அரக்கர் என யாரைச் சொல்கிறார்கள். அரக்கர் இனம் தனியாக இருந்திருந்தால்
டைனோசரை கண்டுபிடித்த அறிவியல், அரக்கரையும் கண்டு பிடித்திருக்குமே!
எம். கோதண்டம், சென்னை - 33
சாயி புத்ரன் பதில்கள்
அரக்கர் இனம் எனத் தனியாக ஒன்றில்லை. நம்மில் அகம்பாவம் கொண்டு
தன்னையே எப்போதும் உயர்வாக
நினைப்பவர், கர்வம் உள்ளவர், சுயநலக்காரர், துஷ்டர், சுகபோகி, காமாந்தகர், முன்கோபி, அக்கிரமத்தில் அதிக ஈடுபாடுகொண்டவர்,
கொடூர குணம் படைத்தவர், தன் வழிபாடு, கடவுளைத் தவிர பிறரை
ஏற்காதவர் என்ற இந்த அம்சங்களை தன்னிடம் கொண்டுள்ளவரையே அரக்கர் எனக் கூறினார்கள்.
No comments:
Post a Comment