குழந்தையும் ஞானியும்
குழந்தை, ஞானி, கடவுள் மூவரும்
ஒன்று போல இருப்பார்கள் என்கிறார்களே, இது எப்படி பொருத்தமான விஷயமாக இருக்கும்?
-
வீ.நந்தினி, பள்ளியகரம்
கடவுளை விட்டு விடுங்கள். அவர் எதனாலும்
பற்றப்படுபவர் அல்ல. குழந்தையும் ஞானியும்
இருவேறு முனைகளில் இருப்பவர்கள். தூரத்திலிருந்து பார்த்தால் இருவரும் ஒன்று போலத்
தெரிவார்கள். ஆனால் மலைக்கும் மடுவுக்கும்
உள்ள வித்தியாசம் இருவருக்கும் இடையில் உள்ளது. குழந்தைக்கு அறிவு
தோன்றியிருக்காது. அதனால் அது இன்பம்
துன்பம் பற்றி சிந்திக்காது. ஞானி எல்லாவற்றையும் அறிந்தவர். இன்பமும் துன்பமும்
மாறி மாறி வருபவை என்பதும், எந்த ஒன்றுமே
நிலையானவை அல்ல என்பதும், இந்த உலகமே மாயை என்பதும் அவர் ஞானத்தால்
கண்டறிந்தவர். அதனால் அவர் எதைப்
பற்றியும் கவலைப்படாமல் இருந்துவிடுவார். இதனால் குழந்தையும் ஞானியும் இன்று
என்கிறார்கள். கடவுள் எதையும் கண்டுகொள்ளாதவன் என்பதால் அவனும் குழந்தை
மாதிரிதான்.
- சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்
வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
No comments:
Post a Comment