Wednesday, June 5, 2013

உங்கள் காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக!




சத்சரித்திரம் மிக அழகாகக் கூறுகிறது்:  ஸாயி தரிசனம் விதியால் விளைக்கப்பட்ட ஆபத்துகளையும், நிவாரணமே இல்லாத மனோ வியாதிகளையும் கூட நிர்மூலமாக்கிவிடுகிறது என்று.
நமக்குத் தெரியவேண்டியது் எல்லாம் விதிப்படித்தான் நடக்கிறது என்ற உண்மை மட்டுமே..
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டுவிட வேண்டும் என எதற்காக வலியுறுத்தப்படுகிறது என்றால், இது தெரிந்துவிட்டால் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் கலங்கமாட்டோம், எதையும் இயற்கையான நிகழ்வு என எடுத்துக் கொள்வோம். ஏமாற்றத்தின் போது இடிந்துபோக மாட்டோம்.  சோதனையின்போது கலங்கமாட்டோம். தோல்வியின் போது துவளமாட்டோம்.
விதியால் விதிக்கப்பட்ட ஆபத்துக்கள் என எதைக்கூறுவோம்? எவையெல்லாம் நமக்கு இன்பத்தைத் தவிர பிறவற்றைத் தருகின்றனவோ, அவையெல்லாமே விதியால் விளைவிக்கப்பட்ட ஆபத்துகளே. இவற்றை நாம் கிரக தோஷங்கள் என்று கூறுகிறோம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு கிரகத்தையும், அது பிறிதொரு கிரகத்தோடு சேர்வதன் காரணத்தால் வருகிறது என்றும் கூறுகிறோம்.  இதற்கு அடிப்படையாக நாம் பிறந்த நாள், நட்சத்திரம், திதி போன்றவற்றைச் சொல்லுகிறோம். இவையெல்லாம் என்ன?
இவைதான் விதி எனப்படுகிறது.
இயற்கையின் கூறுகளை மனிதன் பிரித்து வைத்து அதனோடு நேரம் காலத்தைப்பொருத்தி வைத்துப் பார்ப்பதன் விளைவு. இவை அனைத்தின் காரணமாகவும் நமக்கு ஆபத்துக்களும், சோதனைகளும் வரலாம் என்றாலும், சாயி பாபாவின் தரிசனத்தை மட்டும் பெற்றுவிட்டால் போதும்- எத்தகைய கிரகக் கோளாறாக இருந்தாலும் சரியாகிவிடும்.
மனோவியாதிகள்!
மனோவியாதிகள் என்பவை இயற்கையால் தரப்படுபவை அல்ல என்கிறார் ஹேமாட்பந்த். நாம் நமது கர்மங்கள் (செயல்பாடுகள்) காரணமாக ஏற்படுத்திக் கொள்கிற நிலை அது. மனதினால் ஏற்படும் தொல்லை. இந்தத் தொல்லையை மட்டும் சரிப்படுத்திவிட்டால்போதும்! மனநலப் பிரச்சினை முற்றிலுமாக சரியாகிவிடும் என்கிறது சத்சரித்திரம்.
எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த மனநலப் பிரச்சினையால் ஆண்களை விடபெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் மாதவிலக்குத் தொடங்கி, மாதவிலக்கு நிற்கப் போகிற நிலையில் உள்ளவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
