எனது லீலைகளை நீ ஆர்வமோடும் அன்பு கலந்த இதயத்தோடும் கேட்கிறாயா? நல்லது. என்னை நாடி வந்தவர்கள் தங்கள் வாழ்வில் வளம் பெற்றதை கேள்வியுற்றாயா? நல்லது.
இவ்வளவு செய்த தந்தையாகிய நான், நீ வேண்டுகிற எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிற நான் மிச்சம் உள்ள வேண்டுதல்களையும் நிறைவேற்றி தர மாட்டேனா? இதற்கா என் மீது இத்தனை கோபம், அவ்வளவு இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டாயே! ஏன் இந்த குழப்பம்? பதற்றம்? வீணான கவலை? அனைத்தையும் விடுத்து உன் வேலைகளில் கவனம் செலுத்து. நான் உனக்காக வேலை செய்கிறேன்.
நீ என்னிடம் வேண்டுகிற வேண்டுதல்களை கேட்டேன். நீண்டகாலமாக உன் வாழ்க்கையை சிதைத்து வருகிற பிரச்சனையிலிருந்து விடுதலை கேட்கிறாய். இதுவரை எத்தனையோ சங்கங்களில் இருந்து உன்னை காப்பாற்றி வந்திருக்கிறேன் என்பது உனக்கே தெரியும். உனது உன்னதமான நிலையை தாழ்த்தி, களத்திர தோஷத்தை ஏற்படுத்திய கிரக நிலைகள் ஆகட்டும், உன் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாதவர்களால் ஏற்பட்ட தாங்க முடியாத பாதிப்பையாகட்டும் நான் சுலபமாக நிவர்த்தி செய்தேன். ஆனால் நீயோ இன்னும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய். கவலைபடாதே. அனைத்திலிருந்தும் உன்னை விடுவிப்பேன்.
நீண்டகாலமாக நீ அனுபவிக்கும் வேதனைகள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன. இப்போது உள்ள எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நீ விரைவில் முழுமையாக விடுதலைய
டைய உள்ளாய். இன்னும் சில மாதங்களுக்குள் புதிய மாறுதல் உன் வாழ்க்கையில் நிகழத்தொடங்கும் அதற்கு உன்னை தயார் படுத்திக்கொள்! - சாயியின் குரல்
No comments:
Post a Comment