Tuesday, February 28, 2017

ஷீரடி சாயி நாதர் கவசம்



மனமுருகி படிப்போர்க்கும்….உள்ளம் தன்னில் வைப்போர்க்கும் …இன்னல்கள் யாவுமின்றி நற்பலன்கள் அனைத்தும் கூடி ஷீரடி சாயி பாபாவின் அருள் எப்பொழுதும் உண்டென்று உணர்த்துமாம.

ஷீரடி நாதனை மனதினுள் இருத்தி
மனதை நாமும் ஒரு நிலைப் படுத்தி
வாழ்க்கை முறையை சரிவர திருத்தி
வேண்டிய யாவையும் அவனிடம் கேட்போம்

உச்சன் தலை முதல் விரல் நுனி வரைக்கும்
ஒவ்வாரு அங்கமும் அவன் இசை பாட
நம்மை மறந்த உலகினில் தவழ
“சாய்”யும் வருவான் நம் உடலுக்குள் நுழைய

துன்பங்கள் யாவையும் ஒரு புறம் தள்ளி
நம் உடம்பில் ஒரு வித தென்றலை வீசி
பரஸ்பரம் அமைதியை நிலவச் செய்து
அவன் வரவை உணர்த்தும் ஒரு வித செயலிது

உயிர்கள் அனைத்திடம் அன்பை செலுத்தி
எல்லோர் இடத்திலும் பாசம் வைத்து 
நல்ல காரியங்கள் நாமும் செய்தால்
நம்முள் பாபா இருப்பதை உணர்வோம்

எங்கும் எதிலும் இருப்பவன் சாயி
பார்க்கும் பொருள்களில் இருப்பவன் சாயி 
உணரும் உணர்வில் இருப்பவன் சாயி
நம் நிழலாய் இருப்பவன் ஷீரடி சாயி

அழைத்த உடனே ஓடியும் வருவான்
என்றும் நம்மை பார்த்துக் கொண்டு இருப்பான்
செய்யும் செய்கையில் ஒளிந்து கொண்டிருப்பான்
அவனே ஷீரடி வாசனாய் இருப்பான்

ஷீரடி மண்ணை தொட்டு வாருங்கள்
அவன் பாதம் தன்னை தொட்டு வணங்குங்கள்
நாமும் அவனுடன் கலந்து விடுவோம்
நம்மை நாமே மறந்து விடுவோம்

அலைபாயும் மனதை அவனிடம் தந்து
மகிழ்ச்சி கடலில் நாமும் மிதந்து
புதுவித தெம்பும் நம்முடன் கலந்து
அவனும் அமர்வான் நம் மனதினில் வந்து

ஷீரடி வாசனின் நாமத்தைச் சொன்னால்
எல்லாச் செய்கையும் நலமாய் முடியும்
அவனை நாமும் மனதால் நினைத்தால்
உடனே வந்து அரவணைத்திடுவான்

அவனே கதி என்று நாமும் இருந்தால் 
வேண்டிய அனைத்தையும் அவனிடம் சொன்னால்
அள்ளிக் கொடுப்பான் நொடியில் வந்து
அவனே எங்கள் சாயி நாதன்

ஜெய ஜெய சாயி
ஓம் ஸ்ரீ சாயி
சற்குரு சாயி
துவாரகா மாயீ

வினைகளை தீர்க்கும் வித்தகன் வருக
குறைகளை கலையும் குருவே வருக
சஞ்சலம் அகற்றிட சீக்கிரம் வருக
எங்கள் பாபா வருக வருக

பாவங்கள் யாவும் பனிபோல் மறையும்
நன்மைகள் எல்லாம் நம்மை நாடும்
எல்லாம் வல்லவன் அவன் பெயர் சொன்னால்
நம்மைக் காத்து நல்லது செய்வான்

ஒருமுறை அவனை நாமும் நினைத்தால்
நம் இல்லம் தேடி அவனும் வருவான்
அவனின் பாதங்கள் நம் வீட்டினுள் படவே
ஜன்ம பலன்களை நாமும் பெறவே

புண்ணிய ஷேத்திரம் ஷீரடி தானே
பாபா வசிப்பதும் ஷீரடி தானே 
நம்மை அழைப்பதும் ஷீரடி தானே
புனிதப் பயணம் ஷீரடி தானே

