பாபாவின் அடியவரான நாராயண் ஜனியின் நண்பர் ஒருவரைத் தேள்
கடித்தது. அவர் பாபாவின் படத்தின் முன் நின்று, அவர் நாமத்தை ஜெபித்து
பாபாவின் படத்தின் முன்னால் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து
ஒரு சிட்டிகை எடுத்து அதை பாபாவின் உதியாக நினைத்துக்கொண்டு வலிக்கும் இடத்தில்
தடவியவுடன் வலி மறைந்து போய்விட்டது.
பிளேக் வியாதியுடன் உள்ள ஒருவரை குணப்படுத்த வேண்டி, அப்போது வேறு இடத்திலிருந்த நானா சாஹேப் சந்தோர்க்கர், மண்ணை
உதியாக எண்ணி, சாயியை நன்கு வேண்டிக்
கொண்டு, அருகிலிருக்கும் தன் மனைவியின் நெற்றியில் இட்டார். ஆச்சரியப்படும் அளவில் குணமாகியது. நோய் குணமாக வேண்டும் என்று
நினைத்து, எங்கிருந்து வேண்டுமானாலும், உதியை சாயியை நினைத்து
உபயோகப்படுத்தலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.
No comments:
Post a Comment