமது முதலாளி தன்னைப் பிடித்து நெருப்பில் போட்டுவிடு! என்று நம்மிடம் கூறினால் நாம் செய்வோமா?  புதைச்சேற்றில் இறக்கிவிடு என்று கூறினால் அதைச் செய்வோமா? அப்படித்தான், பாபாவும் நாம் என்னதான் கேட்டுக்கொண்டாலும் கூட நமக்கு எது நல்லதோ, எது நம்மை உயர்த்துமோ அதைச் செய்வார்.
ஒரு தாய்க்குத்தான் தெரியும் தனது குழந்தைக்கு என்ன தருவது, எப்போது தருவது, எப்படி தருவது, என்ன தருவது என்றூ.
எனவே நா. தவறாக  கேட்பதைத் தராமல் தட்டிக்கழிப்பதைப் போல காலம் தாழ்த்துவார். அந்த இடைக்காலம் வரை அனுபவங்களையும், உணர்வு மாற்றங்களையும் கொடுத்து நம்மை பக்குவப்படுத்துவார். -
அதற்குப்பின் நமக்கு என்ன தர வேண்டுமோ அதனை தாயினும் சாலப் பரிந்து பாபா நமக்குத் தருவார். அதுவரை நமக்குத் தேவை பொறுமை, நம்பிக்கை மட்டுமே.     
                                                                                                                             ஸ்ரீ சாயி தரிசனம்.

Wednesday, July 27, 2016

நம்பிக்கையுடன் கூடிய பொறுமை

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை (முந்தைய கர்மாக்களை) நன்கு அறிந்த சத்குரு அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார்.

அன்னதானம்

உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழு பூச்சியோ, எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய் வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவு கொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம் விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.

"
பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"-
                                                                                                                           ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...