நோய் நொடிகளை அறவே அகற்ற
எவ்வித இன்னலும் அண்டாதிருக்க
அவனும் தருவான் தக்க மருந்தை
அதுவே உதி என்று பெயரும் பெறுமே

கோதுமை மாவின் மகிமையை சொன்னவன்
அதனின் மூலம் ஊரைக் காத்தவன்
தெய்வப் பிறவியாய் நம்முடன் கலந்தவன்
அவனே எங்கள் சாயி ஆனவன்

ஒவ்வொரு நொடியும் நம்முடன் இருப்பான்
உடலில் ஓடும் உதிரத்தில் இருப்பான்
உணர்ச்சிப் பிழம்பில் கலந்து இருப்பான்
பேசும் சொற்களில் இனிமையாய் இருப்பான்

குருவின் மகிமையை சொன்னதும் அவன்தான்
குருவாய் என்றும் ஆனவன் அவன்தான்
பக்தியுடனே நாமும் சொல்வோம்
சற்குரு சாயி என்று பாடுவோம்

பாபா என்றால் மன பாரம் குறையும்
பாபா என்றால் மலர்ச்சி பொங்கும்
பாபா என்றால் மனமது மயங்கும்
பாபா என்றால் சகலமும் அடங்கும்

ஜென்ம ஜென்மமாய் பந்தத்தில் இருப்பான்
உயிருனுள் மூச்சாய் கலந்தும் இருப்பான்
நீரில் எரியும் விளக்கிலும் இருப்பான்
எங்கள் சாயி அனைத்திலும் இருப்பான்

அவனின் புகழை என்றும் போற்றுவோம்
அவனின் நாமம் சொல்லி மகிழுவோம்
அகிலத்தைப் படைத்த அவனை வணங்குவோம்
சாயி நாதா என்று சொல்லுவோம் 

சாந்த முகத்துடன் என்றும் இருப்பான்
புன்னகை தவழ நம்மைப் பார்ப்பான்
விழிகளில் கருணையை தேக்கி வைப்பான்
அன்புக் கரங்களால் நம்மை அணைப்பான்

அவனைப் பற்றிய கீதம் படித்து
பலவகை ஆரத்தி நாமும் எடுத்து
வியாழக்கிழமை விரதம் இருந்து
மனதால் அவனை தியானம் செய்வோம்

ஆதியும் அந்தமும் எல்லாம் அவனே
வாழ்க்கையில் நிகழும் சகலமும் அவனே
உலகை இயக்கும் சக்தியும் அவனே
எங்கள் ஷீரடி வாசனும் அவனே

தூய உள்ளத்தில் வந்து அமர்வான்
நல்ல எண்ணத்தில் ஒன்றி இருப்பான்
அவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டால்
மனதினில் ஆனந்த தாண்டவம் ஆடுவான்

பிறவிப் பயனை புரிந்திடச் செய்வான்
ஆனந்தம் என்றும் கிடைத்திடச் செய்வான்
கவலைகள் அற்ற வாழ்க்கையை தருவான்
ஷீரடி வாசா என்றால் வருவான்

உடனே சொல்வோம் அவனின் பெயரை
விரைந்து பெறுவோம் நற்பலன்கள் பலவும்
அவன் பாதம் தொட்டு வணங்கி வருவோம்
நம்மை அவனுள் என்றும் காண்போம்

இதனைப் படித்தால் புண்ணியம் பெறுவீர்
சகல சௌபாக்கியம் அனைத்தையும் பெறுவீர்
வாழ்வில் என்றும் நிம்மதி பெறுவீர்
பாபா என்றால் மன அமைதியும் பெறுவீர்

சாயி சரணம் சாயி சரணம்
எங்கள் பாபா சரணம் சரணம்
ஷீரடி வாசா சரணம் சரணம்
சற்குரு சாயி சரணம் சரணம்

Monday, February 27, 2017

அழுவீர்கள்..



ஒருவரை நான் உங்கள் முன் வைத்திருப்பதும், அவர்களை செயல்படவைப்பதும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்பதை அறிந்துகொள்ளுங்கள். காரண காரியங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.

