Sunday, December 2, 2012

கோடி நன்மை தரும் கூட்டுப்பிரார்த்தனை



      கோடி நன்மை தரும் கூட்டுப்பிரார்த்தனை

        நமக்குத் தொடர்கதையான கஷ்டத்திற்க்கு காரணம் கடவுளை வணங்கும் வழிமுறையினை முறையாக பின்பற்றாமல் போனது.

விரதம் இருப்பது பலன் தருமா?



விரதம் இருப்பது பலன் தருமா?

நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறேன். விரதம் இருந்தேன். சீரடிக்கும் போய் வந்தேன். அப்படியிருந்தும் எனது பிரார்த்தனைக்கு இன்னும் பாபா பலன் எதையும் தரவில்ல்லையே ஏன்?

-          என். உமாதேவி., மதுரை



        ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உள்ளது. கீரை விதைத்தால் பத்துப் பதினைந்து நாட்களில் பலன் தரும். காய்கறிகளைப் போட்டால் மூன்று மாதமாகும். பொன்னி போன்ற விதை விதைத்தால் ஆறு மாதமாகும். வாழை பயிரிட்டால் பலன் கிடைக்க ஒரு வருடமாகும். தென்னையைப் போட்டால் ஐந்து வருடமாகும்.



       உங்கள் பிரச்சனைக்கு ஏற்பத்தான் பலனும் கிடைக்கும். பத்து லட்சம் கடனை வாங்கிவிட்டு பத்துப்பைசா இல்லாமலும், அதைப் பெறும் வழியினைத் தேடாமலும் விரதமிருந்து கூரையினை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி பலன் கிடைக்கும்?



       கடவுள் மீது நம்பிக்கை வைத்து அதற்கான கால நேரத்தை அவர் உருவாக்கித் தரும்வரை பொறுத்திருந்தால் பலன் கிடைக்கும். அல்லது வேண்டியதைப் பெறவேண்டும் என்ற மன உறுதியாவது இருக்கவேண்டும்.







                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

நாம லிகிதத்தால் பலன் உண்டா?





சாயி நாம லிகிதம் எழுதுகிறேன்.  பத்தாயிரம் தடவை எழுதினால் நன்மை நடக்கும் என்கிறார்கள். நான் அவ்வப்போது எழுதினேன். ஆனாலும் நடக்கவில்லையே ஏன்?

-          எஸ். சகுந்தலா, மணலி



        லிகிதம் எழுதுவது என்பது ஒருவித தியான முறை. இதை எழுதும் போது மனம் ஒன்றி சாயிராம், சாயிராம் என எழுதவேண்டும். எண்ணிக்கையினைப் பூர்த்தி செய்துகொண்டு போவதால் பலன் ஏதும் கிடைக்காது.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

Saturday, December 1, 2012

வைகுண்டம் என்பது சீரடி போன்ற இடமா?



வைகுண்டம் என்பது சீரடி போன்ற இடமா?

வைகுண்டம் என்பது சீரடி போன்ற இடமா? அது எங்கே இருக்கிறது?

-          எ.பவானி, திருக்கழுக்குன்றம்



       சீரடியினை விட சிறப்பான இடம். சீரடி ஜன சந்தடியால் பரபரப்புடனும் பல பிரச்சனை உள்ளவர்கள் சங்கமிக்கும் இடமாகவும் இருக்கிறது. எங்கே துன்பங்கள் இல்லையோ அங்கேதான் இருக்கிறது வைகுண்டம். எந்த இடத்தில் எதை பற்றியும் நினைக்காத சிந்தனை தோன்றுகிறதோ  அந்த இடமே வைகுந்தம். குழந்தைகளின் மனம் போன்ற இடமே வைகுந்தம். அது கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

குழந்தையும் ஞானியும்



குழந்தையும் ஞானியும்

குழந்தை, ஞானி, கடவுள் மூவரும் ஒன்று போல இருப்பார்கள் என்கிறார்களே, இது எப்படி பொருத்தமான விஷயமாக இருக்கும்?

-          வீ.நந்தினி, பள்ளியகரம்



         கடவுளை விட்டு விடுங்கள். அவர் எதனாலும் பற்றப்படுபவர் அல்ல.  குழந்தையும் ஞானியும் இருவேறு முனைகளில் இருப்பவர்கள். தூரத்திலிருந்து பார்த்தால் இருவரும் ஒன்று போலத் தெரிவார்கள்.  ஆனால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருவருக்கும் இடையில் உள்ளது. குழந்தைக்கு அறிவு தோன்றியிருக்காது.  அதனால் அது இன்பம் துன்பம் பற்றி சிந்திக்காது. ஞானி எல்லாவற்றையும் அறிந்தவர். இன்பமும் துன்பமும் மாறி மாறி வருபவை என்பதும்,  எந்த ஒன்றுமே நிலையானவை அல்ல என்பதும், இந்த உலகமே மாயை என்பதும் அவர் ஞானத்தால் கண்டறிந்தவர்.  அதனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்துவிடுவார். இதனால் குழந்தையும் ஞானியும் இன்று என்கிறார்கள். கடவுள் எதையும் கண்டுகொள்ளாதவன் என்பதால் அவனும் குழந்தை மாதிரிதான்.   







                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...