பூப்படைந்த பெண்ணுக்கு ஏற்படுகிற புதிய மாற்றங்கள் ஒரு அச்சத்தை, தயக்கத்தை, மிரட்சியைக் கொடுத்துவிடும்போது அவள் வீட்டுக்குள் முடங்கிப் போக நினைப்பாள். அதிகமாக யாருடனும் பேச மாட்டாள். சில வேளைகளில் பித்தேறியவளைப் போலவோ, பேய் பிடித்தவளைப்போலவோ நடந்து கொள்வாள்.
திருமணமாகி வீட்டுக்குப் போகிற மருமகள் மாமியார் குடும்பத்தைப் பார்த்து மிரளுவாள். உள்ளுக்குள் பயம் தோன்றும்.. இது மன உளைச்சலாகி ஹிஸ்டீரியா என்ற நிலையைத் தோற்றுவிக்கும். இந்த நிலையை அடைந்தவர்கள் சும்மாவாகவே தனக்கு நோய் வந்துவிட்டதைப் போன்றும், பேய் அல்லது வீட்டுக் கடவுள் பிடித்து ஆடுவதைப்போலவும் நடந்துகொள்வார்கள்.
மாதவிலக்கு நிற்கிற நிலையிலுள்ள பெண்களுக்கு மன நல பிரச்சினைகள் அதிகமாக வரும். மற்ற நிலைகளைப் போல இல்லாமல், பாதுகாப்பற்ற உணர்வை உண்டாக்கும். எல்லோரும் தன்னை ஏமாற்றுவதைப் போலவும், யாருமே நன்றியில்லாதவர்கள் என்ற நினைப்பையும் உண்டாக்கும். அச்சம், பயம், பதற்றம், சிடுசிடுப்பு, எரிச்சல் என அனைத்தும் தோன்றும். உடலில் சக்திக்குறைந்தது போன்ற உணர்வு தோன்றும். யாரோ தனக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று புலம்புவார்கள். இதெல்லாம் மாதவிலக்கு நிற்கிற சமயத்தில் தோன்றுகிற மனநிலை பாதிப்புகள்.
இதற்குக் காரணம் உடலில் இயற்கையாக சுரக்க வேண்டிய ஹார்மோன்களின் அளவு குறைந்து கூடுவதும், நின்று விடுவதுமாகத்தான் இருக்கும். இதுவும் உடல்நல பாதிப்பின் தொடர்ச்சிதான்.  இவற்றோடு மற்றவர்களின் தொல்லையும் அச்சுறுத்தலும் சேரும்போது பெண் மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் இருப்பாள்.
இத்தகைய சிக்கல்களும் எப்போது தீர்வு பெறும் என்றால், சாயி பாபாவின் தரிசனத்தைப் பெற்ற மாத்திரத்தில் சரியாகும் என்கிறது சத்சரித்திரம். (அத் 34 - 27)
ஆகவே, உடல் நலப்பிரச்சினையோ, மன நலப்பிரச்சினையோ, வேறு விதமான சிக்கல்களோ தீர்வுகளைத் தேடி அங்கும் இங்கும் ஓடாதீர்கள். இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி ஓடுவானேன்! பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொள்ளுங்கள்... நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.
அதன் பிறகு நீங்கள் எந்தக் காரியம் செய்தாலும் அது கைகூடும் என்பதை அறிவீர்களாக.

