Wednesday, June 28, 2017

உதியின் சக்தியும் செயல் திறமையும்


ஒரு முறை பாலாஜியின் திவசத்தின் போது சில விருந்தினர்கள் வீட்டிற்க்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. .ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்ட நபர்களை விட,  மூன்று மடங்கு வந்து விட்டனர்.

பாலாஜி மனைவி திகைத்துப் போய் விட்டாள். குழுமியுள்ள மக்களுக்கு சாப்பாடு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால், குடும்பத்தின் கெளரவம் பாதிக்கக்கூடும் என்றும் அவள் நினைத்தாள். அவளுடைய மாமியார் பயப்படாதே. அது நம்முடைய உணவல்ல. சாயியினுடையது.

ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதி போட்டு, ஒரு துணி போட்டு மூடி, அதைத் திறக்காமலே அவர்களுக்கு  பரிமாறப்பட்டது. சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார் என்று கூறித் தேற்றினாள். மேலும் கூறியபடியே செய்தாள். சிறிது நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. பரிமாறுவதற்கு உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததுடன், மீதமும் இருந்ததை கண்டார்கள்.

பாபாவின் அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.பாபா நம்மை என்றும் காப்பார்.பாபாவின் மேல் நம்பிக்கையும் பொறுமையும் வையுங்கள்.அவர் நம்மை நல்வழிக்கு கூட்டி செல்வர்.

நான் உனக்கு துணை நிற்பேன்!!!

என் அன்பு குழந்தையே!
உன்னை நான் சரி செய்து வருகிறேன் என்பதை நீயாக உணர்ந்து, சில விஷயங்களை, நீ திருத்தி மாற்றிக்கொண்டு வருகிறாய் என்பதை நான் அறிவேன். நல்ல விஷயம்தான். ஆனால், ஒரு விஷயத்தில்  மட்டு்ம், உன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் நீ திணறுகிறாய். அது உன் சாய் அப்பா,  கண்களில் இருந்து எப்படி தப்ப முடியும்?
மற்றவர்கள் உன்னை எந்த வகையில் வசைபாடினாலும், அவர்களுக்கு பதில் கூறாதே. அவர்களுக்கு நீ பதில் கூறும் தருவாயில் இருந்தால், நீ தவறு செய்யாவிட்டாலும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி அவர்களிடம் இருந்து விலகி வந்து விடு. ஏன் அப்பா தவறு செய்யாமல் நான் மன்னிப்பு  கேட்க வேண்டும் என்று தானே நீ யோசிக்கிறாய். மன்னிப்பு என்பது தவறு செய்தால்தான் கேட்க வேண்டும் என்பதி்ல்லை. நாமும் அவர்களுடன் சரி சமமாய் வாக்குவாதம் செய்தால் இழந்து போவது நம்முடைய நிம்மதிதான்.
அதனால் நீ வாக்குவாதம் செய்யும் சூழ்நிலை வந்தால், அந்த இடத்தை விட்டு உடன் நகன்றுவிடு. என் பிள்ளையின் நிம்மதியான வாழ்க்கையில்தான்,  உன் சாய் அப்பாவின் நிம்மதி இருக்கிறது.  மன்னிப்பால் நீ தாழ்ந்து போகவில்லை. உயர்ந்து நிற்கப்போகிறாய்.
மற்றவர்களை நேசிப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் தான் உலகம் என்று இருக்காதே. அவர்கள் அன்பிற்கு சார்ந்து இருக்காதே. அந்த அன்பு சில சூழ்நிலையால் குறைந்து போகலாம். அப்பொழுது நீ ஏமாந்து உன் வாழ்க்கையில் வெறுமையைக்காண்பாய். 
இப்பொழுது நான் உன்னிடம் சொல்பவகளை தெளிவாகப்புரிந்து கொள்.
அன்பு தவறு இல்லை.  ஆனால் அளவு கிடந்த அன்பில் எதிர்பார்ப்பு ஏற்படும். அதில்  நீ என்றும் மாட்டிக் கொள்ளாதே. அது உன் வாழ்க்கையில் நிம்மதியற்ற சூழ்நிலையை உருவாக்கிவிடும். ஏனென்றால் இவ்வுலகில் சார்ந்து நிலையுள்ள படி இருக்கும் அளவிற்கு ஏதுவும் நிரந்தமில்லை. இவ்வுலகில் நீ பிறந்தாய்வாழ்ந்தாய் என்று இருக்காதே. மற்றவர்களின் உணர்வை உன் உணர்வாக மதித்து நட. வாழ்க்கையில் போராடித்தோற்பது என்பது அவமானம் இல்லை. வெற்றியை விட உனக்குக்கிடைத்த மிகப் பெரிய பரிசு அனுபவம்.
அந்த அனுபவத்தில்தான் வாழ்க்கையை   உன்னால் வாழ முடியும். அதன் பிறகுத்தான் உண்மையான வாழ்க்கைக்கான அர்த்தத்தை நீ உணர முடியும். சோம்பேறித்தனத்தை தூக்கி எறி. போராடு. போராடாமலே வாழ்க்கையைக்கடினம் என்று சொல்லாதே  பிறகு உனக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கடினம்தான்.
இவ்வுலகில் நிரந்தரம் என இருவரை நினைத்து கொள். ஒன்று உனக்குள் இருக்கும் ஆத்மா. இன்னொன்று உன் சாய் அப்பா. யார் வேண்டுமானாலும் உன்னை விட்டு விலகிச் செல்லட்டு்ம்.  நான் உன்னை விட்டு விலகிப்போக மாட்டேன். உனக்கான எல்லாவற்றையும்,  உன் வாழ்க்கைக்கு நல்லதாய் இருக்கும்படியான விஷயங்களைத்தான் நடைபெற அனுமதிப்பேன்.  நீ உயிரான அன்பின் ஆத்மா. நீ என் குழந்தாய். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் நான் உனக்கு துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Tuesday, June 27, 2017

சாயியின் உதி

துவாரகாமாயீயில்  சாய் பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருக்கிறது. அதில் விறகுக்கட்டை போட்டு எரித்துக் கொண்டிருந்தார். அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.

தன் பக்தர்களுக்கு இந்த அக்னிக் குண்டத்திலிருந்து 'உதிஎன்று அழைக்கப்படும் விபூதியை எடுத்து தருவார். அக்னி  குண்டத்திலிருந்து எடுக்கும் போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம்.

பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும் போக்கவல்லது. தினமும் குளித்தபின் உதியை நெற்றியில்  இட்டு கொண்டும், கொஞ்சம் நீரில் கலந்தும் சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.

பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும். அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

உதி விதியை மாற்றும்


துகாராம் சீரடியில்  விவசாயம் செய்து வந்தார். 1912ம் ஆண்டு சீரடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கரஞ்சிகாவோன் என்ற கிராமத்திற்கு சென்று வேலை செய்து சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டார்.
அப்போதுதான் கோதாவரியை சுற்றியுள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டார்கள்.அதனால் தனக்கு அங்கே வேலை கிடைக்கும் எனப் புறப்பட்டார்.
கோபர்கான் சாலையில் செல்லும்போது, பாபா அவரது கழுத்தில் தன் கையைப்போட்டு போகாதே என்றார். ஆனால் துகாராம்பாபாவின் வார்த்தையினை கண்டு கொள்ளவில்லை. கரஞ்சிகாவோன் வந்தார். 
வந்த மறுநாளே அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் நிற்கவே இல்லை. தன் சாப்பாட்டிற்காக சம்பாதிக்க வந்தவர், தற்போது அவரே சொந்தக்காரர்களைச் சார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டது.
பதினைந்து நாட்கள் கழித்து ஷீரடிக்கு திரும்பி விட நினைத்தார். காய்ச்சல் நிற்கவில்லை. 45 நாட்கள் தொடர்ந்தது. உடனே தன் அம்மாவிடம் சொல்லி பாபாவின் உதியை அனுப்பச் சொன்னார். உதியை இட்டுக் கொண்ட  மறுநாளே காய்ச்சல் முற்றிலும் நின்று  விட்டது.

Monday, June 26, 2017

குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்


இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனைக் காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படியே இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார்! 
அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை  சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்.
                                               
                                                     ஸ்ரீ குரு சரித்திரம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...