Sunday, June 2, 2013

ஸ்ரீ சாயி தரிசனம் மாத இதழ்





சாயி தரிசனத்தின் இனிய வாசகர்களே!
உங்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாதந்தோறும் சாயி தரிசனம் பத்திரிகை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இந்தப் பத்திரிகையின் ஒவ்வொரு வரிகளும் எங்களோடு பேசுகின்றன, எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கின்றன, புதிய வழியைக் காட்டி, சாயி மீது பக்தியை மேலும் வளர்க்க உதவுகின்றன என்று நீங்கள் சொல்லும் போதும், எழுதி அனுப்பும் போதும்; உண்மையிலேயே பாபாவுக்கு ஒரு சிறிய கருவியாக உங்களோடு இருப்பதற்காக பூரிப்பு கொள்கிறேன்.
தினந்தோறும் நு}ற்றுக்கணக்கான பக்தர்களோடு பேசவும், அவர்களுடைய நிறைகுறைகளைக் கேட்டு அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யவும் பாபா என்னைப் பணித்திருக்கிறார் போலும். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறிய பத்திரிகையாக இருந்த சாயி தரிசனம், இன்று பக்தர்களின் பேராதரவுடன் உலகநாடுகள் பலவற்றில் கிடைக்கிறது.
சமீபத்தில் துபாயில் உள்ள தமிழர்கள், பிரார்த்தனைக்கூட்டத்தை துபாயில் ஏற்பாடு செய்துவிட்டு, தொலைபேசி வாயிலாகப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.  ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சினைகளை போன் மூலம் கூற, நான் இங்கிருந்தபடி பிரார்த்தனை செய்ததை மற்றவர்கள் கேட்கும் வகையில் ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பி, பெருங்களத்தூரில் நடக்கும் பிரார்த்தனை போலவே அங்கு நடக்க ஏற்பாடு செய்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு திருமதி. ஜெயலட்சுமி அம்மையார் ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் புதிய முறை கூட்டுப் பிரார்த்தனை மீது வெளிநாட்டில் வாழ்கிற மக்கள்  வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்தது.
இது மட்டுமல்ல, இந்தப் பத்திரிகையை அவர்கள் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி, தாங்கள் செல்லும் நாடுகளில், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குத் தருவதும், அதன் மூலம் என்னைத் தொடர்பு கொள்வதும்,  சாயி தரிசனம் பத்திரிகையை பரப்புவதற்கு பாபா செய்துவரும்
அற்புதங்களாகும்.
இதேபோல, சீரடியில் சோட்டா பாபா ஆலயத்தை நிர்வகித்து வரும் பூஜ்ய மதன் பாபா, நம் தமிழ் மக்கள் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பின் காரணமாக, நமது பத்திரிகையை மாதந்தோறும் நு}ற்றுக் கணக்கில் வாங்கி இலவசமாக அங்கு வரும் தமிழர்களுக்குத் தந்து வருகிறார்.
பாண்டிச்சேரியில் பாபா மாஸ்டர் அருணாச்சலம் ஆசியோடு காலாப்பட்டு ஆலயத்தில் புதிதாக அமைந்துள்ள விற்பனைக் கூடத்தில் நான் எழுதிய அனைத்து புத்தகங்களையும் பக்தர்களுக்குக் கிடைக்கும் படி செய்து வருகிறார்கள். பாபா மாஸ்டரும் நு}ற்றுக்கணக்கான புத்தகங்களை மக்களுக்கு வாங்கித் தந்து சாயி தரிசனம் புத்தகத்தை வளர்த்து வருகிறhர்.
என்னோடு சீரடி யாத்திரைக்கு வந்த அன்பர் ஒருவர், இந்தப் பத்திரிகையினை பிறருக்கு அறிமுகப்படுத்துவதையே நான் சாயிக்கு செய்கிற சேவையாக நினைத்துச் செய்கிறேன் என்று கூறியபோது நான் வியந்துபோனேன்.
மடிப்பாக்கம் ஜெயச்சந்திரன், பாஸ்கரன் உட்பட இந்த சேவையைத் தொடர்வதற்காக நன்றிக்கடன்படுகிறேன். இப்படி, பாபாவால் உருவாக்கப்பட்டு, அவரது பக்தர்களாலும், அடியார்களாலும் வளர்க்கப்பட்டு வருவதால்தான் இந்தளவுக்கு உலக அளவில் பேசப்படும் நிலைக்கு நம் பத்திரிகை உயர்ந்துள்ளது. உங்கள் வாழ்வில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, பாபா உங்கள் மனதில் குடி கொண்டு நல்வழிப்படுத்த இந்தப்பத்திரிகை உதவுமாயின் அதுவே என் பிறவிப் பேறு 
                                   அன்புடன் ஆசிரியர்  சாயி வரதராஜன்


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...