Tuesday, June 4, 2013

உதடுகள் உச்சரிக்கட்டும்!





சாயி மகராஜரே!
 பலவிதமான நூல்களைப் படித்துவிட்டேன். வேதங்களின் சிகரமான உபநிஷத்துக்களையும் மனப்பாடம் செய்துவிட்டேன். சத்தான சாஸ்திரங்களையும் புராணங்களையும் பிறர் சொல்லக்கேட்டுவிட்டேன். ஆயினும் என் மனம் ஏக்கம் பிடித்தலைகிறது.
நான் படித்ததெல்லாம் வீண் என நினைக்கத் தோன்றுகிறது. ஓர் எழுத்தும் படிக்காத பக்தியுள்ளவர், என்னைவிடச் சிறந்தவர் என்றே நினைக்கிறேன். நான் பலநூல்களைக் கற்றதும், சாஸ்திரங்களைப் பரிசீலனை செய்ததும் வீண். மனத்திற்கு சாந்தியளிக்காத அனைத்து புத்தக ஞானமும் வீணே.
ஜபம் செய்தும் மன அமைதி பிறக்க வில்லை எனில் ஜபம் செய்து என்ன பிரயோஜனம்.
சாயி தரிசனம் மனக்கவலைகளை அகற்றி விடுகிறது என்றும், சாந்தியை அளிக்கிறது என்றும், இவை அனைத்தும் உல்லாசமான தமாஷ் பேச்சிலேயே நடந்துவிடுகிறது என்றும், சாயி மிகச் சுலபமாக பக்தர்களுக்கு நல்வழி காட்டுகிறார் என்றும் செவி வழிச்செய்தியாக அறிந்தேன்.
ஆகவே, தவக்கடலான சாயி மகராஜரே! உம்முடைய பாதங்களை நாடிப் பணிவுடன் வந்திருக்கிறேன். என் மனம் சஞ்சலமடையாமல் நிலையான சாந்தியைப் பெற ஆசீர்வாதம் செய்யுங்கள். (சத் அத்21)
மகராஜரே! உம்முடைய கிருபையின் பலத்தால் நாங்கள் செய்த வினைகளாலும், செய்யத் தவறிய வினைகளாலும் பின்னிக்கொண்ட வலைகளை அறுத்தெறியுங்கள். தீனர்களையும் பலவீனர்களையும் துக்கத்திலிருந்தும் வேதனையில் இருந்தும் விடுவித்து அருளுங்கள்.
நிர்மலமான சாயி ராயரே! தீங்கு விளைவிக்கும் வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் உம்முடைய கருணையால் நிர்மூலமாக்கிவிடுங்கள். நாக்கு உமது நாமத்தை உச்சரித்து நாமஜெபம் செய்வதிலேயே இனிமை காணட்டும்.
மனைவி, மக்கள், நண்பர்கள் கூட்டம் - கடைசிக்காலத்தில் இவர்களில் யாராலும் எந்தப்பயனும் கிடைக்காது. நீர் மாத்திரமே கடைசிவரை கூட வரும் துணைவர். உம்மால்தான் சுகத்தையும் முக்தியையும் அளிக்க இயலும்.
சங்கற்பங்களும் விகற்பங்களும் என் மனத்திலிருந்து அழிந்து போகுமாறும், உடல் உற்றார் உறவினர், சொத்து, சுகம், இவை அனைத்தையும் நான் அறவே மறந்து போகுமாறும் என்னுடைய இதயத்தில் இறையன்பைப் பொங்கச் செய்வீராக.
மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்துபோகுமாறு உம்முடைய நாமஸ்மரணமே எந்த நேரமும் மனத்தில் ஓடட்டும். என்னுடைய மனம் அலை பாய்வதையும் சபலத்தையும் தொலைத்துவிட்டு சாந்தமாக ஒருமுகப்படட்டும்.
உங்களுடைய நிழலில் எங்களுக்கு இடம் கிடைத்தால் அஞ்ஞானமாகிய இரவு மறைந்து போகும். உம்முடைய பிரகாசமான ஒளியில் சுகமாக வாழ்வதைவிட வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம்.

Monday, June 3, 2013

இறைவனை எளிதில் அடைய!


எப்படி பக்தி செய்தால் இறைவனை அடைய முடியும்? சாயியின் அனுக்கிரகத்தைப் பெறமுடியும்? சுலபமான வழியிருந்தால் சொல்லுங்களேன்.
(ஆர். காஞ்சனா, சென்னை)

நீங்கள் கேட்பதன் பொருள், எப்படி பக்தி செய்தால் இறைவனிடமிருந்து நன்மையைப்பெறுவது என்ற அர்த்தத்தில் என நினைக்கிறேன்.
எதையாவது எதிர்பார்த்து பக்தி செய்வது உகந்தது அல்ல. எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்வதே சிறந்தது. முயற்சிக்கலாம்.
இப்படியில்லாமல் ஆன்மீக ரீதியாக அவனை அடைவது என்ற அர்த்தத்தில் கேட்டால், எப்படி பக்தி செய்தாலும் இறைவனை அடையமுடியும்.
ஆனால் முழு மனதோடும், முழுமையான ஈடுபாட்டுடனும் பக்தி செலுத்தவேண்டும்.
பக்திக்கு கட்டுப்பாடோ, எல்லையோ, வேறு வித சட்டதிட்டங்களோ இல்லை. தூய மனம், ஆத்மார்த்தமான தொடர்பு இவையே தேவை.
காமத்தால் கோபிகையர், துவேக்ஷத்தால் சிசுபாலன், பயத்தால் கம்சன், உறவால் வ்ருக்ஷணி குலத்தார்,  நட்பால் பாண்டவர்கள்,  பக்தியால் ரிஷி முனிவர்கள் போன்றோர் இறைவனை அடைந்ததாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாராம்சம் என்னவெனில் நீங்கள் இறைவன் மீது எந்த மன
நிலையில் இருந்தாலும் அந்த நிலையிலேயேயும் இறைவனை தீவிரமாக நினைத்துக் கொண்டு இருப்பதுதான்.

