Thursday, November 17, 2016

ஓம் சாய்ராம்

வாழ்க்கையில் வரும் சோதனைகளையும், கஷ்டம், துன்பம், போன்றவற்றையும் நிரந்திரம் என நம்பி விடாதீர்கள். அவை உங்களை சுத்தப்படுத்துவதற்க்காக பாபா எடுத்திருக்கும் நடவடிக்கை என்பதை உணர்ந்து அவரை சரணடைந்து பொறுமையோடு காத்திருங்கள்.
---
ஸ்ரீ சாயி தரிசனம்.

Wednesday, November 16, 2016

ஓம் சாய்ராம்

ஓம் சாய்ராம்.. 
 சரணடைந்தேன் சாய் பாதங்களை... 
 சாய் சொல்லில் உணர்ந்தேன் நால்வேதங்களை..
 என்னிலும் காண்கிறேன்  
உன்னிலும் காண்கிறேன்.
 எங்கும் காண்கிறேன்...  
எதிலும் காண்கிறேன்..  
சாய்மாதாவே சகலமும் என்று.  
இன்னலை தீர்க்கும் இறைவன் சாயி.. 
 சரணமென்றார்க்கு சர்வமும் சாயி..  
மெய்யானவர்க்கு எளியவர் சாயி.  
பொய்யானவர்க்கு அரியவர் சாயி..

ஓம் சாய்ராம்..

Tuesday, November 15, 2016

ஓம் சாய்ராம்

என்னை தம்முடைய ஜீவப் பிராணனை விட எவர் அதிகமாக நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும்.அப்பேர்ப்பட்டவருக்கு அவர் ஒரு மடங்கு கொடுத்தால் நான் நூறு மடங்கு திருப்பி அளிப்பேன்.
--
ஷீரடி சாய்பாபா

ஓம் சாய்ராம்



மனிதர்களாக பிறந்த நீங்கள் பிற௫டன் அன்பு , பாசம் காட்டி ஒற்றுமையுடன் வாழ்க்கை நடாத்துங்கள்.இந்த சந்திர சூரியன் உள்ள வரை உங்களை கண்ணின் இமை போல காப்பேன் .
சீரடி சாயி பாபா

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...