"என் மீது நம்பிக்கை வை. அனைத்தையும் அறிந்தவன் நான், அனைத்தையும் செய்பவன் நான், செயலும் நானே! விளைவுகளும் நானே!" என் அனுமதி இல்லாமல் ஒரு இலை கூட அசையாது என்கிற போது, எதற்காக நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படவேண்டும்? நீங்களே, உங்களை விரோதியாகிக் கொள்வதற்காகவா உங்களை படைத்து, காத்து, உங்களைத் தேடி நான் வந்தேன்?

நீங்கள் தான் செயல்படுகிறீர்கள் நான் செயல்படாதவன் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். மனதார யாரையும் சபிக்காதீர்கள்! யாரைப் பற்றியும் குறையாய் சொல்லாதீர்கள்! அப்போது நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

அன்றைக்கும் அழுவீர்கள்... பாபா உன்னை காண முடியவில்லையே என்றல்ல... பாபா, நான் கேட்டதையெல்லாம் உடனுக்குடனேயே தந்துவிடுகிறாயே... என்ற மகிழ்ச்சியில்.. -
---ஸ்ரீ சாயி-யின் குரல்

Sunday, February 26, 2017

இசை அதை வாசிப்பவனையே சார்ந்தது


நம்பிக்கையோடு முயற்சி செய். எதற்காக முயற்சி செய்கிறாயோ அதற்காக பொறுமையாகக் காத்திரு. உன்னை யார் கைவிட்டாலும் நான் கைவிட மாட்டேன். நேர்மையோடு நீ செய்யும் எல்லா காரியத்தையும் நான் முடித்துத் தருவேன்.
இதைத்தான் தபோல்கர், நான் சாயி சரிதம் எழுத பேனாவை எடுத்தபோது, பாபாவே அதைச் செய்கிறார். நான் எழுத முடியாத நிலையில் இருந்தேன். ஆனாலும் பாபாவின் அருள் ஊமையை பேச வைக்கிறது . முடவனை மலை ஏற வைக்கிறது. புல்லாங்குழலிருந்து வரும் இசை அதை வாசிப்பவனையே சார்ந்தது.
----ஸ்ரீ சாய் தரிசனம்

Friday, February 24, 2017

நிச்சயம் உயர்த்துவார்.


நீ கைவிடப்பட்டு, பாழடைந்த நிலையிலிருந்தாலும் பயப்படாதே.. உன்னில் தீபம் ஏற்றுவதற்காகவே, பாபா உன்னிடம் வந்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்பு. நீ பிரகாசம் அடைவதும் உறுதி.. மற்றவர்களைவிட உயர்வதும் உறுதி. பாழடைந்த உன்னைத் தூக்கிப் பலர் போற்றும் நிலைக்கு நிச்சயம் உயர்த்துவார்.

Sunday, February 19, 2017

உனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்


அன்புக் குழந்தையே!
ஐயோ, பாபா நீயே கதி என கிடக்கிறேன். அப்படியிருந்தும் இதுவரை யாரும் அனுபவிக்க முடியாத அளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உடனே தீர்வு கொடுக்க மாட்டாயா? இன்னும் எப்படி நான் உன்மீது அன்பு செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லை எனக் கேட்கலாம்..
மகனே, போர்களத்தின் மத்தியில் நான் அர்ஜூனனுக்கு வெற்றியை உடனே தந்துவிடவில்லை. அண்ட சராசரங்களையும் வியாப்பித்து நிற்கும் நான் கவுரவ சேனைகளை ஒரே வாயில் விழுங்கி ஏப்பம் விட்டிருக்க முடியாதா? மாறாக குழப்பத்தில், பயத்தில் இருந்த நண்பனுக்கு உபதேசம் செய்தேன். நான் சூத்திரதாரியாக இருப்பேன், உனக்கு வழியையும் காண்பிப்பேன், உன் பக்கத்திலேயே இருப்பேன். விடிவுகாலம் வருமா வராதா என யோசிப்பாய். வடநாட்டிலிருந்து தென்னிலங்கை நகருக்கு சீதையை கடத்தி சென்ற ராவணனிடம் இருந்து சீதையை மீட்டுவிடுவேன் என்று ஸ்ரீராமன் நம்பினான். எப்படியும் ஸ்ரீராமன் தன்னை மீட்டுவிடுவான் என ஜானகி நம்பினாள். இந்த நம்பிக்கை தான் அவர்களை மிகப்பெரிய துயரங்களையும் சகிக்க வைத்து பின்னாளில் அதுவே மிகப்பெரிய சாதனையாகவும் சரித்தரமாகவும் மாறியது. ஆகவே தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்துவிடாதே. என் மீது முழு கவனத்தையும் செலுத்துவதற்கு பதில் கடன் கஷ்டம் பிரச்சினை என பலவற்றின் மீது கவனத்தை செலுத்துவதால் கர்ம பந்தம் உன்னை பிடித்துக்கொண்டிருக்கிறது. உனது எல்லா பிரச்சனைகளிலிருந்தும் வெளிவர விரும்பினால் பரிபூரண நம்பிக்கையை என் மேல் வை. எது நடந்தாலும் பாபா பார்த்துக்கொள்வார் என்ற முழுமையான நம்பிக்கை எப்போது வருகிறதோ அப்போது உனக்கு விடுதலை தருவேன். என்னை சரணடைந்தவனுக்கு எந்த காலத்திலும் துன்பம் வராது. இன்பமே பெருகும். நீ எப்படி நடந்துக்கொள்ள போகிறாய் என்பதை தீர்மானிக்க உனக்கு நேரம் தருகிறேன். யோசித்து முடிவு செய்... உனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்.............. ...... சாயியின் குரல்

