Monday, June 3, 2013
இறைவனை எளிதில் அடைய!
எப்படி பக்தி செய்தால் இறைவனை அடைய முடியும்? சாயியின் அனுக்கிரகத்தைப் பெறமுடியும்? சுலபமான வழியிருந்தால் சொல்லுங்களேன்.
(ஆர். காஞ்சனா, சென்னை)
நீங்கள் கேட்பதன் பொருள், எப்படி பக்தி செய்தால் இறைவனிடமிருந்து நன்மையைப்பெறுவது என்ற அர்த்தத்தில் என நினைக்கிறேன்.
எதையாவது எதிர்பார்த்து பக்தி செய்வது உகந்தது அல்ல. எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்வதே சிறந்தது. முயற்சிக்கலாம்.
இப்படியில்லாமல் ஆன்மீக ரீதியாக அவனை அடைவது என்ற அர்த்தத்தில் கேட்டால், எப்படி பக்தி செய்தாலும் இறைவனை அடையமுடியும்.
ஆனால் முழு மனதோடும், முழுமையான ஈடுபாட்டுடனும் பக்தி செலுத்தவேண்டும்.
பக்திக்கு கட்டுப்பாடோ, எல்லையோ, வேறு வித சட்டதிட்டங்களோ இல்லை. தூய மனம், ஆத்மார்த்தமான தொடர்பு இவையே தேவை.
காமத்தால் கோபிகையர், துவேக்ஷத்தால் சிசுபாலன், பயத்தால் கம்சன், உறவால் வ்ருக்ஷணி குலத்தார், நட்பால் பாண்டவர்கள், பக்தியால் ரிஷி முனிவர்கள் போன்றோர் இறைவனை அடைந்ததாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாராம்சம் என்னவெனில் நீங்கள் இறைவன் மீது எந்த மன
நிலையில் இருந்தாலும் அந்த நிலையிலேயேயும் இறைவனை தீவிரமாக நினைத்துக் கொண்டு இருப்பதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment