நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Wednesday, June 28, 2017

நான் உனக்கு துணை நிற்பேன்!!!

என் அன்பு குழந்தையே!
உன்னை நான் சரி செய்து வருகிறேன் என்பதை நீயாக உணர்ந்து, சில விஷயங்களை, நீ திருத்தி மாற்றிக்கொண்டு வருகிறாய் என்பதை நான் அறிவேன். நல்ல விஷயம்தான். ஆனால், ஒரு விஷயத்தில்  மட்டு்ம், உன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் நீ திணறுகிறாய். அது உன் சாய் அப்பா,  கண்களில் இருந்து எப்படி தப்ப முடியும்?
மற்றவர்கள் உன்னை எந்த வகையில் வசைபாடினாலும், அவர்களுக்கு பதில் கூறாதே. அவர்களுக்கு நீ பதில் கூறும் தருவாயில் இருந்தால், நீ தவறு செய்யாவிட்டாலும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி அவர்களிடம் இருந்து விலகி வந்து விடு. ஏன் அப்பா தவறு செய்யாமல் நான் மன்னிப்பு  கேட்க வேண்டும் என்று தானே நீ யோசிக்கிறாய். மன்னிப்பு என்பது தவறு செய்தால்தான் கேட்க வேண்டும் என்பதி்ல்லை. நாமும் அவர்களுடன் சரி சமமாய் வாக்குவாதம் செய்தால் இழந்து போவது நம்முடைய நிம்மதிதான்.
அதனால் நீ வாக்குவாதம் செய்யும் சூழ்நிலை வந்தால், அந்த இடத்தை விட்டு உடன் நகன்றுவிடு. என் பிள்ளையின் நிம்மதியான வாழ்க்கையில்தான்,  உன் சாய் அப்பாவின் நிம்மதி இருக்கிறது.  மன்னிப்பால் நீ தாழ்ந்து போகவில்லை. உயர்ந்து நிற்கப்போகிறாய்.
மற்றவர்களை நேசிப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் தான் உலகம் என்று இருக்காதே. அவர்கள் அன்பிற்கு சார்ந்து இருக்காதே. அந்த அன்பு சில சூழ்நிலையால் குறைந்து போகலாம். அப்பொழுது நீ ஏமாந்து உன் வாழ்க்கையில் வெறுமையைக்காண்பாய். 
இப்பொழுது நான் உன்னிடம் சொல்பவகளை தெளிவாகப்புரிந்து கொள்.
அன்பு தவறு இல்லை.  ஆனால் அளவு கிடந்த அன்பில் எதிர்பார்ப்பு ஏற்படும். அதில்  நீ என்றும் மாட்டிக் கொள்ளாதே. அது உன் வாழ்க்கையில் நிம்மதியற்ற சூழ்நிலையை உருவாக்கிவிடும். ஏனென்றால் இவ்வுலகில் சார்ந்து நிலையுள்ள படி இருக்கும் அளவிற்கு ஏதுவும் நிரந்தமில்லை. இவ்வுலகில் நீ பிறந்தாய்வாழ்ந்தாய் என்று இருக்காதே. மற்றவர்களின் உணர்வை உன் உணர்வாக மதித்து நட. வாழ்க்கையில் போராடித்தோற்பது என்பது அவமானம் இல்லை. வெற்றியை விட உனக்குக்கிடைத்த மிகப் பெரிய பரிசு அனுபவம்.
அந்த அனுபவத்தில்தான் வாழ்க்கையை   உன்னால் வாழ முடியும். அதன் பிறகுத்தான் உண்மையான வாழ்க்கைக்கான அர்த்தத்தை நீ உணர முடியும். சோம்பேறித்தனத்தை தூக்கி எறி. போராடு. போராடாமலே வாழ்க்கையைக்கடினம் என்று சொல்லாதே  பிறகு உனக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கடினம்தான்.
இவ்வுலகில் நிரந்தரம் என இருவரை நினைத்து கொள். ஒன்று உனக்குள் இருக்கும் ஆத்மா. இன்னொன்று உன் சாய் அப்பா. யார் வேண்டுமானாலும் உன்னை விட்டு விலகிச் செல்லட்டு்ம்.  நான் உன்னை விட்டு விலகிப்போக மாட்டேன். உனக்கான எல்லாவற்றையும்,  உன் வாழ்க்கைக்கு நல்லதாய் இருக்கும்படியான விஷயங்களைத்தான் நடைபெற அனுமதிப்பேன்.  நீ உயிரான அன்பின் ஆத்மா. நீ என் குழந்தாய். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் நான் உனக்கு துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்