Saturday, February 18, 2017

உன்னை விடுவிப்பேன்


எனது லீலைகளை நீ ஆர்வமோடும் அன்பு கலந்த இதயத்தோடும் கேட்கிறாயா? நல்லது. என்னை நாடி வந்தவர்கள் தங்கள் வாழ்வில் வளம் பெற்றதை கேள்வியுற்றாயா? நல்லது.
இவ்வளவு செய்த தந்தையாகிய நான், நீ வேண்டுகிற எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிற நான் மிச்சம் உள்ள வேண்டுதல்களையும் நிறைவேற்றி தர மாட்டேனா? இதற்கா என் மீது இத்தனை கோபம், அவ்வளவு இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டாயே! ஏன் இந்த குழப்பம்? பதற்றம்? வீணான கவலை? அனைத்தையும் விடுத்து உன் வேலைகளில் கவனம் செலுத்து. நான் உனக்காக வேலை செய்கிறேன்.

நீ என்னிடம் வேண்டுகிற வேண்டுதல்களை கேட்டேன். நீண்டகாலமாக உன் வாழ்க்கையை சிதைத்து வருகிற பிரச்சனையிலிருந்து விடுதலை கேட்கிறாய். இதுவரை எத்தனையோ சங்கங்களில் இருந்து உன்னை காப்பாற்றி வந்திருக்கிறேன் என்பது உனக்கே தெரியும். உனது உன்னதமான நிலையை தாழ்த்தி, களத்திர தோஷத்தை ஏற்படுத்திய கிரக நிலைகள் ஆகட்டும், உன் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாதவர்களால் ஏற்பட்ட தாங்க முடியாத பாதிப்பையாகட்டும் நான் சுலபமாக நிவர்த்தி செய்தேன். ஆனால் நீயோ இன்னும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். கவலைபடாதே. அனைத்திலிருந்தும் உன்னை விடுவிப்பேன்.

நீண்டகாலமாக நீ அனுபவிக்கும் வேதனைகள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன. இப்போது உள்ள எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நீ விரைவில் முழுமையாக விடுதலைய
டைய உள்ளாய். இன்னும் சில மாதங்களுக்குள் புதிய மாறுதல் உன் வாழ்க்கையில் நிகழத்தொடங்கும் அதற்கு உன்னை தயார் படுத்திக்கொள்! - சாயியின் குரல்

Friday, February 17, 2017

நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார்


தர்மத்தை பற்றி பாபா, நம்பிக்கையுடன் கொடுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள். தான தர்மத்தை அடியவர்களுக்கு போதிப்பதற்கும் பணத்தில் அவர்களுக்குள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும் பாபா பக்தர்களிடமிருந்து தக்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார். அனால் அதில் ஒரு விசித்திரம் இருந்தது. அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...