சாயி மகராஜரே!
பலவிதமான நூல்களைப் படித்துவிட்டேன். வேதங்களின் சிகரமான உபநிஷத்துக்களையும்
மனப்பாடம் செய்துவிட்டேன்.
சத்தான சாஸ்திரங்களையும் புராணங்களையும் பிறர் சொல்லக்கேட்டுவிட்டேன். ஆயினும்
என் மனம் ஏக்கம் பிடித்தலைகிறது.
நான் படித்ததெல்லாம் வீண் என நினைக்கத் தோன்றுகிறது. ஓர் எழுத்தும் படிக்காத
பக்தியுள்ளவர், என்னைவிடச் சிறந்தவர் என்றே நினைக்கிறேன். நான் பலநூல்களைக்
கற்றதும், சாஸ்திரங்களைப் பரிசீலனை
செய்ததும் வீண். மனத்திற்கு சாந்தியளிக்காத அனைத்து புத்தக ஞானமும் வீணே.
ஜபம் செய்தும் மன அமைதி பிறக்க வில்லை எனில் ஜபம்
செய்து என்ன பிரயோஜனம்.
சாயி தரிசனம் மனக்கவலைகளை அகற்றி விடுகிறது என்றும்,
சாந்தியை அளிக்கிறது என்றும், இவை அனைத்தும் உல்லாசமான தமாஷ் பேச்சிலேயே
நடந்துவிடுகிறது என்றும், சாயி
மிகச் சுலபமாக பக்தர்களுக்கு நல்வழி காட்டுகிறார் என்றும் செவி வழிச்செய்தியாக
அறிந்தேன்.
ஆகவே, தவக்கடலான
சாயி மகராஜரே! உம்முடைய பாதங்களை நாடிப் பணிவுடன் வந்திருக்கிறேன். என் மனம் சஞ்சலமடையாமல்
நிலையான சாந்தியைப் பெற ஆசீர்வாதம் செய்யுங்கள். (சத் அத்21)
மகராஜரே! உம்முடைய கிருபையின் பலத்தால் நாங்கள் செய்த
வினைகளாலும், செய்யத் தவறிய வினைகளாலும்
பின்னிக்கொண்ட வலைகளை அறுத்தெறியுங்கள். தீனர்களையும் பலவீனர்களையும்
துக்கத்திலிருந்தும் வேதனையில் இருந்தும் விடுவித்து அருளுங்கள்.
நிர்மலமான சாயி ராயரே! தீங்கு விளைவிக்கும் வாக்குவாதங்களையும்
சர்ச்சைகளையும் உம்முடைய கருணையால் நிர்மூலமாக்கிவிடுங்கள். நாக்கு உமது நாமத்தை
உச்சரித்து நாமஜெபம் செய்வதிலேயே இனிமை காணட்டும்.
மனைவி, மக்கள்,
நண்பர்கள் கூட்டம் - கடைசிக்காலத்தில்
இவர்களில் யாராலும் எந்தப்பயனும் கிடைக்காது. நீர் மாத்திரமே கடைசிவரை கூட வரும்
துணைவர். உம்மால்தான் சுகத்தையும் முக்தியையும் அளிக்க இயலும்.
சங்கற்பங்களும் விகற்பங்களும் என் மனத்திலிருந்து
அழிந்து போகுமாறும், உடல் உற்றார்
உறவினர், சொத்து, சுகம், இவை அனைத்தையும் நான் அறவே மறந்து போகுமாறும் என்னுடைய இதயத்தில்
இறையன்பைப் பொங்கச் செய்வீராக.
மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்துபோகுமாறு உம்முடைய நாமஸ்மரணமே
எந்த நேரமும் மனத்தில் ஓடட்டும். என்னுடைய மனம் அலை பாய்வதையும் சபலத்தையும்
தொலைத்துவிட்டு சாந்தமாக ஒருமுகப்படட்டும்.
உங்களுடைய நிழலில் எங்களுக்கு இடம் கிடைத்தால் அஞ்ஞானமாகிய
இரவு மறைந்து போகும். உம்முடைய பிரகாசமான ஒளியில் சுகமாக வாழ்வதைவிட வேறு எதுவும்
எங்களுக்கு வேண்டாம்.
No comments:
Post a Comment