Sunday, June 2, 2013

ஸ்ரீ சாயி தரிசனம் மாத இதழ்





சாயி தரிசனத்தின் இனிய வாசகர்களே!
உங்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாதந்தோறும் சாயி தரிசனம் பத்திரிகை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இந்தப் பத்திரிகையின் ஒவ்வொரு வரிகளும் எங்களோடு பேசுகின்றன, எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கின்றன, புதிய வழியைக் காட்டி, சாயி மீது பக்தியை மேலும் வளர்க்க உதவுகின்றன என்று நீங்கள் சொல்லும் போதும், எழுதி அனுப்பும் போதும்; உண்மையிலேயே பாபாவுக்கு ஒரு சிறிய கருவியாக உங்களோடு இருப்பதற்காக பூரிப்பு கொள்கிறேன்.
தினந்தோறும் நு}ற்றுக்கணக்கான பக்தர்களோடு பேசவும், அவர்களுடைய நிறைகுறைகளைக் கேட்டு அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யவும் பாபா என்னைப் பணித்திருக்கிறார் போலும். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறிய பத்திரிகையாக இருந்த சாயி தரிசனம், இன்று பக்தர்களின் பேராதரவுடன் உலகநாடுகள் பலவற்றில் கிடைக்கிறது.
சமீபத்தில் துபாயில் உள்ள தமிழர்கள், பிரார்த்தனைக்கூட்டத்தை துபாயில் ஏற்பாடு செய்துவிட்டு, தொலைபேசி வாயிலாகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.  ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சினைகளை போன் மூலம் கூற, நான் இங்கிருந்தபடி பிரார்த்தனை செய்ததை மற்றவர்கள் கேட்கும் வகையில் ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பி, பெருங்களத்தூரில் நடக்கும் பிரார்த்தனை போலவே அங்கு நடக்க ஏற்பாடு செய்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு திருமதி. ஜெயலட்சுமி அம்மையார் ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் புதிய முறை கூட்டுப் பிரார்த்தனை மீது வெளிநாட்டில் வாழ்கிற மக்கள்  வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்தது.
இது மட்டுமல்ல, இந்தப் பத்திரிகையை அவர்கள் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி, தாங்கள் செல்லும் நாடுகளில், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குத் தருவதும், அதன் மூலம் என்னைத் தொடர்பு கொள்வதும்,  சாயி தரிசனம் பத்திரிகையை பரப்புவதற்கு பாபா செய்துவரும்
அற்புதங்களாகும்.
இதேபோல, சீரடியில் சோட்டா பாபா ஆலயத்தை நிர்வகித்து வரும் பூஜ்ய மதன் பாபா, நம் தமிழ் மக்கள் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பின் காரணமாக, நமது பத்திரிகையை மாதந்தோறும் நு}ற்றுக் கணக்கில் வாங்கி இலவசமாக அங்கு வரும் தமிழர்களுக்குத் தந்து வருகிறார்.
பாண்டிச்சேரியில் பாபா மாஸ்டர் அருணாச்சலம் ஆசியோடு காலாப்பட்டு ஆலயத்தில் புதிதாக அமைந்துள்ள விற்பனைக் கூடத்தில் நான் எழுதிய அனைத்து புத்தகங்களையும் பக்தர்களுக்குக் கிடைக்கும் படி செய்து வருகிறார்கள். பாபா மாஸ்டரும் நு}ற்றுக்கணக்கான புத்தகங்களை மக்களுக்கு வாங்கித் தந்து சாயி தரிசனம் புத்தகத்தை வளர்த்து வருகிறhர்.
என்னோடு சீரடி யாத்திரைக்கு வந்த அன்பர் ஒருவர், இந்தப் பத்திரிகையினை பிறருக்கு அறிமுகப்படுத்துவதையே நான் சாயிக்கு செய்கிற சேவையாக நினைத்துச் செய்கிறேன் என்று கூறியபோது நான் வியந்துபோனேன்.
மடிப்பாக்கம் ஜெயச்சந்திரன், பாஸ்கரன் உட்பட இந்த சேவையைத் தொடர்வதற்காக நன்றிக்கடன்படுகிறேன். இப்படி, பாபாவால் உருவாக்கப்பட்டு, அவரது பக்தர்களாலும், அடியார்களாலும் வளர்க்கப்பட்டு வருவதால்தான் இந்தளவுக்கு உலக அளவில் பேசப்படும் நிலைக்கு நம் பத்திரிகை உயர்ந்துள்ளது. உங்கள் வாழ்வில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, பாபா உங்கள் மனதில் குடி கொண்டு நல்வழிப்படுத்த இந்தப்பத்திரிகை உதவுமாயின் அதுவே என் பிறவிப் பேறு 
                                   அன்புடன் ஆசிரியர்  சாயி வரதராஜன்


