Sunday, February 19, 2017

உனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்


அன்புக் குழந்தையே!
ஐயோ, பாபா நீயே கதி என கிடக்கிறேன். அப்படியிருந்தும் இதுவரை யாரும் அனுபவிக்க முடியாத அளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உடனே தீர்வு கொடுக்க மாட்டாயா? இன்னும் எப்படி நான் உன்மீது அன்பு செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லை எனக் கேட்கலாம்..
மகனே, போர்களத்தின் மத்தியில் நான் அர்ஜூனனுக்கு வெற்றியை உடனே தந்துவிடவில்லை. அண்ட சராசரங்களையும் வியாப்பித்து நிற்கும் நான் கவுரவ சேனைகளை ஒரே வாயில் விழுங்கி ஏப்பம் விட்டிருக்க முடியாதா? மாறாக குழப்பத்தில், பயத்தில் இருந்த நண்பனுக்கு உபதேசம் செய்தேன். நான் சூத்திரதாரியாக இருப்பேன், உனக்கு வழியையும் காண்பிப்பேன், உன் பக்கத்திலேயே இருப்பேன். விடிவுகாலம் வருமா வராதா என யோசிப்பாய். வடநாட்டிலிருந்து தென்னிலங்கை நகருக்கு சீதையை கடத்தி சென்ற ராவணனிடம் இருந்து சீதையை மீட்டுவிடுவேன் என்று ஸ்ரீராமன் நம்பினான். எப்படியும் ஸ்ரீராமன் தன்னை மீட்டுவிடுவான் என ஜானகி நம்பினாள். இந்த நம்பிக்கை தான் அவர்களை மிகப்பெரிய துயரங்களையும் சகிக்க வைத்து பின்னாளில் அதுவே மிகப்பெரிய சாதனையாகவும் சரித்தரமாகவும் மாறியது. ஆகவே தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்துவிடாதே. என் மீது முழு கவனத்தையும் செலுத்துவதற்கு பதில் கடன் கஷ்டம் பிரச்சினை என பலவற்றின் மீது கவனத்தை செலுத்துவதால் கர்ம பந்தம் உன்னை பிடித்துக்கொண்டிருக்கிறது. உனது எல்லா பிரச்சனைகளிலிருந்தும் வெளிவர விரும்பினால் பரிபூரண நம்பிக்கையை என் மேல் வை. எது நடந்தாலும் பாபா பார்த்துக்கொள்வார் என்ற முழுமையான நம்பிக்கை எப்போது வருகிறதோ அப்போது உனக்கு விடுதலை தருவேன். என்னை சரணடைந்தவனுக்கு எந்த காலத்திலும் துன்பம் வராது. இன்பமே பெருகும். நீ எப்படி நடந்துக்கொள்ள போகிறாய் என்பதை தீர்மானிக்க உனக்கு நேரம் தருகிறேன். யோசித்து முடிவு செய்... உனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்.............. ...... சாயியின் குரல்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...