ஒரு நாள் பிற்பகல் பக்தர் ஒருவர் ரமண மகரிஷியிடம், ‘சுவாமி, எனக்கு ஒரு விருப்பம்….என்
தலையினை தங்களது திருவடியில் வைத்து வணங்கிட வேண்டும்’ என்றார்.
‘ஓ அதுவா! ஆனால்…எது தலை, எது கால்?’ , என்று கேட்டார் ரமண பகவான். அன்பர் பதிலேதுமின்றி
அமைதியானார்.
சற்று நேரம் கழித்து , ‘நான் என்ற அகந்தை
உணர்வே சிரசு, அகந்தை கரையுமிடமே குருவின் பாதம்’ என்றார் ரமணர்.
No comments:
Post a Comment