Saturday, June 1, 2013

தடையை வெல்லும் தாரக மந்திரம்




அன்பான சாயியின் பிள்ளையே!
தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம்.  எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்து விடாமல், அடுத்த இலக்கை நோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும்.
அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானாவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம் மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும் தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும் என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார். இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம், சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான். மனிதர்கள் போடும் தடைகள் மலைகள் அல்ல,
தாண்டுவதற்குச் சிரமமாக இருக்கும் என்று மலைத்து நிற்பதற்கு. அவையெல்லாம் மடை திறந்த வெள்ளத்தின் முன்னால் கையால் அள்ளிப் போடப்பட்டுள்ள மணல் குவியலைப் போன்றவை. உன்னை அவை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தைரியமாக நினைத்துக் கொள்.. சிந்தனையை ஒருமுகப் படுத்துதைரியத்தை வரவழை.. கோழைகளைப் போல கூப்பாடு போடாமல், செயலாற்றத் தயாராகு. தடை தளர்ந்து போகும்.

               பாபா என்ன சொன்னார் தெரியுமா? நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப்பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை)  உனக்கு வேண்டா.  ஏனெனில், உனக்குப் பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக் கொண்டு நிற்கிறேன்.
ஆனால், நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாகப் பாலைத் திருப்தியுறும் வரை கொடும் என்று கேட்டால் (பலனைக் கேட்டால்), , அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுவேன். செயலாற்றுபவன் துடிப்பு உள்ளவனாக இருக்கவேண்டும் என்பார் பாபா. (சத் அத்தியாயம் 19)


                  பாபாவின் இவ்வாக்குறுதியை சத்தியம் என்று எடுத்துக்கொண்டு எவர் செயல்படுகிறாரோ, அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் சந்தோசம் என்றும் சுரங்கத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார். இதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள். மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறோம். தேர்வு என்பது என்ன? அது ஒருவிதத் தடை.. அதைத் தாண்ட முடியாதவன் பழைய இடத்திலேயே இருப்பான், தாண்டியவன் புதிய இடத்திற்குப் போவான். இப்படித்தான் உங்களுக்கு இப்போது ஏற்பட்டு உள்ள தடைகளும்.. சாயி பக்தர்களாகிய நம்மைப் பொறுத்தவரை தடை என்பதே நமக்குக் கிடையாது. நாம் யாரை வணங்குகிறோம், அவருடைய சக்தி என்ன? யார் நமக்குப் பின்னால் இருந்து உதவுவது என்பதையெல்லாம் நாம் தெளிவாக அறிந்திருக்கும்
போது எதற்காக பயப்பட வேண்டும்? ஜெயிப்பதற்காகத்தான் உனக்கு தரப்பட்டுள்ளது ஜெய ஜெய சாயி என்கிற தாரக மந்திரம். ஜெபி..
வெற்றியை வென்றெடு..

Thursday, May 9, 2013

பாபாவின் அறிவுரை

 ஏதேனும் உறவோ, தொடர்போ இல்லாவிடில் ஒருவரும் எங்கும் செல்வதில்லை. ஏதேனும் ஜீவராசிகளோ, மனிதர்களோ உங்களிடம் வர நேர்ந்தால் அவர்களைப் பண்பின்றி விரட்டிவிட வேண்டாம். அவர்களை நன்கு வரவேற்று உரிய மரியாதையுடன் நடத்துங்கள்


யாராவது உங்களிடம் பணம் கேட்டு உங்களுக்கு கொடுக்க மனமில்லாமல் இருந்தால் கொடுக்காதீர்கள்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...