ராம்
லால் மும்பையில் வசித்துவந்த பஞ்சாபி பிராமணர். பாபாவை பார்த்திராத அவரது
கனவில் தோன்றி, என்னைப் பார்க்க வாரும்
என அழைத்தார் சாயி பாபா.
அந்தக்
கனவு அவர் மனதில் பதிந்தது.
தன்னை அழைத்தவர் யார்? எங்கிருக்கிறார்? என்ன
செய்கிறார்? அவரது குணம் எப்படி? என்னைப்பார்க்க
வாரும் என அழைத்தாரே, எப்படி
அவரை தரிசிப்பது என நினைத்தார். அவருக்குப்
போக விருப்பம்தான். போகும் இடம்தான் தெரியாது.
பிற்பகல்
வேளையில் தெரு வழியாக நடந்து
சென்றுகொண்டிருந்தபோது, ஒரு
கடையில் படம் ஒன்றைப் பார்த்துத் திடுக்கிட்டார். கனவில் பார்த்த அதே உருவம்.
கடைக்காரரிடம் விசாரித்த போது, அது சீரடியில்
இருக்கும் சாயி பாபா என்பதை
அறிந்து நிம்மதி அடைந்தார். சீரடிக்குப் புறப்பட்டுச்சென்றார். பாபா மகாசமாதி அடையும்
வரை அங்கிருந்து, பாபாவுடன் வாழும் பாக்கியம் பெற்றார்.
சீரடிக்குப்
பக்கத்தில் ரகாதா என்ற ஊர்
உள்ளது. இந்த ஊரில் உள்ள
குசால் சந்த், சந்த்ரபான் சேட்
ஆகியோரை பார்ப்பதற்காக
பாபா அந்த ஊருக்கு அவ்வப்போது வருவார்.
ரகாதா செல்லமுடியாத சூழலில் பாபாவுக்குக்கு சால் சந்தைப்
பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.
தீட்சிதரிடம்,
“குதிரை வண்டியில்
ரகாதாவுக்குச் சென்று குசால் பாவுவை அழைத்து
வாரும். அவரை சந்திக்க மனம் ஏங்குகிறது. பார்த்துப்
பல நாட்கள் ஆகிவிட்டன. பாபா உங்களை சந்திக்க
விரும்புகிறார். ஆகவே, வரச் சொல்கிறார்
என்று அவரிடம் சொல்லும்” எனக்
கூறி அனுப்பினார்.
மதிய
வேளைக்குப் பிறகு தீட்சிதர் இந்தத்
தகவலை ரகாதா சென்று குசால் சந்த்திடம்
கூறினார். உடனே குசால் சந்த்,
“இப்போதுதான் தூங்கி எழுந்தேன். எனது
கனவிலும் பாபா இதைத்தான் சொன்னார். எனக்கும்
அவரை சந்திக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. எனது
குதிரை வண்டி இல்லாமல் என்ன செய்வது என
யோசனையாய் இருந்தேன். இந்த விக்ஷயம் பற்றி
இப்போதுதான் என் மகனிடம் கூறி அனுப்பினேன்.
அவன் கிராம எல்லையைக்கூட தாண்டியிருக்கமாட்டான், நீங்கள் வந்துவிட்டீர்கள்!” என்றார்.
”நீங்கள்
வருவதாக இருந்தால் எனது குதிரை வண்டி தயாராக
இருக்கிறதுளூளூ என தீட்சிதர் கூறியதும்,
மகிழ்ச்சியுடன் குசால்சந்த் சீரடிக்கு வந்தார். பாபாவும், குசால்சந்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆனந்தப்பட்டார்கள்.
பாபாவின் லீலையை நினைத்து குசால் சந்த் ஆனந்தக்
கண்ணீர் வடித்தார். உங்களையும் பாபா கூப்பிடுகிறார், செல்லுங்கள்.
No comments:
Post a Comment